For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  மாறும் சினிமா டிரெண்ட்...இந்தியில் ரீமேக் ஆகும் டாப் 10 பிளாக்பஸ்டர் படங்கள்

  |

  சென்னை : 2019 ம் ஆண்டு முதல் இந்தி உள்ளிட்ட பிற மொழிகளில் பிளாக்பஸ்டர் ஆகும் படங்களின் கதைகளை தேடி பிடித்து, தமிழ் உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளில் ரீமேக் செய்து வந்தனர். இவற்றில் தமிழில் நேர்கொண்ட பார்வையாக மாறிய பிங்க், பாபநாசமாக மாறிய த்ரிஷ்யம் போன்ற படங்கள் தமிழிலும் பிளாக் பஸ்டர் ஆகின. ஆனால் ரசிகர்களின் ரசனைக்கு ஏற்ப மாற்றப்படாமல் அப்படியே காப்பி அடிக்கப்பட்ட பல படங்கள் சர்ச்சையை சந்தித்து, தோல்வி படங்களாகின.

  சமீபத்தில் கூட சூர்யாவின் 2டி என்டர்டைன்சென்ட் தயாரித்த ராமே ஆண்டாலும் ராவணே ஆண்டாலும் படம் மராத்தி படத்தின் காப்பி என சொல்லப்பட்டது. இந்த படம் ஓடிடி.,யில் ரிலீஸ் செய்யப்பட்டாலும் எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை. ஆனால் பிற மொழிகளில் ஹிட் ஆகும் படங்களை தமிழில் ரீமேக் செய்வது வெகுவாக குறைந்து விட்டது.

  தற்போது அப்படியே சினிமா டிரெண்ட் தலைகீழாக மாறி உள்ளது என்றே சொல்லலாம். தமிழ் மட்டுமின்றி பிற தென்னிந்திய மொழிகளில் பிளாக்பஸ்டரான பல படங்கள் தற்போது இந்தியில் ரீமேக் செய்யப்பட உள்ளன. தெலுங்கில் மிகப் பெரிய வெற்றியை பெற்ற ஆல வைகுண்டபுறம்லு படம் விரைவில் இந்தியில் ரிலீஸ் செய்யப்பட உள்ளது. அப்படி தற்போது ரசிகர்களின் எதிர்பார்ப்பை எகிற வைத்து, பாலிவுட்டில் ரீமேக் ஆக உள்ள டாப் 10 படங்களைப் பெற்றி இங்கே பார்க்கலாம்.

  இயக்குநருக்குத்தான் நன்றி சொல்லனும்… பெருமையாக உள்ளது…'ஜெய் பீம்' ராவ் ரமேஷ் நெகிழ்ச்சி !இயக்குநருக்குத்தான் நன்றி சொல்லனும்… பெருமையாக உள்ளது…'ஜெய் பீம்' ராவ் ரமேஷ் நெகிழ்ச்சி !

  விக்ரம் வேதா

  விக்ரம் வேதா

  தமிழில் விஜய் சேதுபதி - மாதவன் நடிப்பில் புஷ்கர் - காயத்ரி இயக்கி படம் விக்ரம் வேதா. போலீஸ் - ரெளடி இடையேயான மோதல் தான் படத்தின் கதை. இந்த படத்தை இந்தியில் அதே பெயரில் அதே டைரக்டர்களே ரீமேக் செய்து வருகின்றனர். இதில் வேதாவாக ஹிரித்திக் ரோஷனும், விக்ரமாக சைஃப் அலி கானும் நடிக்கிறார்கள். சமீபத்தில் ஹிருத்திக் ரோஷனின் பிறந்தநாளை முன்னிட்டு இந்த படத்தில் வேதாவாக தோன்றும் ஹிருத்திக்கின் ஃபஸ்ட்லுக் போஸ்டர் வெளியிடப்பட்டது.

  ஹிட்

  ஹிட்

  தெலுங்கில் வெளிவந்து சூப்பர் ஹிட்டான ஹிட் படம் அதே பெயரிலேயே இந்தியில் ரீமேக் செய்யப்படுகிறது. இதில் ராஜ்குமார் ராவ் லீட் ரோலில் நடிக்கிறார். காணாமல் போன ஒரு பெண்ணை தேடி கண்டுபிடிக்கும் போலீசின் கதை தான் ஹிட் . இதில் ராஜ்குமார் ராவ், சான்யா மல்கோத்ரா ஆகியோர் நடிக்கிறார்கள். தெலுங்கில் இந்த படத்தில் விஷ்வாக் சென், ருஹானி சர்மா ஆகியோர் நடித்திருந்தனர்.

  ஜெர்சி

  ஜெர்சி

  2019 ல் தெலுங்கில் வெளிவந்த ஜெர்சி படம் தற்போது அதே பெயரில் இந்தியில் ரீமேக் செய்யப்பட்டுள்ளது. நானி நடிப்பில் கிரிக்கெட்டை மையமாகக் கொண்ட படம் இது. பல காரணங்களால் கிரிக்கெட்டை கைவிடும் ஹீரோ, தனது மகனுக்காக 10 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் களமிறங்கி வெற்றி பெறுவது தான் கதை. இந்த படத்தை கெளதம் தின்னனுரி இயக்கி இருந்தார். இந்தியில் ரீமேக் செய்யப்பட்டுள்ள இந்த படத்தில் ஷாகித் கபூர், மிருனல் தாகூர் ஆகியோர் நடித்துள்ளனர்.

  டிரைவிங் லைசென்ஸ்

  டிரைவிங் லைசென்ஸ்

  மலையாளத்தில் ப்ருத்விராஜ் மற்றும் சுராஜ் நடித்த டிரைவிங் லைசென்ஸ் படத்தின் இந்தி ரீமேக்கில் அக்ஷய் குமார், இம்ரான் ஹாஷ்மி நடித்திருந்தனர். இந்தியில் இந்த படத்திற்கு செல்ஃபி என பெயரிடப்பட்டுள்ளது. ராஜ் மேத்ரா இயக்கிய இந்த படத்தை கரன் ஜோகரின் தர்மா ப்ரொடக்ஷன்ஸ் மற்றும் ப்ருத்விராஜ் ப்ரொடக்ஷன்ஸ் இணைந்து தயாரித்திருந்தன.

  யு டர்ன்

  யு டர்ன்

  தெலுங்கில் சமந்தா நடித்த த்ரில்லர் படம் யு டர்ன். பார்வையாளர்களை சீட்டின் நுனியில் அமர வைக்கும் அளவிற்கு அடுத்தடுத்த ட்விஸ்ட் வைத்து சஸ்பென்சாக கதையை நகர்த்தி இருப்பார்கள். தற்போது இந்தியில் ரீமேக் ஆக உள்ள இந்த படத்தில் ஆல்யா எஃப் நடிக்கிறார். இந்த படத்தை ஏக்தா கபூர் ப்ரொடக்ஷன்ஸ் தயாரிக்கிறது.

  சூரரை போற்று

  சூரரை போற்று

  தமிழில் சூர்யா நடிப்பில் சுதா கொங்கரா இயக்கிய படம் சூரரை போற்று. கேப்டன் கோபிநாத்தின் வாழ்க்கை பற்றிய இந்த படம் ஓடிடி.,யில் ரிலீஸ் செய்யப்பட்டாலும் சர்வதேச அங்கீகாரத்தை பெற்றது. பாராட்டு, விருது என அள்ளி குவித்து ஆஸ்கார் பரிந்துரை வரை சென்ற படம் .இந்த படம் இந்தியில் ரீமேக் செய்யப்பட உள்ளது என அறிவிக்கப்பட்டது முதல் இது பற்றிய தகவல்கள் எப்போது வெளியாகும் என ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் டைரக்டர் சுதா கொங்கராவோ, இந்திக்கு ஏற்றபடி கதையில் சில மாற்றங்களை கொண்டு வர உள்ளேன். அதை செய்து எந்த பகுதியில் ஷுட்டிங் நடத்தலாம் என அனைத்தும் முடிவு செய்த பிறகு கடைசியாக தான் ஹீரோவை தேர்வு செய்வேன் என கூறி விட்டார். ஆனால் இதிலும் சூர்யாவே நடிக்கலாம் என்பது பலரின் விருப்பமாக உள்ளது.

  அருவி

  அருவி

  2017 ல் தமிழில் வெளிவந்த படம் அருவி. தமிழில் அதிதி பாலன் நடித்த இந்த படத்தை அருண் பிரபு புருஷேத்தமன் இயக்கி இருந்தார். இந்தியில் ரீமேக் ஆக உள்ள இந்த படத்தில் ஃபாத்திமா சானா ஷாயிக் லீட் ரோலில் நடிக்க உள்ளார். இந்த படத்தை ஈ.நிவாஸ் இயக்க உள்ளார். இவர் இதற்கு முன் சூல் படத்தை இயக்கி வெற்றி கண்டவர்.

  ஹெலன்

  ஹெலன்

  மலையாள த்ரில்லர் படமான ஹெலன் படத்தின் இந்தி ரீமேக்கில் ஜான்வி கபூர் நடிக்கிறார். மலையாளத்தில் இந்த படத்தில் அன்னா பென், லால் ஆகியோர் நடித்திருந்தனர். ரசிகர்களிடம் மிகுந்த பாராட்டை பெற்ற இந்த படத்தில் நடித்தததற்காக அன்னா பென்னிற்கு கேரள அரசின் திரைப்பட விருது கிடைத்தது. இந்த படத்தின் இந்தி ரீமேக்கை போனி கபூர் மற்றும் ஜீ ஸ்டூடியோஸ் இணைந்து தயாரிக்க உள்ளன.

  கைதி

  கைதி

  தமிழில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கார்த்தி நடித்த கைதி படம் இந்தியில் ரீமேக் செய்யப்பட உள்ளது. இதில் கார்த்தி நடித்த ரோலில் அஜய் தேவ்கன் நடிக்க உள்ளார். தனது மகளை பார்ப்பதற்காக பல வருடங்களுக்கு பிறகு சிறையில் இருந்து விடுதலையாகி வரும் கைதி, ஒரு இரவில் போலீசாரின் உயிரை காப்பாற்ற உதவுவது தான் படத்தின் கதை.

  மாஸ்டர்

  மாஸ்டர்

  2021 ம் ஆண்டு ஆரம்பத்தில் வெளியாகி மிகப் பெரிய பிளாக்பஸ்டராக அமைந்த பெரிய பட்ஜெட் படம் மாஸ்டர். விஜய், விஜய் சேதுபதி நடித்த இந்த படம் இந்தியில் ரீமேக் செய்யப்பட உள்ளது. விஜய் நடித்த ரோலில் இந்தியில் சல்மான் கான் நடிக்க உள்ளார். இந்த படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோசுடன் இணைந்து என்டமால் ஷைன் இந்தியா, முரத் கெதானி ஆகியோர் தயாரிக்க உள்ளனர்.

  இந்த பத்து படங்கள் மட்டுமல்ல தென்னிந்திய மொழிகளில் சூப்பர் ஹிட்டான பல படங்கள் இந்தியில் ரீமேக் செய்யப்பட பேசப்பட்டு வருகிறது. அவைகளில் ராட்சசன், அந்நியன், விஜய் தற்போது நடித்துள்ள பீஸ்ட் உள்ளிட்ட பல ஆக்ஷன் படங்கள் வரிசையாக இந்தியில் ரீமேக் செய்யப்பட உள்ளன.

  English summary
  Here we discuss about top 10 movies which are ready for remake in hindi. Fans are eagerly waiting to see these remake movies too. These movies increase the expectations of the fans.
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X