அண்ணன் வீடு திரும்பியதால் குஷியான சுஹானா கான்... கிளாமர் போட்டோவை ஷேர் செய்து கொண்டாட்டம்!

மும்பை: அண்ணன் வீடு திரும்பியதால் சுஹானா கான் மீண்டும் இன்ஸ்டாவை தெறிக்கவிட்டு வருகிறார்.

ஷாருக்கானின் மகனான ஆர்யன் கான் சொகுசுக்கப்பலில் போதைப் பொருள் பயன்படுத்திய வழக்கில் கடந்த அக்டோபர் 3ம் தேதி கைது செய்யப்பட்டார்.

அவரது வாட்ஸ் அப் சாட்டுகள் முக்கிய ஆதாரமாக எடுத்துக்கொள்ளப்பட்டது. இதைத்தொடர்ந்து, தனக்கு ஜாமீன் கோரி ஆர்யன் கான் சிறப்பு என்டிபிஎஸ் நீதிமன்றத்தில் இரண்டு முறை மனு தாக்கல் செய்தார்.

கடும் நிபந்தனைகள்

கடும் நிபந்தனைகள்

இந்த இரண்டு மனுக்களும் நிராகரிக்கப்பட்டது. இதனால் ஆர்யன் கான் மும்பை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். இதுகுறித்து விசாரணை நடத்திய உயர் நீதிமன்றம், ஆர்யன் கானுக்கு கடுமையான நிபந்தனைகளுடன் கூடிய ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது.

பெயிலில் வந்த ஆர்யன் கான்

பெயிலில் வந்த ஆர்யன் கான்

இதனை தொடர்ந்து மும்பை ஆர்தர் சாலை சிறையில் இருந்து ஆர்யன் கான் கடந்த 30 ஆம் தேதி வெளியே வந்தார். ஆர்யன் சிறையில் அடைக்கப்பட்டதால் அவரது குடும்பத்தினர் பெரும் சோகத்தில் ஆழ்திருந்தனர். ஷாருக் கான் அவரது படப்பிடிப்புகள் அனைத்தையும் ரத்த செய்தார்.

இன்ஸ்டா பக்கமே வரவில்லை

இன்ஸ்டா பக்கமே வரவில்லை

ஷாருக்கானின் மனைவி கவுரி கான் தனது மகன் வீடு திரும்பும் வரை வீட்டில் இனிப்புகளே செய்யக்கூடாது என சமையல்காரர்களுக்கு உத்தரவிட்டிருந்தார். இதேபோல் ஷாருக் கானின் மகள் சுஹானா கானும் இன்ஸ்டா பக்கமே திரும்பாமல் இருந்தார்.

கிளாமர் போட்டோ

கிளாமர் போட்டோ

சமூக வலைதளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் சுஹானா கான், அக்டோபர் 3ஆம் தேதி தனது தாயின் பிறந்த நாளை முன்னிட்டு அவருக்கு வாழ்த்து தெரிவித்திருந்தார். இந்நிலையில் நீண்ட இடைவெளிக்கு பிறகு மீண்டும் இன்ஸ்டாகிராம் வந்துள்ள நடிகை சுஹானா கான், தற்போது ஒரு கிளாமர் போட்டோவை ஷேர் செய்துள்ளார்.

தோழியை கட்டிப்பிடித்து

தோழியை கட்டிப்பிடித்து

ஆர்யன் தங்களின் மன்னத் இல்லத்திற்கு திரும்பியதை தொடர்ந்து வீட்டில் கோலாகல பார்ட்டிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் சுஹானாவின் தோழிகளும் பங்கேற்றனர். அப்போது சுஹானா தனது தோழி ஒருவரை கட்டிப்பிடித்திருக்கும் போட்டோவை தனது இன்ஸ்டா பக்கத்தில் ஷேர் செய்துள்ளார்.

கிளாமர் போட்டோ

கிளாமர் போட்டோ


இந்த போட்டோவில் நீல நிற கிளாமரான உடையை அணிந்துள்ளார் சுஹானா. அவரது இந்த போட்டோ இணையத்தில் வைரலாகி வருகிறது. மேலும் இந்த போட்டோவுக்கு லைக்ஸ்களும் குவிந்து வருகிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X