அட இது சூப்பர் விஷயமா இருக்கே.. மீண்டும் இணைந்துவிட்டார்களா தர்மேந்திரா - ஹேமமாலினி
மும்பை: பாலிவுட் சூப்பர் ஸ்டார்களில் ஒருவராக திகழ்ந்தவர் தர்மேந்திரா. ஏராளமான மெகா ஹிட் படங்களை கொடுத்திருக்கும் அவர் நடிகை ஹேமமாலினியை இரண்டாவது திருமணம் செய்துகொண்டார். ஹேமமாலினியும் பாலிவுட்டில் படு பிஸியான நடிகையாக வலம் வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இரண்டு பேரின் திருமண வாழ்க்கை சுமூகமாக போய்க்கொண்டிருந்த சூழலில் திடீரென இரண்டு பேரும் பிரிந்தார். நிலைமை இப்படி இருக்க இருவரும் இணைந்து தங்களது திருமண நாளை கொண்டாடினார்கள்.
இந்திய சினிமாவின் உச்ச நட்சத்திரமாக திகழ்ந்தவர் தர்மேந்திரா. மேலும் பாலிவுட் சூப்பர் ஸ்டார் என்றும் அழைக்கப்பட்டவர். இவர் 1960களில் நடிக்க ஆரம்பித்தவர். அப்போதிருந்து 1980களின் இறுதிவரை பாலிவுட்டில் அசைக்க முடியாத இடத்தில் இருந்தார் தர்மேந்திரா. ஏகப்பட்ட வெற்றிப் படங்களை கொடுத்த அவர் அமிதாப் பச்சனுடன் இணைந்து ஷோலே என்ற படத்தில் நடித்திருந்தார். அந்தப் படத்தை சொன்னால் போதும் தர்மேந்திரா சட்டென பலருக்கும் நினைவுக்கு வருவார்.

முதல் திருமணம்: தர்மேந்திரா தன்னுடைய கரியரை ஆரம்பிக்கும் தருவாயிலேயே பர்கஷ் கவுர் என்பவரை திருமணம் செய்துகொண்டார். அந்தத் தம்பதிக்கு சன்னி தியோல், பாபி தியோல் என்ற இரண்டு மகன்கள் இருக்கின்றனர். சுமூகமாக போய்க்கொண்டிருந்த தர்மேந்திரா - பர்கஷ் கவுர் திருமண வாழ்க்கை திடீரென பிரிவில் முடிந்தது. அதேசமயம் சட்டப்பூர்வமாக இரண்டு பேரும் விவாகரத்து பெறவிலை என்பது குறிப்பிடத்தக்கது.
இரண்டாவது திருமணம்: பர்கஷ் கவுரை தர்மேந்திரா பிரிவதற்கான காரணம் நடிகை ஹேமமாலினியுடன் ஏற்பட்ட காதல்தான். இரண்டு பெரும் இணைந்து ஏராளமான ஹிட் படங்களில் நடித்தனர். முக்கியமாக இரண்டு பேருக்குமான கெமிஸ்ட்ரி பக்காவாக ஒர்க் அவுட் ஆனதன் விளைவாக காதலித்து திருமணம் செய்துகொண்டனர். முதல் மனைவியை விவாகரத்து செய்யாமலேயே தர்மேந்திரா இரண்டாவது திருமணம் செய்தது அப்போதைய காலகட்டத்தில் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.
இந்தத் திருமணமும் பிரிவு: 1980ஆம் ஆண்டு தர்மேந்திராவும் ஹேமமாலினியும் திருமணம் செய்துகொண்டனர். அவர்களுக்கு இஷா தியோல், அஹானா தியோல் என்ற மகள்கள் இருக்கிறார்கள். ஆனால் இவர்களது திருமண வாழ்க்கையும் பாதியில் முடிந்தது. தர்மேந்திராவை பிரிந்தது குறித்து ஒருமுறை பேட்டியில் பேசியிருந்த ஹேமமாலினி, "நான் கணவர் தர்மேந்திராவுடன் சேர்ந்து வாழவில்லை. அவரிடமிருந்து விலகி இருப்பதை நினைத்து வருத்தப்படவும் இல்லை. நினைப்பது போல் நமது வாழ்க்கை இருந்துவிடாது. நடப்பதை ஏற்றுக்கொள்ள வேண்டும். அவர் இஷாவுக்கும், அஹானாவுக்கும் நல்ல தந்தையாக இருந்திருக்கிறார்" என்று குறிப்பிட்டிருந்தார்.
திருமண நாள்: இந்தச் சூழலில் கடந்த சில வருடங்களாகவே இரண்டு பேரும் பிரிந்திருந்தார்கள். இந்நிலையில் இன்று அவர்களது 44ஆவது திருமண நாள் ஆகும். அதனை இரண்டு பேரும் சேர்ந்து கொண்டாடினார்கள். இருவரும் ஆளுயர மாலையை அணிந்தபடி இந்த நாளை கொண்டாடினார்கள். அந்தப் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகியுள்ளது. மேலும் இதனைப் பார்த்த ரசிகர்கள், தர்மேந்திராவும், ஹேமமாலினியும் சேர்ந்துவிட்டார்களா என்று மகிழ்ச்சியுடன் கேள்வி எழுப்பிவருகின்றனர்.
வாரிசுகளும் நடிகர்கள்தான்: இதற்கிடையே தர்மேந்திரா - பர்கஷுக்கு பிறந்த பாபி தியோல் ஃபேமஸ் நடிகராக வலம் வருகிறார். சில மாதங்களுக்கு முன்பு வெளியான அனிமல் திரைப்படத்தில் மிரட்டலான நடிப்பை அவர் வெளிப்படுத்தியிருந்தார். தமிழில் கங்குவா படத்திலும் அவர்தான் வில்லனாக நடித்திருக்கிறார். அதேபோல் தர்மேந்திரா - ஹேமமாலினிக்கு பிறந்த இஷா தியோலும் ஏராளமான ஹிந்தி படங்களில் நடித்திருக்கிறார். தமிழில் ஆய்த எழுத்து படத்திலும் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











