அசிங்கமா இல்லை.. இப்படியா படம் எடுப்பீங்க.. 700 கோடி வசூல் படத்தை கழுவி ஊற்றிய தளபதி 68 கேமராமேன்!

மும்பை: சந்தீப் ரெட்டி வங்கா இயக்கத்தில் ரன்பீர் கபூர், ராஷ்மிகா மந்தனா, அனில் கபூர் மற்றும் பாபி தியோல் நடித்த அனிமல் திரைப்படத்தை தளபதி 68 படத்தின் ஒளிப்பதிவாளர் கழுவி ஊற்றி உள்ளார்.

ஆணாதிக்கத்தின் உச்சமாக அனிமல் படம் உள்ளதாக ஏகப்பட்ட விமர்சனங்கள் படம் வெளியான உடனே கிளம்பின. ஆனால், இளைஞர்கள் அந்த போதைக்காகவே அந்த படத்தை பார்க்க ஆரம்பித்து இதுவரை 750 கோடி வசூலை வாரிக் குவித்துள்ளனர்.

Thalapathy 68 cinematographer Siddhartha Nuni slams Sandeep Reddy Vanga Animal movie

ராம் கோபால் வர்மா, அனுராக் காஷ்யப் உள்ளிட்ட பாலிவுட் பிரபலங்கள் இந்த படத்தை பாராட்டிய நிலையில், கேப்டன் மில்லர் மற்றும் தளபதி 68 படங்களின் ஒளிப்பதிவாளர் சித்தார்த்தா நுனி தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ள போஸ்ட் சினிமா வட்டாரத்தில் பெரும் புயலை கிளப்பி உள்ளது.

ஆபாசத்தின் உச்சம்: அனிமல் திரைப்படத்தை நேற்று தான் ஹைதராபாத்தில் ஒரு தியேட்டரில் பார்த்தேன். அந்த படம் எனக்கு எந்தவொரு இன்ஸ்பிரேஷனையும் கொடுக்கவில்லை. மாறாக அந்த படத்தில் இடம்பெற்ற நாஜிக்களின் புகழாரம் (நெஞ்சில் ஸ்வஸ்திகா முத்திரை), ஆணாதிக்க மனநிலை, பெண்களை வெறும் காமப் பொருளாக மட்டுமே பயன்படுத்துவது என ஆபாசத்தின் உச்சமாகத்தான் அனிமல் படம் எனக்கு தெரிந்தது என பிரபல ஒளிப்பதிவாளர் சித்தார்த் நுனி விளாசி எடுத்துள்ளார்.

அந்த இடத்தை காட்டி: மனைவியை பலாத்காரம் செய்வது, படத்தின் கடைசி காட்சியில் தியேட்டரில் படம் பார்த்துக் கொண்டு இருக்கும் ரசிகர்களை நோக்கி தனது ஆண்குறியை காட்டுவது போல அசிங்கமாக இந்த படத்தை எடுத்து வைத்திருக்கின்றனர். அதிக வசூல் ஈட்டிய படம் என்பதால் அனிமல் படத்தை நல்ல படம் என்றெல்லாம் சொல்ல முடியாது என சோலியை முடித்து விட்டார்.

குழந்தைங்களாம் பார்க்குது: ஏ சான்றிதழ் கொடுக்கப்பட்ட ஒரு படத்தை தியேட்டரில் குழந்தைகளை கூட்டிக் கொண்டு வந்து பெற்றோர்கள் பார்க்கின்றனர். ஹைதராபாத் மல்டிபிளக்ஸில் படம் பார்க்கும் போது குழந்தைகள் இருப்பதை பார்த்து ஷாக் ஆகிட்டேன் எந்தவொரு சமூக அக்கறையும் இல்லாமல் இப்படி படத்தை எடுத்து குழந்தைகள் வரை பார்க்க அனுமதிக்கின்றனரே என மனவேதனை கொட்டியுள்ளார்.

தளபதி 68 ஒளிப்பதிவாளர்: 2013ம் ஆண்டு கன்னடத்தில் வெளியான லூசியா படத்திற்கு ஒளிப்பதிவு செய்து ஏகப்பட்ட விருதுகளை வென்றவர் தான் இந்த சித்தார்த்தா நுனி. யூ டர்ன், வெந்து தணிந்தது காடு, கேப்டன் மில்லர் மற்றும் தற்போது தளபதி 68 உள்ளிட்ட படங்களுக்கு ஒளிப்பதிவு செய்து வரும் இவர் சந்தீப் ரெட்டி வங்காவின் அனிமல் படம் படுமோசமான படம் என வெளுத்து வாங்கி உள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X