சூர்யா, சுதா கொங்கராவை நம்பி நொந்து நூடுல்ஸ் ஆன அக்‌ஷய் குமார்.. 15 ஆண்டுகளில் இல்லாத மோசமான வசூல்!

மும்பை: கடைசியாக வெளியாகி படுதோல்வியை சந்தித்த அக்‌ஷய் குமாரின் 'படே மியான் சோட்டே மியான்' படம் கூட முதல் நாளில் 16.07 கோடி ரூபாய் வசூலை ஈட்டியது. ஆனால், நேற்று வெளியான சூரரைப் போற்று படத்தின் இந்தி ரீமேக் 15 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு படுமோசமான ஓபனிங்கை அக்‌ஷய் குமாருக்கு பெற்றுத் தந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சூரரைப் போற்று திரைப்படம் தமிழில் தியேட்டர்களில் வெளியாகாமல் ஓடிடியில் நேரடியாக அமேசான் பிரைமில் வெளியானது. இந்நிலையில், அந்த படத்தை பாலிவுட்டில் சுதா கொங்கரா இயக்கத்தில் அக்‌ஷய் குமாரை வைத்து சூர்யா தயாரித்து இருந்தார்.

Suriya s Soorarai Pottru Hindi Remake Sarfira big flop at Box Office

சர்ஃபிரா எனும் டைட்டிலில் வெளியான இந்தி படத்தில் சூர்யா கேமியோ ரோலில் எல்லாம் நடித்திருந்தார். ஆனால், படம் எதிர்பார்த்த அளவுக்கு மட்டுமில்லை கொஞ்சம் கூட ஓடாமல் படுதோல்வியை சந்தித்துள்ளது.

சறுக்கிய சர்ஃபிரா: சூரரைப் போற்று படத்தின் இந்தி ரீமேக்கை சுதா கொங்கரா நினைத்த அளவுக்கு உருவாக்கவில்லை. அது தெரிந்த நிலையில், படத்திற்கான புரமோஷனுக்கு பெரிதாக சூர்யா எந்தவொரு செலவும் செய்யாமல் அப்படியே படத்தை ரிலீஸ் செய்து விட்டார். அக்‌ஷய் குமாருக்கு இந்த படமாவது கம்பேக் கொடுக்கும் என எதிர்பார்த்த நிலையில், ஒட்டுமொத்த சோலியையும் முடித்து விட்டது.

முதல் நாள் வசூல்: சூர்யா மற்றும் ஜோதிகா இணைந்து தயாரித்த சர்ஃபிரா திரைப்படத்தில் அக்‌ஷய் குமார் மற்றும் ராதிகா மதன் நடித்திருந்தனர். சுதா கொங்கரா இயக்கத்தில் ஜி.வி. பிரகாஷ் இசையில் உருவான சர்ஃபிரா திரைப்படம் முதல் நாளில் இந்தியளவில் வெறும் 2.40 கோடி ரூபாய் வசூலை ஈட்டியுள்ளது. கோலிவுட்டில் அறிமுக நடிகர்களின் படங்களே இதற்கு மேல் வசூல் செய்யும் என்கின்றனர்.

15 ஆண்டுகளில் இல்லாத மோசமான ஓபனிங்: கடைசியாக 300 கோடி பட்ஜெட்டில் வெளியான படே மியான் சோட்டே மியான் திரைப்படம் அதிகபட்சமாக 59 கோடி ரூபாய் வசூலை லைஃப் டைமாக பெற்றது. கடந்த பல ஆண்டுகளில் அக்‌ஷய் குமார் நடித்த சூர்யவன்ஷி மற்றும் OMG2 படங்கள் மட்டுமே ஓரளவுக்கு வெற்றியைப் பெற்றன. மற்ற பல படங்கள் தோல்வியை தழுவின.

அதிலும், அவர் கோலிவுட் படங்களை நம்பி ரீமேக் செய்து மிகப்பெரிய சரிவை தனது சினிமா வாழ்க்கையில் சந்தித்துள்ளார். ஜிகர்தண்டா ரீமேக் வச்சு செய்ததை தொடர்ந்து சூரரைப் போற்று படத்தின் ரீமேக்கும் அக்‌ஷய் குமாரை அப்செட் ஆக்கியது. அடுத்து அவர் எந்த படத்தில் நடித்து எப்போது எப்படி ஹிட் கொடுக்கப் போகிறார் என்பதே பாலிவுட் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய கேள்விக்குறியாக உள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X