கீர்த்தி சுரேஷ் இல்லாமல் நடந்த பேபி ஜான் பட ட்ரெயிலர் ரிலீஸ்.. வருண் தவானின் மிரட்டலான ட்ரெயிலர் இதோ

மும்பை: நடிகர் வருண் தவான், கீர்த்தி சுரேஷ், வாமிகா கபி, ஜாக்கி ஷெராப் உள்ளிட்டவர்கள் நடித்துள்ள பேபி ஜான் படம் வரும் டிசம்பர் 25ம் தேதி திரையரங்குகளில் ரிலீசாகவுள்ளது. தமிழில் விஜய், சமந்தா உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்திருந்த தெறி படத்தின் ரீமேக்காக தற்போது பேபி ஜான் படம் உருவாகியுள்ளது.

இந்த படத்தின் பிரமோஷன்கள் துவங்கியுள்ள நிலையில் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியாகி மிக சிறப்பான வரவேற்பை பெற்றிருந்தது. இந்நிலையில் படத்தின் ட்ரெயிலர் ரிலீஸ் நிகழ்ச்சி இன்றைய தினம் மும்பையில் மிகவும் பிரம்மாண்டமாக நடந்துள்ளது. ஆனால் இந்த நிகழ்ச்சியில் நடிகை கீர்த்தி சுரேஷ் பங்கேற்கவில்லை.

varun dhawan keerthi suresh baby john movie

பேபி ஜான் படம்: நடிகர் விஜய், சமந்தா, எமி ஜாக்சன், பேபி நைனிகா, இயக்குநர் மகேந்திரன் உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்து அட்லி இயக்கத்தில் வெளியான தெறி படம் மிகப்பெரிய பிளாக்பஸ்டர் ஹிட்டை கொடுத்திருந்தது இந்த படத்தில் விஜய் மற்றும் நைனிகா காம்பினேஷன், விஜய் மற்றும் சமந்தா கெமிஸ்ட்ரி, போலீஸ் அதிகாரியாக விஜய்யின் கம்பீரம், வில்லனாக நடித்திருந்த இயக்குநர் மகேந்திரனின் மாஸான நடிப்பு போன்ற பல விஷயங்கள் சக்சஸுக்கான காரணங்களாக அமைந்தன. இந்நிலையில் இயக்குநர் அட்லி தயாரிப்பில் தெறி படத்தின் ரீமேக்காக ஹிந்தியில் பேபி ஜான் படம் உருவாகியுள்ளது.

varun dhawan keerthi suresh baby john movie

ட்ரெயிலர் ரிலீஸ்: வருண் தவான், கீர்த்தி சுரேஷ், வாமிகா கபி உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்துள்ள இந்தப்படம் வரும் 25ம் தேதி சர்வதேச அளவில் திரையரங்குகளில் ரிலீசாக உள்ள நிலையில் அடுத்தடுத்த பிரமோஷன்களில் படக்குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் இன்றைய தினம் இந்த படத்தின் ட்ரெயிலர் ரிலீஸ் நிகழ்ச்சி மும்பையில் மிகவும் பிரம்மாண்டமாக நடத்தப்பட்டுள்ளது. இதில் வருண் தவான், நடிகை வாமிகா கபி உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டு ட்ரெயிலரை ரிலீஸ் செய்துள்ளனர். இந்த ட்ரெயிலர் மிகவும் மிரட்டலாக அமைந்துள்ளது. கடந்த சில வாரங்களுக்கு முன்புதான் வருண் தவான் -சமந்தா நடிப்பில் சிட்டாடல் ஹனி பன்னி வெப் தொடர் ரிலீசாகியிருந்தது.

varun dhawan keerthi suresh baby john movie

கீர்த்தி சுரேஷ் பங்கேற்கவில்லை: இந்நிலையில் அடுத்ததாக வருண் தவானின் பேபி ஜான் படம் ரிலீசாகவுள்ளது. இந்த ட்ரெயிலர் மிகவும் மிரட்டலாக காணப்படும் நிலையில் விஜய்யின் தெறி பட வசூலையும் வரவேற்பையும் பேபி ஜான் படமும் கொடுக்கும் என்று எதிர்பார்க்கலாம். இதனிடையே இந்த நிகழ்ச்சியில் நடிகை கீர்த்தி சுரேஷ் பங்கேற்கவில்லை. இன்னும் சில தினங்களில் அவரது திருமணம் கோவாவில் நடக்க உள்ளதாக கூறப்பட்டுள்ள நிலையில் அந்த கொண்டாட்டங்களில் அவர் தற்போது உள்ளார். இதனால் அவரால் தற்போது பேபி ஜான் படத்தின் ட்ரெயிலர் ரிலீஸ் நிகழ்ச்சியில் பங்கேற்க முடியவில்லை.

varun dhawan keerthi suresh baby john movie

பாலிவுட்டில் என்ட்ரியாகும் கீர்த்தி சுரேஷ்: பேபி ஜான் படம் மூலம் கீர்த்தி சுரேஷ் பாலிவுட்டில் என்ட்ரி கொடுத்துள்ள நிலையில் படம் அவருக்கு சிறப்பாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. படத்தில் அவர் சமந்தாவின் கேரக்டரில் நடித்துள்ளளார். கடந்த சில தினங்களுக்கு முன்னதாக இந்த படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கள் வெளியான நிலையில் இதில் வருண் தவானுடன் இணைந்து சூப்பர் குத்தாட்டம் போட்டிருந்தார் கீர்த்தி சுரேஷ். இந்தப் பாடல் ஏராளமான ரசிகர்களை கவர்ந்து யூடியூபில் ட்ரெண்டிங்கில் இருந்தது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X