Varun Dhawan: "கர்ப்பமானார் பிரபல பாலிவுட் ஹீரோ.." ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்த வருண் தவான்
மும்பை: பாலிவுட்டில் பிஸியான நடிகராக வலம் வரும் வருண் தவான், விரைவில் தெறி இந்தி ரீமேக்கில் நடிக்கவுள்ளார். அட்லீ இயக்கத்தில் விஜய் நடித்த முதல் படமான தெறி சூப்பர் ஹிட் அடித்தது. அதன் ரீமேக்கில் கீர்த்தி சுரேஷுடன் இணைந்து நடிக்கவுள்ளார் வருண் தவான். இந்நிலையில் அவர் தனது இன்ஸ்டா பக்கத்தில் நாங்கள் கர்ப்பம் ஆகியுள்ளதாக பதிவிட்டு ரசிகர்களுக்கு ஷாக்கிங் சர்ப்ரைஸ் கொடுத்துள்ளார்.

கர்ப்பமான வருண் தவான்
சீரியலில் இருந்து அசிஸ்டெண்ட் டைரக்டராக தனது சினிமா பயணத்தை தொடங்கியவர் வருண் தவான். ஷாருக்கானின் மை நேம் இஸ் கான் படத்தில் உதவி இயக்குநராக வேலை பார்த்த வருண் தவான், அதன்பின்னர் நடிப்பில் பிஸியாகிவிட்டார். ஸ்டூடண்ட் ஆஃப் தி இயர், மெயின் தேரா ஹீரோ, பத்லாபூர், தில்வாலே, டிஷ்யூம் உட்பட பல படங்களில் நடித்துள்ளார்.
தற்போது பேபி ஜான் படத்தில் நடித்து வரும் வருண், விரைவில் அட்லீயுடன் இணைகிறார். விஜய் நடிப்பில் அட்லீ இயக்கிய தெறி திரைப்படம் சூப்பர் ஹிட் அடித்தது. இந்தப் படத்தின் இந்தி ரீமேக்கில் விஜய் கேரக்டரில் வருண் தவான் நடிக்கவுள்ளார். இந்தப் படத்தில் வருண் தவான் ஜோடியாக நம்ம ஊர் கீர்த்தி சுரேஷ் நடிக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது. அதேபோல் வாமிகா கபியும் முக்கியமான ரோலில் நடிக்க கமிட்டாகியுள்ளார்.
இதனிடையே வருண் தவானின் இன்ஸ்டா போஸ்ட் ரசிகர்களுக்கு ஷாக்கிங் சர்ப்ரைஸ் கொடுத்துள்ளது. நடாஷா தலால் என்பவரை கடந்த 2021ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார் வருண் தவான். திருமணமானதில் இருந்தே அடிக்கடி ரொமான்ஸ் மூடில் டூர் சென்று வந்தனர் வருணும் நடாஷாவும். இந்நிலையில் தற்போது நடாஷா தலால் கர்ப்பம் ஆகியுள்ளதாக வருண் தவான் அறிவித்துள்ளார்.
இதுபற்றி இன்ஸ்டாவில் போஸ்ட் போட்டுள்ள அவர், "நாங்கள் கர்ப்பமாக இருக்கிறோம்" என குறிப்பிட்டுள்ளார். அதாவது அமெரிக்கா போன்ற வெளிநாடுகளில் "We Are Pregnant" என்று சொல்வது தம்பதிகளின் வழக்கம். ஆனால், இந்தியாவில் ஒரு ஆண் கர்ப்பம் ஆகியுள்ளதாக சொன்னால் அதில் பல கேலியும் கிண்டலும் வரும். அதனை பிரேக் செய்யும் விதமாக 'நாங்கள் கர்ப்பமாக இருக்கிறோம்' என தெரிவித்துள்ளார் வருண் தவான்.
இதனையடுத்து வருண் தவானின் இன்ஸ்டா போஸ்ட்டில் கரீனா கபூர், பிரியங்கா சோப்ரா, சமந்தா உள்ளிட்ட பல பிரபலங்கள் வாழ்த்துத் தெரிவித்து வருகின்றனர். இது ஒரு மகிழ்ச்சியான தொடக்கம், இனி உங்கள் வாழ்வு சிறக்கட்டும் என பலவிதமாக வாழ்த்தி வருகின்றனர். இன்ஸ்டாவில் கர்ப்பம் ஆனதை அறிவித்த வருண் தவான், தனது மனைவி நடஷாவின் வயிற்றில் முத்தம் கொடுக்கும் ஒரு போட்டோவையும் ஷேர் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











