வொர்ஸ்ட்.. ஆலியா பட்டை அப்படி போட்டு அமுக்குறாரே.. இதெல்லாம் ரன்பீர் கபூர் பார்த்தா என்ன ஆகுறது?
மும்பை: பாலிவுட் நடிகை ஆலியா பட் ரன்பீர் கபூரை திருமணம் செய்துக் கொண்டு குழந்தையும் பெற்று வளர்த்து வருகிறார். நடிகர்கள் பங்கேற்ற பார்ட்டி ஒன்றில் ஆலியா பட்டை அத்துமீறி போட்டு அமுக்கும் நடிகரின் செயலை பார்த்து ரசிகர்கள் ஷாக் ஆகியுள்ளனர்.
சினிமாவில் எந்த அளவுக்கு நெருக்கமாக நடிகர்கள் நடிகைகள் நடித்து வருகிறார்களோ அதைவிட நெருக்கமாக பிரைவேட் பார்ட்டிகளில் சினிமா பிரபலங்கள் விளையாடி வரும் காட்சிகள் பொதுவாக வெளியே வருவதில்லை.

அதுபோன்ற வீடியோக்கள் வெளியானால் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய சர்ச்சை கிளம்ப தான் செய்கிறது. இந்த நடிகரா இப்படி நடந்து கொள்கிறார் என்கிற கேள்விகளையும் இது ரொம்ப தப்பு என்கிற கண்டனங்களையும் எழுப்பி வருகின்றனர். அப்படித்தான் அலியாபட்டிடம் நெருக்கமாக வருண் தவான் விளையாடிய காட்சிகள் தற்போது வெளியாகி சர்ச்சையை கிளப்பியுள்ளது.
ஆலியா பட்: பாலிவுட்டை தாண்டி ஹாலிவுட்டிலும் தற்போது ஆர்வம் செலுத்தி வருகிறார் ஆலியா பட். பாலிவுட்டின் முன்னணி நடிகைகளான தீபிகா படுகோன், பிரியங்கா சோப்ரா உள்ளிட்ட பல ஹாலிவுட் படங்களில் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது. கால் கடோட் நடித்த ஹார்ட் ஆஃப் தி ஸ்டோன் படத்தில் வில்லியாக நடித்து மிரட்டி இருந்தார்.
ராஜமெளலியுடன் பஞ்சாயத்து: ஆர்ஆர்ஆர் படத்தில் ராம்சரண் மற்றும் ஜூனியர் என்டிஆருக்கு சமமான கதாபாத்திரத்தில் ஆலியா பட் நடித்து வருவதாக தகவல்கள் வெளியாகின. அவரும் அதை நம்பித்தான் அந்தப் படத்தில் நடிக்கவே சம்மதித்தார். ஆனால், படம் வெளியான பின்னர் ஆலியா பட் ஒரு ஊறுகாய் போல பயன்படுத்தப்பட்டதை பார்த்து அவரது ரசிகர்கள் மட்டுமின்றி ஆலியா பட்டும் கடுப்பாகி படத்தின் புரமோஷன்களுக்கு கூட வருவதை தவிர்த்து விட்டார்.
கணவர் ரன்பீர் கபூர்: பாலிவுட்டின் முன்னணி நடிகரான ரன்பீர் கபூர் மற்றும் ஆலியா பட் இருவரும் இணைந்து பிரம்மாண்டமான பிரம்மாஸ்திரா படத்தில் நடித்தனர். அந்த படத்தில் இருவருக்கும் இடையே காதல் மலர்ந்த நிலையில் படம் வெளியாக 5 ஆண்டுகள் ஆன நிலையில், அதற்கு முன்னதாக இருவரும் திருமணம் செய்து குழந்தையையும் பெற்றுக் கொண்டனர். ரன்பீர் கபூர் அனிமல் படத்தின் வெற்றிக்கு பிறகு தற்போது சாய் பல்லவியுடன் இணைந்து ராமாயணம் படத்தில் நடித்து வருகிறார்.
அத்துமீறிய வருண் தவான்: ஆலியா பட்டுக்கு கை கொடுப்பது போல வருண் தவான் செய்ய அவரும் கை கொடுக்க வருகிறார். ஆனால், கை கொடுக்காமல் ஆலியா பட்டை வருண் தவான் ஏமாற்றுகிறார். அதன் பின்னர் ஆலியா பட்டை கட்டியணைத்து அவர் போட்டு அமுக்க ஆலியா பட் விடுன்னு அவரை பிடித்து தள்ளும் காட்சிகள் வெளியாகி பரபரப்பை கிளப்பியுள்ளன.
த்ரோபேக் வீடியோ: சில ஆண்டுகளுக்கு முன்னதாக நடைபெற்ற த்ரோபேக் வீடியோ இது என்றும் சொன்னாலும், பிரைவேட் பார்ட்டியில் அத்தனை நடிகர்களுக்கு முன்னதாக ஆலியா பட்டை போட்டு அப்படி வருண் தவான் அமுக்கி இருக்கக் கூடாது என்றும் அவருக்கு பிடிக்காத விஷயத்தை எப்படி வருண் தவான் அத்துமீறி செய்யலாம் என ரசிகர்கள் 'சச் எ எச்ச பிஹேவியர்' என கழுவு ஊற்றி வருகின்றனர். இதெல்லாம் வீடியோவில் சிக்கிய சாதாரண விஷயம் தான். சிக்காமல் ஏகப்பட்ட சில்மிஷங்கள் எல்லாம் எவ்வளவோ நடந்திருக்கும் என்றும் நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர். தெறி படத்தின் இந்தி ரீமேக்கில் தற்போது கீர்த்தி சுரேஷுடன் வருண் தவான் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











