“ஆம்பள மாதிரி இருக்கீங்க“ உருவகேலி செய்த இணையவாசி… கூலாக பதிலளித்த டாப்ஸி !

மும்பை : தமிழ், தெலுங்கு படங்களில் கவனம் செலுத்தி வந்த டாப்ஸி தற்போது பாலிவுட்டின் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருகிறார்.

சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் டாப்ஸி, ட்விட்டரில் தன் உருவத்தை கேலி செய்த நபருக்கு தக்கபதிலடி கொடுத்துள்ளார்.

டாப்ஸி பன்னுவின் இந்த கூலான பதிலால் அனைவரும் அவரை பாராட்டி வருகின்றனர்.

சிறப்பான நடிப்பு

சிறப்பான நடிப்பு

வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான ஆடுகளம் திரைப்படத்தில், உருட்டிவைத்த வெண்ணைப்போல இருந்து தனக்கு கொடுத்த கதாபாத்திரத்தை அனைவரும் புகழும் படி கொடுத்திருப்பார் டாப்ஸி. இப்படம் இவருக்கு ஒரு நல்ல பெயரை பெற்றுத்தந்தது.

வெற்றி பெற்றது

வெற்றி பெற்றது

ஆடுகளம் படத்திற்கு பிறகு தமிழில் சரியாக படவாய்ப்புகள் அமையாததால் தெலுங்கு, மலையாளம், இந்தியில் பல திரைப்படங்களில் படு பிஸியாக நடித்து வருகிறார். சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான ஹசீன் தில்ரூபா நெட்பிளிக்ஸில் நேரடியாக வெளியானது. கணவனை கொலை செய்யும் பெண் கேரக்டரில் டாப்ஸி மிரட்டி இருப்பார். அதேபோல டாப்சி நடித்த அனபெல் சேதுபதி ஒடிடியில் வெளியானது.

ஆம்பள உடம்பு

ஆம்பள உடம்பு

டாப்ஸி பன்னு தற்போது ராஷ்மி ராக்கெட் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இத்திரைப்படம் அக்டோபர் 15 ஆம் தேதி ஜீ 5 ஓடிடி தளத்தில் வெளியாகவிருக்கிறது. இந்த படத்திற்காக கடுமையாக உடற்பயிற்சி செய்த போது எடுத்த புகைப்படத்தை பகிர்ந்து இது யார் என்று சொல்லுங்கள் என்று கேட்டிருந்தார். இதற்கு ஒரு இணையவாசி, இந்த ஆம்பள உடம்பு நிச்சயம் டாப்ஸி உடையது என்று அவரது உடலை கேலி செய்து கருத்து பதிவிட்டு இருந்தார்.

கூல் பதில்

கூல் பதில்

இதற்கு பதில் அளித்த டாப்சி, உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி. இதுபோன்ற பாராட்டிற்காகத்தான் நான் மிகவும் கடினமாக உழைத்தேன் என்று கூறியுள்ளார். டாப்ஸியின் இந்த கூல் பதில் பலரை கவர்ந்து இருக்கிறது.

மிஷன் இம்பாசிபிள்

மிஷன் இம்பாசிபிள்

தற்போது டாப்ஸி, சபாஷ் மித்து, கிரிக்கெட் வீராங்கனை மித்தாலி ராஜ் வாழ்க்கை வரலாற்று படத்தில் நடித்து வருகிறார். தமிழில் ஜன கண மன போன்ற திரைப்படங்களை கைவசம் வைத்துள்ளார். மேலும், மிஷன் இம்பாசிபிள் என்ற தெலுங்கு படம் ஒன்றில் நடிக்க கமிட்டாகி உள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X