போலீஸ்காரரை சரமாரியாக தாக்கிய மக்கள்.. இவங்களுக்கெல்லாம் கொரோனா வரனும்.. கொதித்த பிரபல நடிகை!

சென்னை: போலீஸ்காரர் ஒருவரை மக்கள் சரமாரியாக தாக்குவதை பார்த்த நடிகை வரலக்ஷ்மி, அவர்கள் அனைவரையும் கொரோனா வைரஸ் தாக்க வேண்டும் என கொந்தளித்துள்ளார்.

Recommended Video

VaraLakshmi Angry Speech | Nakkul Blasts Loosaஆ DA நீங்க | Sarathkumar Awarness

உலகம் முழுவதும் மின்னல் வேகத்தில் பரவி வரும் கொரோனா வைரஸால் இதுவரை 5 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். 24 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர்.

இந்தியாவிலும் நுழைந்துள்ள கொரோனா வைரஸால் இதுவரை 724 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 17 பேர் மரணமடைந்துள்ளனர்.

சீரியஸ்னஸ் தெரியாமல்

சீரியஸ்னஸ் தெரியாமல்

இந்தியாவில் நுழைந்துள்ள கொரோனாவை ஒழித்துக்கட்ட மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை போர்க்கால் அடிப்படையில் மேற்கொண்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஆனாலும் மக்கள் கொரோனா வைரஸின் சீரியஸ்னஸ் தெரியாமல் வெளியே சுற்றி வருகின்றனர்.

உயிரை பணயம் வைத்து

உயிரை பணயம் வைத்து

வெளியில் சுற்றும் நபர்களை போலீசார், வீட்டிற்கு செல்லும்படி கூறும் பல வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியாகிறது. சில போலீசார் அன்பாக சொல்லி அனுப்புகின்றனர். சில போலீசார் அவர்களின் ஸ்டைலில் சொல்கின்றனர். மக்கள் வெளியில் சுற்றுவதை தடுக்க போலீசார் தங்களின் உயிரை பணயம் வைத்து இரவு பகலாக வேலை பார்த்து வருகின்றனர்.

கண்டித்த போலீசார்

கண்டித்த போலீசார்

இந்நிலையில் கொரோனா வைரஸால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள மாநிலங்களில் ஒன்றான கர்நாடகா மாநிலத்தின் சில இடங்களிலும் மக்கள் அதன் தீவிரத்தை பொருட்படுத்தாமல் ஊர் சுற்றி வருகின்றனர். அந்த வகையில் பெங்களூரு சஞ்சய் நகரில் தெருவில் சுற்றிய இளைஞர்களை 2 போலீசார் கண்டித்தனர்.

கண்மூடித்தனமாக தாக்குதல்

கண்மூடித்தனமாக தாக்குதல்

இதனால் ஆத்திரமடைந்த அவர்கள் ஒன்று சேர்ந்துகொண்டு, இரண்டு போலீஸ்காரர்களையும் சரமாரியாக தாக்கினர். கன்னத்தில் அறைந்தும், முதுகில் அடித்தும் கீழே தள்ளிவிட்டும் அவர்கள் மீது கொலை வெறித்தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்த வீடியோ சமூக வலைளதங்களில் வைரலாகி வருகிறது.

என்ன முட்டாள்தனம்

என்ன முட்டாள்தனம்

இதனை தனது டிவிட்டர் பக்கத்தில் ஷேர் செய்துள்ள நடிகை வரலக்ஷ்மி போலீசாரை தாக்கியவர்களை கடுமையாக விளாசியுள்ளார். என்ன முட்டாள்தனம்.. !!! காவல்துறையினர் தங்கள் உயிரை நமக்காக பணயம் வைக்கிறார்கள். நீங்கள் அவர்களுக்கு இப்படிதான் திருப்பிச் செலுத்துகிறீர்கள்..

மன்னிப்பு கேட்கிறேன்

இந்த மக்கள் கொரோனா வைரஸை பெற தகுதியானவர்கள்!!! கொடூரம்.. இரத்தக்களரியான கொடூரம்.. அந்த முட்டாள்கள் சார்பாக நான் அந்த காவலரிடம் மன்னிப்பு கேட்க விரும்புகிறேன்!!! இவ்வாறு நடிகை வரலக்ஷ்மி தனது டிவிட்டில் பதிவிட்டுள்ளார்.

போலீசார் தாக்குதல்

போலீசார் தாக்குதல்

அதே வீடியோவின் தொடர்ச்சியாக மற்றொரு வீடியோவையும் ஷேர் செய்திருக்கிறார் வரலக்ஷ்மி. அது இதற்கு முன் நடந்த சம்பவத்திற்கு முன்னதாக நடந்தது. அதில் இரு போலீசாரும் கடைக்கு முன்பு நின்றிருந்த இளைஞரை சரமாரியாக தாக்குகின்றனர். லத்தியால் அடித்தும் காலால் எட்டி உதைத்தும் வெறித்தனமாக தாக்கியிருக்கின்றனர்.

மோசமாக்காதீர்கள்

மோசமாக்காதீர்கள்

இதற்கு கண்டனம் தெரிவித்துள்ள நடிகை வரலக்ஷ்மி, நான் இப்போதுதான் இதனை பார்க்கிறேன். ஒரு நாணயத்திற்கு எப்போதும் 2 பக்கங்கள் இருப்பதை இது நிரூபிக்கிறது. போலீஸ் மக்களை அடிக்க கூடாது.. இது ஊரடங்கு மக்களை அடிக்க இது ஒன்றும் குற்றம் அல்ல.. இதுவும் கண்டிக்கப்பட வேண்டும்.. எல்லோரும் நியாயமாக இருக்க வேண்டும் பதட்டங்கள் அதிகரித்து வருகின்றன. எல்லோரும் வீட்டுக்குள் இருங்கள் நிலைமையை மோசமாக்க வேண்டாம்.. என பதிவிட்டுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X