சுஷாந்தை கொன்று நீலிக்கண்ணீர் வடிக்கிறீர்கள்.. ஆலியா பட் கரண் ஜோகரை திட்டித்தீர்க்கும் நெட்டிசன்கள்!

மும்பை : மன அழுத்தத்தால் தற்கொலைக்கு ஆளான நடிகர் சுஷாந்தின் மரணத்திற்கு ஆலியா பட் மற்றும் கரண் ஜோகரும் ஒரு காரணம் என நெட்டிசன்களால் அவர்கள் இருவரும் வறுத்தெடுக்கபட்டு வருகின்றனர்.

Recommended Video

Sushant Singh Rajput Last Rites Video | இறுதி சடங்கில் பாலிவுட் பிரபலங்கள்

சுஷாந்த் சிங் ராஜ்புத் அப்படி ஒருத்தர் இருக்காரா, எனக்கு யாருன்னே தெரியாது என்பது போல சொல்லிவிட்டு இப்பொழுது நீலிக்கண்ணீர் வடிப்பதாக அனைவரிடமும் மாட்டிக்கொண்டு முழிக்கும் ஆலியா பட் மற்றும் கரண் ஜோகர்

இவர்கள் இருவரின் படத்தையும் இனி நாங்கள் யாரும் பார்க்க மாட்டோம் என சத்தியபிரமாணம் ஏற்று டுவிட்டரில் விமர்சனங்கள் தெறிக்கவிட்டு வருகின்றனர்.

ஆலியா பட், கரண் ஜோகர்

ஆலியா பட், கரண் ஜோகர்

பாலிவுட் திரையுலகம் மட்டுமல்லாமல் உலக திரை உலகினர் அனைவரையும் மிகுந்த சோகத்தில் ஆழ்த்தி இருக்கும் சுஷாந்தின் மரணம் தற்பொழுது இணையதள வாசிகளால் மிகப்பெரிய பேசுபொருளாக இருந்து வருகிறது.

ரசிகர்கள் ஆதங்கம்

ரசிகர்கள் ஆதங்கம்

சுஷாந்தின் மரணத்திற்கு மன அழுத்தம், தனிமை, படங்கள் இல்லை என பல காரணங்களை சொல்லி வந்த நிலையில் தற்பொழுது ஆலியா பட் மற்றும் கரண் ஜோகரும் ஒரு காரணமென அனைவராலும் விமர்சிக்கப்பட்டும் இப்படி அநியாயமா ஒரு நல்ல மனிதரை வார்த்தைகலால் கொன்று விட்டீர்களே என்றும் அனைவரும் ஆதங்கப்பட்டுக்கொண்டும் வருகின்றனர்.

கரண் வித் காபி

கரண் வித் காபி

தோனி என்ற படத்தின் மூலம் உலகெங்கிலும் பிரபலமான ஒரு சிறந்த நடிகரின் மரணத்திற்கு திரையுலகமே கண்ணீர் வடித்து வரும் வேளையில் தனது டுவிட்டர் பக்கத்தில் சுஷாந்திற்கு தன்னுடைய பங்கிற்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து இருந்தார் ஆலியா பட். இதைப்பார்த்த நெட்டிசன்கள் அவரை கடுமையாக விமர்சித்து வருகின்றனர் . சில வருடங்களுக்கு முன்பு கரண் ஜோகர் தொகுத்து வழங்கிய கரண் வித் காபி என்ற ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் ஆலியா பட் பங்கேற்றபோது அவருக்கு அதில் ஒரு டாஸ்க் வழங்கப்பட்டது

அசிங்கப்படுத்திய ஆலியா பட்

அசிங்கப்படுத்திய ஆலியா பட்

அந்த டாஸ்கில் மூன்று முன்னணி நடிகர்களின் பெயர் கொடுக்கப்பட்டு அவர்களுக்கு நீங்கள் நினைக்கும் மதிப்பெண்ணை வழங்கவேண்டுமென கூறப்பட்ட நிலையில் அதில் ரன்வீர்சிங், வருண் தவான், சுஷாந்த் சிங் ராஜ்புத் என மூன்று கதாநாயகர்களின் பெயரை குறிப்பிட்டிருந்தனர்.

நீலிக்கண்ணீர்

நீலிக்கண்ணீர்

ஆலியா பட் அதற்கு "சுஷாந்த் சிங் ராஜ்புத் யார்? "அப்படி ஒரு நடிகர் இருக்கிறார் என்பது எனக்கு தெரியவே தெரியாது போன்று அந்த நிகழ்ச்சியில் தெரிவித்து சுஷாந்த் சிங்கை மனதளவில் காயப்படுத்தியது மட்டுமில்லாமல் இப்போது இரங்கல் தெரிவித்து நீலிக்கண்ணீர் வடிக்கிறார் என நெட்டிசன்களிடம் செம்மையாக வாங்கிக்கட்டி கொண்டு பதில் கூற முடியாமல் முழித்துக் கொண்டிருக்கிறார் ஆலியா பட்.

வருத்தம்

வருத்தம்

சுஷாந்த் தன்னை பாலிவுட் திரை உலக குடும்பத்தில் ஒருவராக யாரும் இன்னும் ஏற்றுக்கொள்ளவில்லை என மனதை உருக்கும் வகையில் சொல்லி வந்துள்ளார். மேலும் தன்னை யாரும் எந்த ஒரு விழாக்களிலும், சொகுசு விருந்துகளிலும் மதித்து அழைக்கவில்லை என வருத்தத்தோடு சொல்லி வந்த நிலையில் இவரின் மரணத்திற்கு தற்போது கரண் ஜோகரும் தனது பங்கிற்கு இரங்கலை ட்விட்டரில் தெரிவித்து இருந்தார்.

கோபத்தில் ரசிகர்கள்

கோபத்தில் ரசிகர்கள்

இந்த ட்விட்டை பார்த்த நெட்டிசன்கள் கோபத்தில் பொங்கி எழுந்து உள்ளனர். இவர் தனது நிகழ்ச்சியில் ஒருமுறை ஆலியா பட்டுடன் இணைந்து சுஷாந்த் சிங்கை கேலிக்குள்ளாக்கி மகிழ்ந்து விட்டு தற்போது வந்து இரங்கல் தெரிவிப்பது போல பொய்யாக நடிக்கிறார் என பலரது சாடல்களையும் வாங்கிக்கொண்டுள்ள இவர்கள் இருவரின் பெயர்கள் தான் ட்விட்டரில் ட்ரெண்டாக்கி வருகிறது. இவ்வாறு கரண் ஜோகர் மற்றும் ஆலியா பட்டை நெட்டிசன்கள் அனைவரும் திட்டி தீர்த்து கொண்டு நீங்கள் தான் ஏற்கனவே உங்கள் நிகழ்ச்சியில் சுஷாந்தை வார்த்தைகளாலேயே கொன்றுவிட்டீர்கள் என சொல்லியும் இனி இவர்கள் இருவரின் படங்களை நாம் முற்றிலுமாக தவிர்க்க வேண்டுமெனவும் பலரும் உறுதி மொழி எடுத்து வருகின்றனர். இதற்கு இவர்கள் இருவரிடமிருந்தும் எந்த ஒரு பதிலும் இதுவரை வரவில்லை.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X