மறைந்த நடிகர் சுஷாந்தின் முன்னாள் காதலிக்கு திருமணம்… மாப்பிள்ளை யார் தெரியுமா ?
மும்பை : மறைந்த நடிகர் சுஷாந்த்தின் முன்னாள் காதலி அங்கிதா லோகண்டே அவரது காதலனை திருமணம் செய்ய உள்ளார்.
சுஷாந்த் சிங், அவரது அடுக்குமாடி குடியிருப்பில் தற்கொலை செய்து கொண்டபோது, அங்கிதாவிடம் போலீசார் விசாரணை நடத்தினார்கள்.
தற்போது, அங்கிதா தனது புதிய காதலரான விக்கி ஜெயின் திருமணம் செய்து உள்ள அவர்களது , திருமணம் டிசம்பர் 14ந் தேதி நடைபெற உள்ளது.

சுஷாந்த் சிங்
இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனியின் வாழ்க்கை வரலாற்றுப் படமான எம்.எஸ்.டோனி, படத்தின் மூலம் கவனம் ஈர்த்தார் சுஷாந்த் சிங் ராஜ்புத். எவ்வித பின்புலமும் இல்லாமல் சீரியல் நடிகராக அறிமுகமாகி சினிமாவில் சாதித்ததற்காகவே சுஷாந்த் சிங் ராஜ்புத்துக்கு தனி ரசிகர் கூட்டம் உண்டு. அடுத்தடுத்து அவர் நடித்த அத்தனை படங்களும் சூப்பர் ஹிட்டாகின.

தற்கொலை
கடந்த ஆண்டு ஜுன் 14-ஆம் தேதி தனது மும்பை பாந்த்ரா வீட்டில் தற்கொலை செய்துகொண்டார் சுஷாந்த் சிங் ராஜ்புத். அவரது ரசிகர்கள் மட்டுமல்லாமல் இந்தியாவையே உலுக்கியது. சுஷாந்த் மரணம் தொடர்பாக இன்னும் விசாரணை நடந்து வருகிறது.

முன்னாள் காதலி அங்கிதா
சுஷாந்த்தின் முன்னாள் காதலி அங்கிதாவும், சுஷாந்தும், பவித்ர ரஷ்தா என்ற இந்தி சீரியலில் ஹீரோ ஹீரோயினாக நடித்திருந்தனர். அப்போது, இருவருக்கும் காதல் மலர்ந்து பின்பு இருவரும் பிரிந்து விட்டனர்கள். ஆனாலும், சுஷாந்த் சிங் தற்கொலை செய்துகொண்ட போது அவரது மரணத்திற்கும், அவரது குடும்பத்திற்கும் நீதிகேட்டு முதலில் குரல் கொடுத்தவர் அங்கிதா.

டிசம்பர் 14 திருமணம்
இந்நிலையில், அங்கிதா லோகாண்டே தனது நீண்ட நாள் நண்பரான விக்கி ஜெயினை திருணம் செய்து கொள்ள உள்ளார். இவர்களது திருமணம், டிசம்பர் 12 முதல் டிசம்பர் 14 வரை மூன்று நாட்களுக்கு நடைபெற உள்ளது. இதில் பல திரைப்பிரபலங்கள் கலந்து கொள்ள உள்ளனர்.

வைரலாகும் புகைப்படம்
திருமண நாள் நெருங்கி விட்டதால், திருமணத்திற்கு முந்தைய விழாக்கள் தொடங்கிவிட்டன. மராத்தி பாணியில் நடைபெறும் விழாக்களின் புகைப்படங்களை அங்கிதா பகிர்ந்துள்ளார். நீண்ட நாட்களாக ஒருவரையொருவர் டேட்டிங் செய்து வரும் இந்த ஜோடி, தங்களது திருமண தேதியை தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். அங்கிதா பச்சை நிற புடவையில் அழகாகவும், விக்கி க்ரீம் குர்தா பைஜாமாவும் அணிந்துள்ளார். இவர்களின் கொண்டாட்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.


Click it and Unblock the Notifications











