நடிப்புக்கு முழுக்கு போடும் டாப்ஸி… ஏன் இந்த திடீர் முடிவு ... அதிர்ச்சியில் ரசிகர்கள் !

மும்பை : தமிழ் மற்றும் இந்தி மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வரும் டாப்ஸி, திடீரென சினிமாவுக்கு முழுக்குப்போட உள்ளதாக கூறியுள்ளார்.

சபாஷ் மிது, ராஷ்மி ராக்கெட், டூபாரா, லூப் லபேடா என அரை டஜனுக்கும் அதிகமான படங்களை கையில் வைத்துக்கொண்டு பாலிவுட்டில் பிஸியான நடிகைகள் லிஸ்ட்டில் இருக்கிறார் டாப்சி.

நடிகை டாப்ஸி அவுட்சைடர்ஸ் பிலிம்ஸ் என்ற பெயரில் ஒரு தயாரிப்பு நிறுவனத்தை அண்மையில் தொடங்கினார்.

டாப்ஸி பன்னு

டாப்ஸி பன்னு

வெற்றிமாறன் இயக்கத்தில் உருவான ஆடுகளம் திரைப்படத்தில் ஆங்கிலோ இந்தியப் பெண்ணாக நடித்திருந்தார் டாப்ஸி பன்னு. இந்த திரைப்படத்தில் வரும் வெள்ளாவி வச்சுத்தான் வெளுத்தாங்களா? என்ற பாடலைப்போல சும்மா வெள்ளை வெளேரென இருப்பார். இந்த திரைப்படத்தில் இவரின் நடிப்பு மிகவும் பாராட்டப்பட்டது.

பல படங்கள் கைவசம்

பல படங்கள் கைவசம்

ஆடுகளம் படத்தை தொடர்ந்து அஜித்துடன் ஆரம்பம், காஞ்சனா 2, வை ராஜா வை உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். தற்போது பாலிவுட்டில் முன்னணி நடிகையாக வலம் வரும் டாப்சி. இந்தியில் கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளை தேர்வு செய்து நடித்து வருகிறார். தற்போது இவர் கைவசம் இந்தியில் பல படங்கள் உள்ளன.

சபாஷ் மித்து

சபாஷ் மித்து

இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனாக இருந்த மித்தாலி ராஜின் வாழ்க்கை பாலிவுட்டில் படமாக எடுக்கப்பட்டு வருகிறது. இப்படத்தை சபாஷ் மித்து என்ற பெயரில் இயக்குனர் ஸ்ரீஜித் முக்கர்ஜி இயக்கி வருகிறார். இதில் மித்தாலி ராஜாக டாப்ஸி பன்னு நடித்து வரும் நிலையில் இத்திரைப்படத்தின் புதிய போஸ்டர் சமீபத்தில் வெளியானது.

பலமுறை யோசிப்பேன்

பலமுறை யோசிப்பேன்

இந்நிலையில், டாப்ஸி அளித்துள்ள பேட்டியில், நான் பிரபலமான நடிகையாக மாறிய பிறகும், ஆடம்பர வாழ்க்கையை நான் எப்போதும் விரும்பியது இல்லை. நடுத்தர மக்களைப் போலவே தற்போதும் வாழ்ந்து வருகிறேன். எந்த பொருளை வாங்க வேண்டும் என்றாலும் பல முறை யோசித்து தேவை என்றால் மட்டுமே வாங்குவேன்.

நடிப்புக்கு முழுக்கு போட்டுவிடுவேன்

நடிப்புக்கு முழுக்கு போட்டுவிடுவேன்

அடிக்கடி செல்போனை மாற்றுவது, வீட்டு வாசலில் புது புது காரை வாங்கி நிறுத்துவதை என்றைக்கும் நான் விரும்பியது இல்லை. நான் முதல் முறையாக சம்பாதித்து வாங்கிய காரைத்தான் இப்போது வரை பயன்படுத்தி வருகிறேன். மேலும், வாழ்நாள் முழுவதும் சினிமாவில் நடித்துக் கொண்டே இருக்கும் எண்ணம் எனக்கு இல்லை, தேவையான பணம் சம்பாதித்து விட்டால் நடிப்புக்கு முழுக்கு போட்டுவிடுவேன் என கூறியுள்ளார். டாப்சியின் இந்த பதிலைக்கேட்டு ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X