வயதாவதை தடுக்கும் மருந்து.. தொடர்ந்து உட்கொண்ட நடிகை.. திடீர் மரணத்திற்கு காரணம் இதுதானா?
சென்னை: இந்தி பிக் பாஸ் சீசன் 13ல் கலந்து கொண்டு பிரபலமான நடிகை ஷெஃபாலி ஜரிவாலா திடீரென உயிரிழந்தார். இவரின் திடீர் மறைவு பலரை சோகத்தில் ஆழ்த்தி இருக்கும் நிலையில், தன்னை இளமையாகவும், அழகாகவும் வைத்துக்கொள்வதற்காக அவர் பயன்படுத்திய மாத்திரைதான் அவரின் உயிரிழப்புக்கு காரணம் என தகவல் வெளியாகி உள்ளது
நடிகை ஷெஃபாலி ஜரிவாலா 2002 ஆம் ஆண்டில் இருந்து சல்மான் கான், அக்ஷய் குமார், பிரியங்கா சோப்ரா உள்ளிட்ட பல பிரபலங்களின் படங்களில் நடித்துள்ளார். இவர், இந்தி
'பிக் பாஸ் சீனல் 13ல் கலந்து கொண்டார். அதில், துணிச்சலுடனும் அழகாகவும் பேசி பலரின் மனதில் இடம் பிடித்தார். பிக் பாஸ் நிகழ்ச்சி மட்டுமில்லாமல் 'நாச் பாலியே' உள்ளிட்ட பல இந்தி ரியாலிட்டி ஷோக்களிலும் பங்கேற்றுள்ளார்.

மரணத்திற்கு காரணம்: இந்நிலையில், நடிகை ஷெஃபாலி ஜரிவாலாவிற்கு கடந்த 27ஆம் தேதி இரவு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து அவரது கணவர் நடிகர் பராக் தியாகியால் அவரை மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளார். அங்கு நடிகையை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். 42 வயதே ஆன நடிகை ஷெஃபாலி ஜரிவாலாவின் மரணம் பலரை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. போஸ்ட்மார்ட்டம் அறிக்கையில் அவர் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்ததாக தகவல் வெளியாகி உள்ளத. நடிகையின் மரண செய்தி அறிந்த பிரபலங்கள் பலரும், ஷெஃபாலிக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
வயதான தோற்றத்தை தடுக்கும் மருந்து: நடிகையின் இறப்பு குறித்து போலீசார் நடத்திய விசாரணையில், நடிகையின் மரணத்தில் எந்த தவறும் நடந்திருப்பதாக சந்தேகப்படவில்லை. ஆனால், ஷெஃபாலி ஜரிவாலாவின் வீட்டில் இரண்டு பெட்டிகள் நிறைய மருந்துகள், மாத்திரைகள், குப்பிகள் இருந்தன அவற்றை பறிமுதல் செய்து விசாரித்தோம். அந்த மருந்துகள் வயதாவதை தடுக்கும் மருந்து மற்றும் சருமத்தைப் பளபளப்பாக்க வைத்திருக்கும் மாத்திரைகள் என்பது தெரியவந்தது. நடிகை ஜரிவாலா உயிரிழந்த நாளில் வெறும் வயிற்றில் குளுதாதயோன் என்ற மாத்திரையை பயன்படுத்தி இருக்கிறார். உணவு எதுவும் எடுத்துக்கொள்ளாமல், வெறும் வயிற்றில் குளுதாதயோனின் குப்பியை அவர் எடுத்துக் கொண்டதால், இரத்த அழுத்தம் குறைந்து, மாரடைப்பு ஏற்பட்டிருக்கலாம் என்று மருத்துவர்கள் தெரிவித்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர்.


Click it and Unblock the Notifications











