காதல் என்ற பெயரில்.. ஐஸ்வர்யா ராயை டார்ச்சர் செய்த சல்மான் கான்.. வெளிச்சத்திற்கு வந்த உண்மை!

மும்பை : உலக அழகி ஐஸ்வர்யா ராய் காதலில் சிக்கி பல கஷ்டங்களை சந்தித்து உள்ளது தற்போது தெரியவந்துள்ளது.

ஐஸ்வர்யா ராய் இந்திய சினிமாவின் மிகவும் பிரபலமான நடிகைகளில் ஒருவர். இவர் 1994 ஆம் ஆண்டு தனது 21 வயதில் மிஸ் வேர்ல்ட் என்ற பட்டத்தை பெற்றார்.

மணிரத்னம் இயக்கிய இருவர் படத்தின் மூலம் சினிமாவில் நடிக்க வந்த இவர். இந்தி, தமிழ், பெங்காலி, ஆங்கிலம் என அனைத்து மொழிப்படங்களிலும் நடித்து இன்று வரை டாப் நடிகையாகவே இருக்கிறார்.

 உலக அழகி ஐஸ்வர்யா

உலக அழகி ஐஸ்வர்யா

ஐஸ்வர்யா ராயின் வனப்பு, நிறம் சொக்கவைக்கும் அழகு சினிமாவில் அவரை உச்சம் தொடவைத்தது. அழகு இருந்தால் நிச்சயம் ஆபத்து இருக்கும், அதுவும் நடிகையாகி விட்டால், எளிதாக அவரை ஆபத்தும், சர்ச்சையும் சூழ்ந்து விடும் அப்படி அடிக்கடி காதல் சர்ச்சையில் சிக்கி துவண்டு போனவர் தான் நடிகை ஐஸ்வர்யா ராய்.

ஐஸ்வர்யா, சல்மான் கான் காதல்

ஐஸ்வர்யா, சல்மான் கான் காதல்

நடிகை ஐஸ்வர்யாவும், சல்மான் கானும் இணைந்து 'ஹம் தில் தே சுகே சனம்' என்ற படத்தில் ஜோடி போட்டு நடித்திருந்தனர். அந்த படம் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்தது. இந்த படத்தின் வெற்றியைத் தொடர்ந்து இருவரும் அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகி நடித்தனர். ஒன்றிரண்டு படத்தில் நடித்தாலே காதல் வந்துவிடும் தொடர்ந்து பல படங்களில் ஜோடிபோட்டு நடித்தவர்களுக்கு காதல் வராமல் போகுமா என்ன. ரீல் ஜோடியாக இருந்த இவர்கள் ரியல் ஜோடியாக பல இடங்களில் டூயட் பாடி வந்தனர்.

கண்டிஷன் போட்ட சல்மான்

கண்டிஷன் போட்ட சல்மான்

இரண்டு ஆண்டுகளுக்கு மேல் காதல் புறாவாக சுற்றிவந்த இருவருக்கும் இடையே விரிசல் விழுந்தது. சல்மான் கான், ஐஸ்வர்யா ராயிடம் மிகவும் மோசமாக நடந்து கொண்டதாகவும், அவரின் கட்டுப்பாட்டில் தான் ஐஸ்வர்யா இருக்க வேண்டும் என்றும், சல்மானின் அனுமதி இல்லாமல் எந்த படத்திலும் நடிக்கக்கூடாது என்று பல கண்டிஷன்களை போட்டு, ஐஸ்வர்யா ராயை டார்ச்சர் செய்துள்ளார்.

டார்ச்சர் செய்த சல்மான் கான்

டார்ச்சர் செய்த சல்மான் கான்

சல்மான் கானின் தொல்லை எல்லை மீறி சென்றதால், அவரை தவிர்த்து வீட்டை விட்டு வெளியில் வராமலே பல நாட்கள் துன்பத்தை அனுபவித்து வந்துள்ளார் ஐஸ். இதனால், ஆத்திரம் தலைக்கு ஏறிய சல்மான் கான் ஒரு நாள் நள்ளிரவில் ஐஸ்வர்யா ராயின் வீட்டுக்கு வந்து கதவை தட்டி ருத்திரத்தாண்டவம் ஆடியிருக்கிறார். இதுகுறித்து ஐஸ்வர்யா ராயின் குடும்பத்தினர் சல்மான் மீது புகார் அளித்துள்ளனர். ஆனால், அவர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

அபிஷேக் பச்சனை மணந்தார்

அபிஷேக் பச்சனை மணந்தார்

இதன் பின் ஐஸ்வர்யா ராய் விவேக் ஓப்ராயை காதலித்ததாக சொல்லப்படுகிறது. ஆனால், அது எந்த அளவுக்கு உண்மை என்று தெரியவில்லை. இதையடுத்து, 2007ம் ஆண்டு பாலிவுட் ஸ்டார் அமிதாப் பச்சனின் மகன், அபிஷேக் பச்சனை திருமணம் செய்துகொண்டார். இந்த தம்பதிக்கு ஆராத்யா என்ற மகள் இருக்கிறார். ஐஸ்வர்யா ராய் சல்மான் கானால் பட்ட கஷ்டம் குறித்து காஃபி வித் கரண் நிகழ்ச்சியில் ஒரு நடிகை புட்டு புட்டு வைத்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X