வாவ்.. பண்ணை வீட்டில்.. லாக்டவுனில்.. பாலிவுட் நடிகையுடன் சல்மான் கான் உருவாக்கிய பாடல் ரிலீஸ்!

சென்னை: லாக்டவுனில் வீட்டை விட்டு வெளியேறாமல் பல பிரபலங்கள் தங்கள் வீட்டிலிருந்தபடியே பாடல்களை பாடியும், குறும்படங்களை இயக்கியும் வெளியிட்டு வருகின்றனர்.

ஆனால், பாலிவுட் நடிகர் சல்மான் எல்லாத்தையும் விட ஒரு ஸ்டெப் மேலே போய், இந்த லாக்டவுனில் ஒரு வீடியோ பாடலை, பாலிவுட் நடிகை ஜாக்குலின் ஃபெர்ணாண்டஸை வைத்து இயக்கி ரிலீஸ் செய்துள்ளார்.

இதற்காக, இந்த லாக்டவுனில் சல்மான் கானின் பண்ணை வீட்டிலேயே நடிகை ஜாக்குலின் தங்கியிருந்தது குறிப்பிடத்தக்கது.

தேரே பினா

தேரே பினா

சமீபத்தில் இந்த பாடல் குறித்த டீசரை வெளியிட்டு வைரலாக்கி இருந்தார் சல்மான் கான் இந்நிலையில், பாலிவுட் நடிகை ஜாக்குலின் ஃபெர்னாண்டஸ் உடன் இணைந்து உருவாக்கிய "Tere Bina" என்ற பாடல் வீடியோவை தனது சல்மான் கான் யூடியூப் பக்கத்தில் சற்று முன் பதிவிட்டு வைரலாக்கி வருகிறார்.

காதலியுடன் பிரேக்ஃபாஸ்ட்

காதலியுடன் பிரேக்ஃபாஸ்ட்

குதிரைக்கு புல் போட்டு அதனையே தானும் உண்டு, தனது காதலியுடன் பிரேக்ஃபாஸ்ட் செய்ததாக நடிகர் சல்மான் கான் சொல்லும் போது, பலரும் அந்த காதலி குதிரை தான் என நினைத்து வந்த நிலையில், அதே பண்ணை வீட்டில் நடிகை ஜாக்குலின் ஃபெர்னாண்டஸும் இருந்தது தற்போது தான் வெளிச்சமாகி உள்ளது.

வரவேற்பு

வரவேற்பு

இரண்டு நாட்களுக்கு முன்னதாக நடிகர் சல்மான் கானின் தேரே பினா பாடலின் டீசர் வெளியாகி பாலிவுட் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. சுமார் 6.6 மில்லியன் ரசிகர்கள் அந்த பாடலை யூடியூபில் கண்டு ரசித்தனர். ஜாக்குலின் ஃபெர்னாண்டஸ் சல்மான் கான் தோளில் ஏறி நிற்கும் காட்சியெல்லாம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.

சல்மான் கான் இயக்கத்தில்

சல்மான் கான் இயக்கத்தில்

இந்த மொத்த பாடலும் சல்மான் கான் இயக்கத்தில் உருவானது குறிப்பிடத்தக்கது. அஜய் பாட்டியா இசையமைப்பில் உருவான இந்த பாடலை சல்மான் கானே பாடியிருந்ததும் அவரது ரசிகர்களுக்கு கூடுதல் உற்சாகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. பன்வலில் உள்ள பண்ணை வீட்டை சுற்றியே இந்த பாடல் படமாக்கப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.

Recommended Video

Thalapathy Vijay & Surya Live Chat | A.R.Murugadoss, Shah Rukh Khan | Imaginary
வெறும் 4 நாட்களில்

வெறும் 4 நாட்களில்

குறைந்த தயாரிப்பு செலவில் தனது பண்ணை வீட்டில் வெறும் நான்கே நாட்களில் இந்த பாடல் வீடியோ படமாக்கப்பட்டுள்ளது என்றும், சல்மான் கான் உடன் அவரது தங்கை அர்பிதா கான் சர்மா மற்றும் அவரது குழந்தைகளுடன் இந்த லாக்டவுனில் அங்கேயே தங்கியிருந்ததாகவும், பண்ணை வீட்டைத் தாண்டி வெளியே எங்கேயும் படமாக்கவில்லை என்றும் தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X