Dhoom 4: ஷாருக்கானுக்கு வில்லனாகும் சூர்யா?.. தூம் 4 படம் பற்றி கசிந்த தகவல்.. ரோலக்ஸ் சார்!

மும்பை: நடிகர் சூர்யா ஷாருக்கான் நடிக்கவுள்ள தூம் 4 படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் இணையப் போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் நடித்து வெளியான ஜவான் படத்தில் விஜய் சேதுபதி வில்லனாகவும் நயன்தாரா ஹீரோயினாகவும் நடித்திருந்தார்.

தொடர்ந்து பாலிவுட் நடிகர்கள் தென்னிந்திய சினிமா மற்றும் சினிமா பிரபலங்களை குறிவைத்து வரும் நிலையில், ஷாருக்கானும் தனது படங்களில் தென்னிந்திய பிரபலங்களில் இணைந்துக் கொண்டு பான் இந்தியா அளவில் பாக்ஸ் ஆபிஸில் மாஸ் காட்டி வருகிறார்.

suriya dhoom 4 shah rukh khan 4

அக்‌ஷய் குமாரை வைத்து இந்தியில் சூர்யா சூரரைப் போற்று படத்தை சர்ஃபிரா எனும் பெயரில் தயாரித்த நிலையில், தொடர்ந்து இந்தி படங்களிலும் நடிக்க முயற்சி செய்து வருகிறார். இந்நிலையில், இப்படியொரு அசத்தலான அப்டேட் வெளியாகி சூர்யா ரசிகர்களை சந்தோஷத்தில் ஆழ்த்தியுள்ளது.

கமலுக்கே வில்லன்: லோகேஷ் கனகராஜின் எல்சியூ படமான விக்ரம் படத்தில் கமலுக்கு வில்லனாக விஜய் சேதுபதி நடித்திருந்தார். அந்த படத்தின் கிளைமேக்ஸில் ரோலக்ஸ் கதாபாத்திரத்தில் அடுத்த பாகத்துக்கான லீடுடன் சூர்யா தெறி வில்லனாக களமிறங்கியிருந்தார். இந்நிலையில், கமலுக்கே வில்லனாக நடித்து விட்ட சூர்யா அடுத்ததாக ஷாருக்கானுக்கும் வில்லனாக நடிக்கப் போகிறாரா என்கிற கேள்விகள் எழுந்துள்ளன.

suriya dhoom 4 shah rukh khan 4

ஒதுங்கிய விஜய் சேதுபதி: ஜவான் படத்தில் ஷாருக்கானுக்கு வில்லனாக நடித்த விஜய் சேதுபதி இனிமேல் மற்ற ஹீரோ படங்களில் வில்லனாக நடிக்கப் போவதில்லை என்றும் மகாராஜா வெற்றிக்குப் பிறகு தனது முடிவை மாற்றிக் கொண்ட நிலையில் ஷாருக்கான் அடுத்து தமிழில் இருந்து யாரை கொண்டு வரலாம் என நினைத்த நிலையில் சூர்யாவை டிக் செய்திருப்பதாக கூறுகின்றனர்.

இந்தியில் ஜோதிகா: நடிகை ஜோதிகா தமிழில் 36 வயதினிலே படத்தின் மூலம் கம்பேக் கொடுத்தாலும் இங்கே அவருக்கு பெரிதளவில் அங்கீகாரம் கிடைக்கவில்லை. மலையாளத்தில் மம்மூட்டியுடன் இணைந்து நடித்த காதல் தி கோர், இந்த ஆண்டு இந்தியில் அஜய் தேவ்கனுக்கு மனைவியாக நடித்த சைத்தான் உள்ளிட்ட படங்கள் மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற நிலையில், தொடர்ந்து இந்தியில் அவருக்கு பட வாய்ப்புகள் குவிந்து வருவதாக கூறுகின்றனர். சூர்யாவும் இந்தி படங்களில் அதிகமாக ஆர்வம் செலுத்தி வருகிறார் என்றும் கூறுகின்றனர்.

suriya dhoom 4 shah rukh khan 4

மிஸ்ஸான கர்ணன்: மெகா பட்ஜெட்டில் கர்ணன் எனும் படத்தில் சூர்யா இந்தியில் நடிக்கப் போவதாக கூறப்பட்டது. ஆனால், அந்த படம் அப்படியே டிராப்பான நிலையில், சர்ஃபிரா படத்தில் கேமியோ ரோலில் மட்டும் சூர்யா நடித்திருந்தார். இந்தி சூரரைப் போற்று படத்தை சுதா கொங்கராவே இயக்கிய நிலையிலும் அக்‌ஷய் குமாருக்கு அந்த படம் கை கொடுக்கவில்லை.

தூம் 4: பாலிவுட் ரசிகர்களின் ஆல் டைம் ஃபேவரைட் படங்களான தூம் சீரியஸில் இந்த முறை ஷாருக்கான் இணையப் போவதாக கூறுகின்றனர். இந்நிலையில், ஷாருக்கான் மற்றும் அபிஷேக் பச்சன் உடன் இணைந்து சூர்யாவும் நடிக்கப் போகிறார் என்றும் கடைசி கட்ட பேச்சுவார்த்தைகள் ஓடிக் கொண்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ஷாருக்கான் உடன் இணைந்து சூர்யா நடித்தால் படம் வேறலெவலில் இருக்கும் என்றும் இந்தியிலும் சூர்யாவுக்கு பெரிய மார்க்கெட் ஓபனாகும் என்றும் கூறுகின்றனர். சூர்யாவின் கங்குவா திரைப்படம் வெளியாகி இந்தியிலும் வெற்றிப் பெற்றால், அதுவும் தூம் 4 படத்தின் வெற்றிக்கு உறுதுணையாக இருக்கும் என்கின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X