Suhana Khan: ரகசிய காதலில் ஈடுபடும் ஷாருக்கான் மகள்.. அடிக்கடி அந்த ஆண் நண்பருடன் டேட்டிங் போறாராம்!
மும்பை: பாலிவுட்டின் முன்னணி நடிகர் ஷாருக்கானின் மகள் சுஹானா கான் சமீபத்தில் அறிமுகமான நிலையில், ஆண் நண்பன் ஒருவருடன் ரகசிய காதலில் ஈடுபட்டு வருவதாக புகைப்பட ஆதாரங்களுடன் தகவல்கள் கசிந்துள்ளன.
ஷாருக்கானின் மகன் ஆர்யன் கான் தடைசெய்யப்பட்ட போதைப்பொருள் பார்ட்டியில் பங்கேற்றதாக கிளம்பிய புகாரில் கைது செய்யப்பட்டார். அதன் பின்னர் தனது மகனை மீட்டு அவர் குற்றமற்றவர் என்பதை ஷாருக்கான் நிரூபித்தார் . இயக்குநராகப் போவதாக அறிவித்துள்ள ஆர்யன் கான் அதற்காக தயாராகி வருகிறார்.

அமெரிக்காவில் நடிப்பு பள்ளியில் பயிற்சி பெற்ற சுஹானா கான் ஆர்ச்சில்லிஸ் எனும் நெட்பிளிக்ஸ் தயாரிப்பு படத்தில் நடித்திருந்தார். அடுத்ததாக அப்பா ஷாருக்கான் உடன் இணைந்து ஒரு படத்தில் நடிக்கவும் போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
பாலிவுட் பாட்ஷா: இந்திய சினிமாவில் உச்ச நடிகராக ஹாலிவுட் நடிகர் ஷாருக்கான் வலம் வருகிறார். கடந்தாண்டு அவர் நடிப்பில் வெளியான ஜவான், பத்தாம் மற்றும் டன்கி என மூன்று படங்களும் மிகப்பெரிய வெற்றி படங்களாக மாறின. ஒரே வருடத்தில் ஹாட்ரிக் அடித்த ஷாருக்கான் 2600 கோடி ரூபாய் வசூலை பாலிவுட்டுக்கு கடந்த ஆண்டு பெற்றுத் தந்தார். அமீர்கான், சல்மான்கான் மற்றும் அக்ஷய் குமார் உள்ளிட்ட நடிகர்கள் ஷாருக்கான் அருகே கூட நெருங்க முடியவில்லை.
மகளுக்காக 200 கோடி: அமெரிக்காவில் நடிப்புப் பயிற்சியை பெற்று வந்த சுஹானா கான் நெட்பிளிக்ஸில் வெளியான ஆர்ச்சிலிஸ் படத்தில் நடித்திருந்தார். அடுத்ததாக ஷாருக்கான் உடன் இணைந்து 'தி கிங்' எனும் படத்தில் சுஹானா கான் கேங்ஸ்டராக நடிக்கிறார். அந்த படத்தில் மெயின் லீடே சுஹானா கான் தானாம். தனது மகளுக்காக 200 கோடி செலவில் இந்த படத்தை பிரம்மாண்டமாக தயாரித்து வருகிறார் ஷாருக்கான்.
அமிதாப் பேரனுடன் டேட்டிங்: அமிதாப் பச்சன் பேரன் அகஸ்தியா நந்தாவுடன் லண்டனில் தொடர்ந்து அடிக்கடி டேட்டிங்கில் ஈடுபட்டு வருகிறார் சுஹானா கான் என கிசுகிசுக்கள் கிளம்பியுள்ளன. அடிக்கடி இவர்கள் இருவரும் மட்டும் ரகசிய சந்திப்பை நடத்தி வரும் நிலையில், சில புகைப்படங்களும் லீக் ஆகியுள்ளன.
லவ் பண்றாங்களா?: சுஹானா கான் மற்றும் அகஸ்தியா நந்தா இருவருமே காதலித்து வருவதாகவே பாலிவுட் வட்டாரத்தில் தொடர்ந்து தகவல்கள் வெளியாகி வருகின்றன. ஆனால், இதுவரை தங்கள் காதல் குறித்து இருவரும் வெளிப்படையாக அறிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











