3 குழந்தைகள் முன்னிலையில் திருமணம் செய்துக் கொண்ட சன்னி லியோன்.. மணமகள் காஸ்ட்யூம் தான் வேறலெவல்!
மும்பை: நடிகை சன்னி லியோன் 43 வயதில் மீண்டும் திருமணம் செய்துக் கொண்ட புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு ரசிகர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளார். ஆபாச நடிகையாக ஒரு காலத்தில் அந்த மாதிரியான பிட்டு படங்களில் நடித்து உலகளவில் ஃபேமஸ் ஆனவர் தான் சன்னி லியோன் என்பது அனைவரும் அறிந்த ஒன்று தான்.
ஆனால், அந்த தொழில் பிடிக்காமல் ஒரு கட்டத்துக்கு மேல், தனக்கான அங்கீகாரம் வேண்டும் என நினைத்த சன்னி லியோன் மும்பைக்கு வந்து செட்டிலான நிலையில், இந்தி படங்களில் கவர்ச்சி நடிகையாக நடிக்க ஆரம்பித்தார். தற்போது தென்னிந்திய படங்களில் ஆக்ஷன் ஹீரோயினாகவும் வலம் வருகிறார்.

டேனியல் வெப்பர் என்பவரை திருமணம் செய்துக் கொண்டு 3 குழந்தைகளுக்கு தாயாக உள்ள சன்னி லியோன் மீண்டும் திருமணம் செய்துக் கொண்ட போட்டோக்களை வெளியிட்டு ரசிகர்கள் மற்றும் பிரபலங்களின் வாழ்த்துகளை பெற்று வருகிறார்.
சன்னி லியோன் மீண்டும் திருமணம்: கடந்த 2011ம் ஆண்டு டேனியல் வெப்பர் என்பவரை நடிகை சன்னி லியோன் திருமணம் செய்துக் கொண்டார். நிஷா கவுர் எனும் பெண் குழந்தையை தத்தெடுத்து வளர்த்து வந்தார். அதன் பின்னர், வாடகைத் தாய் மூலமாக கடந்த 2018ம் ஆண்டு இரு ஆண்குழந்தைகளுக்கு தாயானார். மூன்று குழந்தைகளையும் வளர்த்து வரும் நடிகை சன்னி லியோன் மீண்டும் திருமணம் செய்துக் கொண்ட புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.
குழந்தைகள் முன்னிலையில் திருமணம்: 2011ம் ஆண்டு டேனியல் வெப்பரை திருமணம் செய்யும் போது தனது 3 குழந்தைகளும் இல்லை. ஆனால், தற்போது 3 குழந்தைகள் முன்னிலையில் என் அன்பான கணவர் டேனியல் வெப்பரை மீண்டும் திருமணம் செய்து கொள்வதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன். இது எனக்கு பிடித்த ட்ரீம் வெட்டிங் என சன்னி லியோன் கூறியுள்ளார்.
கவர்ச்சி கவுன்: மணமகள் உடையில் கவர்ச்சிகரமான கவுனை அணிந்துக் கொண்டு தனது கணவர் டேனியல் வெப்பருடன் போஸ் கொடுத்து திருமணம் செய்துக் கொண்ட புகைப்படங்களை நடிகை சன்னி லியோன் வெளியிட்டுள்ளார். திருமணமாகி இத்தனை ஆண்டுகள் ஆனால், பிரபலங்கள் வழக்கமாக விவாகரத்து தான் செய்வார்கள். நீங்க என்னம்மா புதுசா மீண்டும் அதே கணவரை திருமணம் பண்றீங்க என நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











