விஜய் வர்மாவை கண்டுக்காத தமன்னா?.. ஒரே இடத்தில் ஹோலி கொண்டாட்டம்.. அந்த வீடியோவை பார்த்தீங்களா?

மும்பை: நடிகை தமன்னா தனது காதலர் விஜய் வர்மாவை பிரேக்கப் செய்துவிட்டார் என பாலிவுட் மீடியாக்கள் கடந்த வாரம் தகவல்களை வெளியிட்டன. நாடு முழுவதும் அது பெரிய அதிர்வலைகளை கிளப்பின. இந்நிலையில், இந்த வாரம் இருவரும் இணைந்து பாலிவுட் நடிகை ரவீணா டாண்டன் நடத்திய ஹோலி கொண்டாட்டத்திற்கு சென்றுள்ளனர். ஆனால், இருவரும் பிரிந்துவிட்டார்கள் என்பதை உறுதி செய்யும் வகையிலேயே புகைப்படங்கள் வெளியாகி உள்ளன.

பாலிவுட்டில் ஆலியா பட் உடன் டார்லிங் படத்திலும் அதிதி போஹங்கருடன் உச்சகட்ட ஆபாசமாக நெட்பிளிக்ஸ் ஷீ வெப்சீரிஸிலும் சாரா அலி கானுக்கு லிப் லாக் கொடுத்து நடித்தவருமான விஜய் வர்மாவை தான் கடந்த சில ஆண்டுகளாக தமன்னா காதலித்து வந்தார். புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது தமன்னாவுக்கு லிப் லாக் கொடுத்துக் கொண்டிருந்த வீடியோ அம்பலமாகி இருவரது காதல் கதை லீக்கானது.

Tamannaah and Vijay Varma confirms their breakup at Holi event too

அதன் பின்னர், இணை பிரியாத ஜோடிகளாக மும்பை முழுவதும் சுற்றிக் கொண்டிருந்த இருவரும் நேற்று ஒரே இடத்தில் ஹோலி கொண்டாடினாலும் ஒருவரை ஒருவர் கண்டுக்கொள்ளாமல் தனித்தனியாக இருக்கும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் வெளியாகி இருவரும் ஒருவரை ஒருவர் பிரிந்துவிட்டதை உறுதி செய்துள்ளது.

பிரேக்கப் கன்ஃபார்ம்: நடிகைகள் மற்றும் நடிகர்கள் மத்தியில் காதல் மலர்வதும் அவர்கள் திருமணம் செய்துக் கொள்வதையும் பார்த்துள்ள ரசிகர்கள் அதைவிட அதிகமாக நடிகர்கள் பிரேக்கப் செய்து வேறு ஒருவரை திருமணம் செய்து வாழ்ந்து வருவதையும் பார்த்துள்ளனர். சிம்பு மற்றும் நயன்தாரா காதலித்து வந்த நிலையில், அவர்களுக்கு இடையே பிரேக்கப் ஆனது அனைவரும் அறிந்த ஒன்று தான். இது போல ஏகப்பட்ட பிரபலங்கள் காதலில் தொல்வியை சந்தித்துள்ளனர். இந்நிலையில், தமன்னா பாலிவுட் நடிகர் விஜய் வர்மாவை காதலித்து ஒன்றாக வாழ்ந்து வந்த நிலையில், கடந்த சில மாதங்களாக இருவரும் பிரேக்கப் செய்து பிரிந்துவிட்டது நேற்று நடந்த ஹோலி பண்டிகை மூலம் மீண்டும் நிரூபனமாகி உள்ளது.

ஒரே இடத்தில் ஹோலி கொண்டாட்டம்: தமன்னா மற்றும் விஜய் வர்மா இருவரும் ஒரே இடத்தில் ஹோலி பண்டிகையை நேற்று கொண்டாடினர். பிரபல பாலிவுட் நடிகை ரவீணா டாண்டன் சமீபத்தில் தனது மகள் ராஷா தத்னானியை பாலிவுட்டில் இளம் ஹீரோயினாக அறிமுகப்படுத்தினார். அவரது பட விழாவுக்கு சென்ற தமன்னாவை ஆன்ட்டி என ராஷா அழைத்திருந்தார். இந்நிலையில், ரவீணாவின் மகளுடன் தமன்னா ஹோலி கொண்டாடி ஆட்டம் போடும் காட்சிகள் வெளியாகி உள்ளன. அதே போல ரவீணா மற்றும் ராஷாவுடன் விஜய் வர்மாவும் அந்த இடத்தில் ஹோலி கொண்டாடியுள்ளார்.

Take a Poll

ஜோடியாக இல்லை: நடிகை தமன்னா வெளியிட்ட ஹோலி கொண்டாட்ட வீடியோவில் கூட ஒரு இடத்தில் கூட விஜய் வர்மா தென்படவில்லை. இருவரது புகைப்படங்கள் வெளியான நிலையில் கூட இருவரும் ஒன்றாக நிகழ்ச்சிக்கு வந்தது போலவும் செல்ஃபி எடுத்து மகிழ்ந்தது போலவும் எதுவும் வெளியாகாத நிலையில், தமன்னா தனது காதலரை கண்டுக்கவே இல்லை என்றும் இருவரும் பிரிந்துவிட்டது உறுதியாகி விட்டது என்கின்றனர். காதலர் விஜய் வர்மாவை வெறுப்பேற்றும் விதமாகவே தமன்னா ஜாலியாக ஆடிப்பாடி கலர் பூசி விளையாடும் வீடியோவை ஷேர் செய்துள்ளார் என்றும் கமெண்ட்டுகள் குவிந்துள்ளன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X