Shah rukh khan: ஷாருக்கானுடன் மீண்டும் இணையும் அனிருத்.. அட படத்துல இவங்களும் இருக்காங்களா!
மும்பை: நடிகர் ஷாருக்கான் நடிப்பில் கடந்த ஆண்டில் வெளியான அடுத்தடுத்து மூன்று படங்கள் அவருக்கு ஹாட்ரிக் வெற்றியை கொடுத்து கடந்த ஆண்டை அவருக்கு மறக்க முடியாத ஆண்டாக மாற்றி உள்ளன. இந்நிலையில் அவரது அடுத்தப் படம் குறித்த கேள்விகள் ரசிகர்களிடையே இருந்து வந்தன. இந்நிலையில் அவர் அடுத்ததாக கிங் என்ற படத்தில் நடிக்க உள்ளதாக கூறப்பட்டுள்ளது.
இயக்குனர் சுஜாய் கோஷ் கைவண்ணத்தில் இந்த படம் உருவாகவுள்ள சூழல் படத்தில் அவரது மகள் சுஹான் கான் படத்தில் இணைந்துள்ளார். அவருக்கு மிகவும் அழுத்தமான கேரக்டர் அமைந்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. இந்தப் படத்தில் கொடூரமான டானாக, நெகட்டிவ் ஷேடில் ஷாருக்கான் நடிக்கவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த படத்தின் இசையமைப்பாளர் குறித்த அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது.

நடிகர் ஷாருக்கான்: நடிகர் ஷாருக்கானின் நடிப்பில் கடந்த ஆண்டில் அடுத்தடுத்து மூன்று படங்கள் ரிலீசாகி ஹாட்ரிக் வெற்றியை கொடுத்துள்ளன. கடந்த ஜனவரியில் வெளியான பதான், செப்டம்பர் மாதத்தில் வெளியான ஜவான் மற்றும் டிசம்பர் மாதத்தில் வெளியான டங்கி படங்கள் அவருக்கு விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் சிறப்பாக கைக் கொடுத்தன. இந்த படங்களை தொடர்ந்து அடுத்ததாக ஷாருக்கின் அடுத்தப் படம் குறித்து ரசிகர்கள் கேள்வி எழுப்பி வந்தனர். இந்நிலையில் அவரது ரெட் சில்லீஸ் என்டர்டெயின்மெண்ட் நிறுவனத்தின் சார்பில் கிங் என்ற படத்தில் ஷாருக்கான் நடிக்கவுள்ளார்.
ஷாருக்கானுடன் இணையும் அவரது மகள்: இந்தப் படத்தின் சூட்டிங் முன்னதாக மே மாதத்திலேயே துவங்கவுள்ளதாக கூறப்பட்டது. ஆனால் முன் தயாரிப்பு பணிகளுக்கு காலதாமதம் ஏற்பட்டுள்ளதால் இந்த படத்தின் சூட்டிங் தற்போது ஆகஸ்ட் மாதத்திற்கு தள்ளிப் போயுள்ளது. இந்தப் படத்தை பிரபல இயக்குநர் சுஜாய் ஜோஷ் இயக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தில் ஷாருக்கானின் மகள் சுஹான் கான் முக்கியமான கேரக்டரில் நடிக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக ஓடிடியில் வெளியான தி ஆர்ச்சிஸ் படத்தில் சுஹான் கான் நடித்துள்ள சூழலில் வெள்ளித்திரையிலும் கிங் படம் மூலம் அவர் களமிறங்கவுள்ளார்.
ஷாருக்கான் -அனிருத் கூட்டணி: இந்தப் படத்தில் தன்னுடைய அப்பாவுடன் அவர் முதல் முறையாக இணைந்து நடிக்கவுள்ளது பாலிவுட்டில் மிகப்பெரிய அளவில் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் இந்தப் படம் பான் இந்தியா படமாக உருவாக உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. இந்தப் படத்தில் கொடூரமான டானாக ஷாருக்கான் நெகட்டிவ் ஷேடில் நடிக்கவுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனிடையே இந்தப் படத்தில் பிரபல இசையமைப்பாளர் அனிருத் இணையவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஜவான் படத்தில் ஷாருக்கான் -அனிருத் கூட்டணி மாஸ் காட்டிய சூழலில் இரண்டாவது முறையாக ஷாருக்கானுடன் அனிருத் இணையவுள்ளார்.

கேங்ஸ்டர் கதைக்களத்தில் கிங் படம்: ஜவான் படத்தின் இசை இந்திய அளவில் அனைத்து ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்தது. குறிப்பாக வட இந்திய ரசிகர்கள் இந்த படத்தின் இசை மற்றும் பிஜிஎம்ஐ சிறப்பாக கொண்டாடினர். இந்நிலையில் ஷாருக்கானுடன் கிங் படம் மூலம் அனிருத் மீண்டும் இணையவுள்ளது ரசிகர்களுக்கு மிகப்பெரிய அளவில் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. கேங்ஸ்டர் கதைக்களத்தில் உருவாகவுள்ள இந்தப் படத்தில் ஷாருக்கான் தன்னுடைய மகளுக்கு வழிகாட்டியாக நடிக்கவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. கடந்த ஆண்டில் ஷாருக்கான் தயாரிப்பில் வெளியான ஜவான் படம் 1100 கோடிகளை தாண்டி வசூலித்திருந்தது. தற்போது உருவாகவுள்ள கிங் படம் மிகவும் பிரம்மாண்டமாக 200 கோடி ரூபாய் செலவில் உருவாக உள்ளதாக கூறப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications











