நடுராத்திரி 3 மணி நண்பர்.. விக்கி கவுஷல் குறித்து ஓபனா பேசிய திரிப்தி திம்ரி.. கத்ரீனா கைஃப் பாவம்!
மும்பை: அனிமல் படத்தில் இடைவேளைக்குப் பிறகு திரையில் தோன்றி ராஷ்மிகா மந்தனாவையே ஓவர்டேக் செய்த புல்புல் நடிகை தான் திரிப்தி திம்ரி. பாலிவுட்டின் லேட்டஸ்ட் கனவுக்கன்னியாக மாறியுள்ள அவர் தான் அடுத்ததாக அல்லு அர்ஜுன் நடித்துள்ள புஷ்பா 2 படத்தில் குத்தாட்டம் போட்டுள்ளார் என்றும் கூறுகின்றனர்.
சந்தீப் ரெட்டி வங்கா இயக்கத்தில் ரன்பீர் கபூர் நடித்த அனிமல் படத்தில் ஆடைகளை துறந்து படுகவர்ச்சியாக நடித்து ரசிகர்களை சூடாக்கிய திரிப்தி திம்ரி சமீபத்தில் விக்கி கவுஷலுக்கு ஜோடியாக பேட் நியூஸ் படத்திலும் நடித்திருந்தார்.

ரன்பீர் கபூர் மற்றும் விக்கி கவுஷல் இருவரில் உங்களுக்கு ரொம்பவே நெருக்கமான நண்பர் யார் என்கிற கேள்விக்கு சமீபத்தில் பேட்டியளித்த திரிப்தி திம்ரி கொஞ்சம் கூட யோசிக்காமல் விக்கி கவுஷல் தான் தன்னுடைய 3 மணி நண்பர் எனக் கூறி அதிர்ச்சியை கிளப்பியுள்ளார்.
நடிகை திரிப்தி திம்ரி: மறைந்த நடிகை ஸ்ரீதேவி நடிப்பில் வெளியான மாம் படத்தின் மூலம் பாலிவுட்டில் அறிமுகமானவர் தான் திரிப்தி திம்ரி. போஸ்டர் பாய்ஸ், லைலா மஜ்னு படங்களை தொடர்ந்து அனுஷ்கா ஷர்மா தயாரிப்பில் நெட்பிளிக்ஸில் வெளியான புல்புல் பேய் படத்தில் ஹீரோயினாக நடித்திருந்தார். அனிமல் படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமான அவர் பேட் நியூஸ் படத்திலும் நடித்துள்ளார். அடுத்ததாக பூல் புலாயா 3, தடக் 2 உள்ளிட்ட படங்களிலும் திரிப்தி திம்ரி நடித்து வருகிறார்.
லட்சத்திலிருந்து கோடிக்கு எகிறிய சம்பளம்: வெறும் 40 லட்சம் ரூபாய் தான் அனிமல் படத்தில் நடிக்கவே திரிப்தி திம்ரிக்கு சம்பளமாக வழங்கப்பட்டுள்ளதாக கூறுகின்றனர். ஆனால், தற்போது பாலிவுட்டில் ஹீரோயினாக மாறியுள்ள அவர் ஒரு படத்தில் நடிக்க 4 கோடி ரூபாய் வரை சம்பளத்தை உயர்த்தியிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
நடுராத்திரி நண்பர்: சமீபத்தில், நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் திரிப்தி திம்ரியிடம் ரன்பீர் கபூர் மற்றும் விக்கி கவுஷல் இருவரில் யாருடன் அதிகமாக நட்பாக பழகி வருகிறீர்கள் என்கிற கேள்வி முன் வைக்கப்பட விக்கி கவுஷல் தான் என்றும் நடுராத்திரி 3 மணிக்கு கூட நாங்க ரெண்டு பேரும் வெளியே ஊர் சுற்றுவோம் என திரிப்தி திம்ரி அளித்துள்ள பதில் ரசிகர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது.
கத்ரீனாவுக்கு தெரியுமா?: சோஷியல் மீடியாவில் உடனடியாக பல நெட்டிசன்களும் இந்த விஷயம் விக்கி கவுஷலின் மனைவி கத்ரீனா கைஃப்புக்கு தெரியுமா? என டேக் அடித்து வருகின்றனர். திரிப்தி திம்ரி நடிகை கத்ரீனா கைஃப் உடன் கூட நல்ல நட்புடன் தான் பழகி வருகிறார் என்றும் கடைசியாக பேட் நியூஸ் படத்தில் இருவரும் நடித்த நிலையில், நெருக்கமான நட்பு தொடர்வதாக கூறுகின்றனர்.


Click it and Unblock the Notifications











