For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    சுஷாந்த் சிங்கின் கடைசி படம்.. இன்று வெளியாகிறது.. இலவசமாக வழங்கும் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார்!

    |

    சென்னை: மறைந்த நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் கடைசி படமான தில் பேச்சாரா இன்று உலக ரசிகர்களுக்காக டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் வெளியாகிறது.

    முகேஷ் சப்ரா இயக்கத்தில் சுஷாந்த் சிங் ராஜ்புத், சஞ்சனா சங்கி, சைஃப் அலி கான் உள்ளிட்டோர் நடித்துள்ள இந்த படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்துள்ளார்.

    கடந்த ஜூன் 14ம் தேதி சுஷாந்த் சிங் ராஜ்புத் மறைந்ததை முன்னிட்டு டிரிப்யூட்டாக அனைத்து ரசிகர்களும் பார்க்கும் விதமாக இந்த படத்தை டிஸ்னி இலவசமாக வெளியிடுகிறது.

    சுஷாந்த் என்னை சந்திக்க விரும்பினார்.. ஆனால் துரதிர்ஷ்டவசமாக அது நடக்கவில்லை: ஏஆர் ரஹ்மான் உருக்கம்!

    சாதனை நாயகன்

    சாதனை நாயகன்

    டிவி நடிகராக இருந்து கை போ சே எனும் அறிமுக படத்திலேயே சிக்சர் அடித்த சாதனை நாயகன் சுஷாந்த் சிங், எம்.எஸ். தோனி பயோபிக்கில் 200 கோடிக்கும் மேல் வசூலித்து ஹெலி காப்டர் சிக்ஸரையும் அடித்தார். கடந்த ஆண்டு வெளியான சிக்கோரே படம் இளைஞர்களுக்கு பாசிட்டிவ் எனர்ஜியை ஊட்டிய நிலையில், மன அழுத்தம் காரணமாக கடந்த மாதம் சுஷாந்த் தற்கொலை செய்துகொண்டார் என்பதை இன்னமும் அவரது ரசிகர்களால் ஏற்க முடியவில்லை.

    பாலிவுட்டில் சர்ச்சை

    பாலிவுட்டில் சர்ச்சை

    சக்சஸ் நாயகனாக வலம் வந்து கொண்டிருந்த இளம் நடிகர் திடீரென தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொள்ளும் அளவுக்கு அவரது வாழ்க்கையில் என்ன நடந்தது என்பது மர்மமாகவே இருக்கிறது. சுஷாந்த் மரணத்தில் மர்மம் இருப்பதாகவும் சிபிஐ விசாரணை வேண்டும் எனவும் கங்கனா ரனாவத் உள்ளிட்ட பல பாலிவுட் பிரபலங்கள் போராடி வருகின்றனர். நெப்போடிசம் தான் அவரை கொலை செய்து விட்டதாகவும் குற்றச்சாட்டுக்கள் எழுந்து வருகின்றன.

    கடைசி படம்

    கடைசி படம்

    சுஷாந்த் சிங் ராஜ்புத் நம்முடன் இல்லாத இந்த நிலையில், அவர் நடிப்பில் அவர் சிரிப்பில், அவர் நடனத்தில் உருவாகி உள்ள கடைசி படமான தில் பெச்சாரா இன்று வெளியாகிறது. ஹாலிவுட்டில் கடந்த 2014ம் ஆண்டு ஜோஸ் பூனே இயக்கத்தில் வெளியான The Fault in Our Stars என்ற படத்தின் அதிகாரப்பூர்வ ரீமேக் தான் இந்த படம். இரு கேன்சர் நோயாளிகளும் எப்படி காதலித்து தங்கள் வாழ்க்கையை மாற்றுகிறார்கள் என்பது தான் கதை.

    இலவசமாக

    இலவசமாக

    ஹாட்ஸ்டாருடன் டிஸ்னி இணைந்து டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் ஆகி உள்ள நிலையில், இந்த படத்தை டிஸ்னி இலவசமாகவே வழங்குகிறது. இன்று மாலை 7.30 மணிக்கு டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரை டவுன்லோடு செய்து யார் வேண்டுமானாலும் இந்த படத்தை பார்க்கலாம் என்றும், தனியாக ப்ரீமியம் ஏதும் கட்டத் தேவையில்லை என்ற அறிவிப்பை டிஸ்னி சுஷாந்த் நினைவாக வெளியிட்டு இருக்கிறது.

    ரெக்கார்டு படைக்கும்

    ரெக்கார்டு படைக்கும்

    சமீபத்தில் வெளியான தில் பேச்சாரா படத்தின் டிரைலர் உலகளவில் அவெஞ்சர்ஸ் எண்ட்கேம் படங்களின் சாதனைகளை முறியடித்து 80 மில்லியன் பார்வைகளையும், 10 மில்லியன் லைக்குகளையும் பெற்று மிகப்பெரிய ரெக்கார்டு பிரேக்கிங் செய்து இருந்தது. இன்று வெளியாகவுள்ள சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் கடைசி படமான தில் பேச்சாரா படத்தை உலகளவில் மக்கள் பார்க்க ஆவலுடன் காத்திருப்பதால், மிகப்பெரிய சாதனைகள் படைக்கப்படும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

    English summary
    A tribute to Sushant Singh Rajput, Disney release Dil Bechara movie as a free one to all. No premium for today release Sushant’s one last movie.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Filmibeat sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Filmibeat website. However, you can change your cookie settings at any time. Learn more
    X