ஏ.ஆர். ரஹ்மானை விடாமல் பிடித்து முத்தம் கொடுத்த ரேகா.. செல்ஃபி வீடியோ எடுத்து செம ஹேப்பியான இசைப்புயல்!

சென்னை: விஜய்யின் கில்லி, சச்சின், தனுஷின் யாரடி நீ மோகினி உள்ளிட்ட பல படங்கள் தமிழ் சினிமாவில் ரீ ரிலீஸ் ஆகி வருவதை போல மற்ற மொழிகளிலும் ரீ ரிலீஸ் கலாச்சாரம் தற்போது சூடுபிடித்துள்ளது. பழம்பெரும் நடிகை ரேகா நடிப்பில் கடந்த 1981ம் ஆண்டு வெளியான உம்ரா ஜான் (Umrao Jaan) திரைப்படம் மீண்டும் ரீ ரிலீஸ் ஆகப்படும் நிலையில், வியாழக்கிழமை மும்பையில் சினிமா பிரபலங்களுக்காக பிரத்யேக ப்ரீமியர் காட்சி திரையிடப்பட்டது.

பாலிவுட்டின் முன்னணி நடிகர்களான அமீர்கான், ஹேமா மாலினி, அனில் கபூர் உள்ளிட்ட பல பிரபலங்கள் நடிகை ரேகா ஏற்பாடு செய்த விழாவில் பங்கேற்று ரெட் கார்ப்பெட்டிலும் ராஜ நடை போட்டு விழாவை வெகு சிறப்பாக மாற்றினர்.

Veteran Actress Rekha kissed AR Rahman at Umrao Jaan premiere video goes viral
Photo Credit:

வரும் விருந்தினர்களை எல்லாம் முகப்பொலிவுடன் வரவேற்று அவர்களுடன் நடனமாடுவது,கட்டியணைப்பது மற்றும் முத்தம் கொடுப்பது என தனது ஒட்டுமொத்த அன்பையும் நேற்று இரவு நடிகை ரேகா வெளிப்படுத்தினார்.

அனில் கபூருடன் டான்ஸ்: பாலிவுட் நடிகர் அனில் கபூர் ரெட் கார்ப்பெட்டில் நடந்து வருவதை பார்த்து அவரை ரேகா வரவேற்றதும் கையை கட்டிக் கொண்டு நின்றிருந்தார். உடனே அவரை ஹக் செய்த ரேகா அவருடன் தனது சிக்னேச்சர் ஸ்டெப்ஸை போட்டு நடனமாடியது பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது. அமீர்கான், ஹேமா மாலினி மற்றும் தபு உள்ளிட்ட பிரபலங்களை ரொம்பவே சந்தோஷத்துடன் உற்சாகத்துடன் நடிகை ரேகா வரவேற்றார்.

ஏ.ஆர். ரஹ்மானுக்கு முத்தம்: இசை காவியமான உம்ரா ஜான் படத்தின் ரீ ரிலீஸ் ப்ரீமியர் நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மானும் சென்றிருந்தார். அவரை ரேகா பார்த்ததும் உற்சாகமாக வரவேற்று அவரது கன்னத்தில் முத்தமும் கொடுத்தார். மேலும், விடாமல் அவரது தாடையை பிடித்தும் கொஞ்சினார். பழம்பெரும் நடிகையை பார்த்ததே பாக்கியம் என நினைத்த ஏ.ஆர். ரஹ்மான் அந்த அழகான தருணத்தை செல்ஃபி வீடியோவாக எடுத்து மகிழ்ந்த காட்சிகள் இணையத்தில் பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.

ஐவரி கலர் உடையில் ரேகா: 1981ம் ஆண்டு முசாஃபர் அலி இயக்கத்தில் ரேகா, நசிரூதின் ஷா, ஃபரூக் ஷேக் உள்ளிட்ட பலர் நடித்த உம்ரா ஜான் திரைப்படம் ஏகப்பட்ட ரசிகர்களை கவர்ந்து சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது. அதனை மீண்டும் ரீ ரிலீஸ் செய்யவுள்ள நிலையில், பாலிவுட் பிரபலங்கள் மற்றும் சினிமா துறையை சார்ந்த ஜாம்பவான்கள் பலரும் ரேகாவின் அழைப்பை ஏற்று வந்த நிலையில், ஐவரி கலர் உடையில் அழகு பதுமையாக பல வயது குறைந்த உற்சாகத்துடன் 70 வயதாகும் நடிகை ரேகா துள்ளிக் குதித்ததை பார்த்து அவரது ரசிகர்களும் பாலிவுட் பிரபலங்களும் ஹேப்பி ஆகியுள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X