நான் எந்த தப்பும் செய்யல.. ஆபாச பட விவகாரத்தில் ஜாமின் கிடைத்த சந்தோஷத்தில் பிரபல நடிகை பதிவு!

மும்பை: ஆபாச பட விவகாரத்தில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள பிரபல கவர்ச்சி நடிகை கெஹனா வசிஸ்த்தை கைது செய்யக் கூடாது என உச்சநீதிமன்றம் நேற்று இடைக்கால தடை விதித்தது.

உச்சநீதிமன்றத்தின் உத்தரவை அடுத்து சந்தோஷப்பட்ட நடிகை கெஹானா வசிஸ்த் தனது இன்ஸ்டாகிராம் போஸ்ட்டில் "நான் எந்த தப்பும் செய்யல" என்றும் "நீதி வென்றது" என்றும் போஸ்ட் போட்டு வைரலாக்கி வருகிறார்.

ஷில்பா ஷெட்டியின் கணவர் ராஜ் குந்த்ராவுக்கும் சமீபத்தில் ஜாமின் கிடைத்த நிலையில், நடிகை கெஹனா வசிஸ்த்தையும் கைது செய்ய தடை விதித்துள்ளது உச்சநீதிமன்றம்.

நிர்வாணமாக

நிர்வாணமாக

2012ம் ஆண்டு நடைபெற்ற மிஸ் ஆசியா பிகினி அழகிப் போட்டியில் கலந்து கொண்டு பட்டம் வென்றவர் கெஹனா வசிஸ்த். டாப்லெஸ் ஆகவும் நிர்வாணமாகவும் ஏகப்பட்ட போல்ட் போட்டோஷூட்களை நடத்திய இவர் நிர்வாணமாக ஏகப்பட்ட வீடியோக்களிலும் நடித்துள்ளார்.

பேய்கள் ஜாக்கிரதை

பேய்கள் ஜாக்கிரதை

தமிழில் வெளியான பேய்கள் ஜாக்கிரதை படத்தில் இடம்பெற்ற ஐட்டம் பாடல் ஒன்றுக்கு நடனமாடியுள்ளார் கெஹனா வசிஸ்த். தெலுங்கில் ஆப்பரேஷன் துரியோதனா படத்திலும் ஐட்டம் பாடல் ஒன்றுக்கு நடனமாடி உள்ளார். தெலுங்கு மற்றும் இந்தியில் ஏகப்பட்ட படங்களில் கவர்ச்சி நடிகையாக நடித்துள்ளார்.

ஆபாச பட விவகாரத்தில் கைது

ஆபாச பட விவகாரத்தில் கைது

இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் ஆபாச படங்களில் நடித்ததாக நடிகை கெஹனா வசிஸ்த் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். ஜூன் மாதம் தான் அவருக்கு ஜாமின் கிடைத்து வெளியே வந்தார். ராஜ் குந்த்ரா நிறுவனம் தயாரித்த 87க்கும் மேற்பட்ட ஆபாச படங்களில் இவர் நடித்ததாக குற்றம்சாட்டப்பட்டுள்ளார்.

இளம்பெண்களை கட்டாயப்படுத்தி

இளம்பெண்களை கட்டாயப்படுத்தி

ஆபாச படங்களில் நடித்தது மட்டுமின்றி மாடலிங் துறையில் ஈடுபட்டு வரும் இளம் பெண்களுக்கு பாலிவுட்டில் பட வாய்ப்புகளை பெற்றுத் தருவதாக ஏமாற்றி வலுகட்டாயப்படுத்தி ஆபாச படங்களில் நடிக்க வைத்ததாக இவர் மீது பகீர் புகார் கிளம்பிய நிலையில் தான் கெஹனா வசிஸ்த் கைது செய்யப்பட்டார்.

ராஜ் குந்த்ரா கைது

ராஜ் குந்த்ரா கைது

சமீபத்தில் ஆபாச பட விவகாரத்தில் ஷில்பா ஷெட்டியின் கணவர் ராஜ் குந்த்ரா கைது செய்யப்பட்ட நிலையில், நடிகை கெஹனா வசிஸ்த்தையும் போலீசார் மீண்டும் கைது செய்யப் போவதாக தகவல்கள் வெளியாகின. இந்நிலையில், தன்னை கைது செய்யக் கூடாது என உச்சநீதிமன்றத்தில் முன் ஜாமின் கோரி மனு அளித்திருந்தார் கெஹனா வசிஸ்த்

உச்சநீதிமன்றம் உத்தரவு

உச்சநீதிமன்றம் உத்தரவு

இந்நிலையில், நேற்று (செப். 22) உச்சநீதிமன்றம் நடிகை கெஹனா வசிஸ்த்தின் மனுவை விசாரித்த நிலையில், அவரை போலீசார் கைது செய்யக் கூடாது என இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டது. மேலும், போலீசார் அழைக்கும் போது விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்கிற நிபந்தனையும் விதிக்கப்பட்டது.

இன்று ஆஜர்

இன்று ஆஜர்

உச்சநீதிமன்றத்தின் உத்தரவை அடுத்து இன்று மும்பை குற்றவியல் போலீசார் விசாரணைக்காக ஆஜராகப் போவதாக நடிகை கெஹனா வசிஸ்த் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அறிவித்துள்ளார். மேலும், தான் எந்த தப்பும் செய்யவில்லை என்றும் நிச்சயம் இந்த விவகாரத்தில் இருந்து தான் மீண்டு வருவேன் என்றும் கூறியுள்ளார்.

தர்மம் வெல்லும்

தர்மம் வெல்லும்

இதுவரை தான் யாரையும் ஏமாற்றவில்லை. எந்த தப்பும் செய்யவில்லை. நிச்சயம் தர்மம் கடைசியில் வெல்லும் என எனக்கு நன்றாகவே தெரியும். உச்சநீதிமன்ற உத்தரவு எனக்கு மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. நான் செய்வது தவறு இல்லை என்பதை புரிந்து கொண்டேன். இனியும் எந்த தவறையும் செய்ய மாட்டேன் என கெஹனா வசிஸ்த் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளது வைரலாகி வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X