ஒரே ஆடையை மறுமுறை அணிந்த ஆலியா பட்... நெகிழ்ந்து பாராட்டிய ஷாருக்கானின் மகள்!
மும்பை: ஒரே ஆடையை மறுமுறை அணிந்து வந்த பாலிவுட் நடிகை ஆலியா பட்டின் செயலை ஷாருக்கானின் மகள் நெகிழ்ந்து பாராட்டி உள்ளார்.
பாலிவுட் பாட்ஷா என ரசிகர்கள் ஷாருக்கானை செல்லமாக அழைத்து வருகின்றனர் இவருக்கு இந்தியாவில் மட்டுமில்லாமல், உலகளவில் ஏராளமான ரசிகர்கள் இருக்கிறார்கள்.

நடிகர் ஷாருக்கான் ரசிகர்களுக்கு பிடித்த மாதிரி கதைகளை தேர்வு செய்து நடித்து வருகிறார். அண்மையில் இவரது நடிப்பில் ஜவான் திரைப்படம் வெளியாகி சக்கைபோடு போட்டது.
சுஹானா கான்: நடிகர் ஷாருக்கானின் மகள் சுஹானா கான் ஆர்ச்சிஸ் திரைப்படத்தின் மூலம் பாலிவுட்டில் அறிமுகமாக உள்ளார். இந்தப் படத்தில் நடிகர் அமிதாப் பச்சனின் பேரன் அக்ஸ்த்யா நந்தா, போனி கபூரின் மற்றொரு மகளான குஷி கபூர் என அடுத்த தலைமுறை வாரிசுகளும் அறிமுகமாக உள்ளனர்.
சினிமாவில் அறிமுகம்: மேலும் புதுமுகங்கள் வேதாந்தா ரெய்னா, மிஹிர் அஹூஜா ஆகியோரும் இப்படத்தில் நடித்துள்ளனர். 1960களில் நடக்கும் ம்யூசிக்கல் படமாக உருவாகும் இந்தப் படம் டிசம்பர் 7ந்தேதி நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் வெளியாக உள்ளது. கல்லி பாய் உள்ளிட்ட படங்களை எடுத்த பாலிவுட்டின் பிரபல இயக்குநர் ஜோயா அக்தர் இந்தப் படத்தை இயக்கி வருகிறார்.
பாராட்டிய சுஹானா கான்: இப்படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சியில், நடிகை சுஹானா கானிடம் நடிகை ஆலியாபட் தேசிய விருது வழங்கும் விழாவில் தனது திருமண உடையை அணிந்திருந்தது குறித்துத் கேள்வி எழுப்பட்டது. அதற்கு சுஹானா, புதிய உடைகளை தயாரிக்கும் பொழுது எவ்வளவு கழிவுகள் வெளியாகுகிறது என்பதை நாம் உணர்வதில்லை. ஆலியாவின் முன்னெடுப்பு சுற்றுச்சூழல் பாதிப்பை தடுக்கும் விதமாக இருந்தது.
தேசிய விருது விழாவில்: சமூகத்தில் மிகப்பெரிய இடத்தில் இருக்கும் ஆலியா பட் ஏற்கனவே அணிந்திருந்த உடையை மீண்டும் அணியும்போது நாமும் அதனை பின்பற்றி ஏற்கனவே அணிந்த உடையை அணிய முற்பட வேண்டும் என்றார். நடிகை ஆலியா பட் கங்குபாய் கத்தியவாடியாக சிறப்பாக நடித்ததற்கு அவருக்கு சிறந்த நடிகைக்கான தேசிய விருது கொடுக்கப்பட்ட போது, தனது திருமணத்தில் அணிந்த சேலையை அணிந்து வந்திருந்தார்.


Click it and Unblock the Notifications