த்ரில்லர் மூவி 'ப்ளர்'… படப்பிடிப்பை முடித்த பாலிவுட் நடிகை !

மும்பை : நடிகை டாப்ஸி த்ரில்லர் திரைப்படமான 'ப்ளர்' திரைப்படத்தின் படப்பிடிப்பை முடித்துள்ளார்.

இப்படத்தில் குல்ஷன் தேவ்யா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

இப்படத்தின் படப்பிடிப்பு பிப்ரவரியில் தொடங்கியது, அப்போது கொரோனாவின் 2வது அலை தீவிரமானதால் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. தற்போது, கொரோனாவின் தீவிரம் குறைத்து ஊரடங்கு தளர்த்தப்பட்ட பிறகு படப்பிடிப்பு தொடங்கப்பட்டு தற்போது முடிந்துள்ளது.

டாப்ஸி

டாப்ஸி

தெலுங்கில் நாயகியாக அறிமுகமாகி பிரபலமானவர் டாப்ஸி. தற்போது பாலிவுட்டில் முன்னணி நாயகியாக வலம் வருகிறார் டாப்ஸி, ராஷ்மி ராக்கெட், லூப் லபேடா, டூபாரா, சபாஷ் மிது உள்ளிட்ட இந்திப் படங்களில் கவனம் செலுத்தி வருகிறார்.

ப்ளர் படப்பிடிப்பு முடிந்தது

ப்ளர் படப்பிடிப்பு முடிந்தது

அஜய் பாஹ்ல் இயக்கத்தில், பவன் சோனி எழுதிய த்ரில்லர் திரைப்படம் ப்ளர். இப்படம் கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதை அம்சத்தைக் கொண்ட இப்படத்தில், லீட் ரோலில் டாப்ஸி நடித்துள்ளார். தவிர்க்க முடியாத பிரச்சினையில் ஒரு பெண் சிக்கிக்கொள்கிறாள். அந்த பெண்ணைசுற்றி நடக்கும் கதையே 'ப்ளர்' இந்த படம் முழுக்க முழுக்க நைனிடாவில் படமாக்கப்பட்டுள்ளது. இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது முடிந்துள்ளது.

மகிழ்ச்சியான அனுபவம்

மகிழ்ச்சியான அனுபவம்

ப்ளர் படத்தின் படப்பிடிப்பு நைனிடாவில் நடைபெற்றது. நைனிடாலில் படப்பிடிப்பு நடத்திய அனுபவத்தை பற்றி பேசிய இயக்குனர் அஜய் பாஹ்ல், நைனிடால் ஏரி, மால் சாலை மற்றும் பிற சுற்றுலாத் தலங்களில் படப்பிடிப்பு நடித்த கடினமாக இருந்தது. ஏன் என்றால் அங்கு கூட்ட நெரிசல் மிகுந்த பகுதியாகும். இதனால், நாங்கள் படப்பிடிப்பு நேரத்தை மாற்றினோம், நாங்கள் அதிகாலை நேரத்திலும், இரவு நேரமும் படப்பிடிப்பை மேற்கொண்டோம் என்றார். இது அனைவருக்கும் முற்றிலும் மகிழ்ச்சியான அனுபவமாக இருந்தது. நைனிடால் படத்திற்கு அழகு மற்றும் மர்மத்தை சமமாக கொடுக்கும் இடமாக இருந்தது என்று இயக்குனர் அஜய் பாஹல் கூறினார்.

புதிய பயணம்

புதிய பயணம்

இதையடுத்து பேசிய டாப்ஸி. இந்த புதிய பயணத்தைத் தொடங்குவதில் நான் மகிழ்ச்சியடைகிறேன், மேலும் என் தயாரிப்பு நிறுவனமான அவுட்சைடர்ஸ் ஃபிலிம்ஸ் மூலம் சினிமா மீதான எனது அன்பைப் பன்முகப்படுத்தினேன். எனக்கு பிசினஸ் பற்றி புரிதல் இருந்ததால், மேலாண்மை எனக்கு இயல்பாகவே இருந்தது என்றார். அதனால் தான், நான் என் சொந்த தயாரிப்பு நிறுவனத்தை தொடங்க நினைத்தேன். கடந்த ஆண்டோடு இந்தியத் திரைத்துறையில் நான் குதித்து கிட்டத்தட்ட பத்து ஆண்டுகள் நிறைவடைந்தபோது, இதில் நான் மிதப்பதோடு மட்டும் நின்றுவிடாமல் இதில் நீந்தவும் கற்றுக் கொள்வேன் என்று எனக்குத் தெரியாது. ஒரு பிரபலமான நபராக வேண்டும் என்ற கனவு இல்லாமல் இருந்த என்னைப் போன்ற ஒருவர் மீது அதீத அன்பையும் நம்பிக்கையையும் வைத்த அனைவருக்கும் நான் நன்றிக் கடன் பட்டிருக்கிறேன்.

Recommended Video

Adukalam படத்தில் Trisha நடிக்க மறுத்த காரணம் இதுதான் | Vetrimaran Exclusive | Filmibeat Tamil
என்னை வாழ்த்துக்கள்

என்னை வாழ்த்துக்கள்

அவுட்சைடர்ஸ் ஃபிலிம்ஸ் மூலம் திறமையை கொண்டுவர நினைக்கிறேன். மிகப்பெரிய சக்தி கிடைக்கும். கூடவே மிகப்பெரிய பொறுப்பும் சேர்ந்துள்ளது. எனவே, என்னை வாழ்த்துங்கள், காரணம் வெளியிலிருந்து பார்ப்பதற்குத் தோற்றம்தான் முக்கியம் மேலும், என்னைப் போன்ற எந்த பின்னணியும் இல்லாமல் வர விரும்புகிறேன். கேமராவுக்கு முன்னும் பின்னும் புதிய மற்றும் புதிய திறமைகளுக்கான கதவுகளைத் திறக்க நான் ஆவலுடன் காத்திருக்கிறேன் என்றார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X