கத்ரீனா கைஃப், விக்கி கௌஷலுக்கு ஜெய்பூரில் திருமணம்… தடபுடலா நடந்து வரும் ஏற்பாடு!

மும்பை : பாலிவுட் நடிகை கத்ரீனா கைஃப், விக்கி கௌஷலின் திருமண ஏற்பாடுகள் பிரம்மாண்டமான முறையில் தடபுடலாக நடந்து வருகின்றன.

இந்தி சினிமாவில் அதிகம் சம்பளம் வாங்கும் நடிகைகளில் கத்ரீனா கைஃப் ஒருவர்.

அமிதாப் பச்சன், ஜாக்கி ஷெரப் பத்மலட்சுமி உட்பட பலர் நடித்த பூம் படத்தின் மூலம் பாலிவுட்டில் காலடி எடுத்து வைத்த இவர், தற்போது இந்தி சினிமாவில் கவர்ச்சிப்புயலாக உலா வருகிறார்.

கத்ரினா கைஃப்

கத்ரினா கைஃப்

பாலிவுட் கனவுக்கன்னி காத்ரினா கைஃப், ரேஸ், சிங் இஸ் கிங், பாடிகார்ட், அக்னிபாத், ஏக்தா டைகர், டைகர் ஜிந்தா ஹே உட்பட பல படங்களில் நடித்துள்ளார். பாலிவுட்டில் நம்பர் ஒன் நடிகைகளில் ஒருவராக நடிகை காத்ரினா கைஃப் திகழ்கிறார்.

ஜெய்பூரில் திருமணம்

ஜெய்பூரில் திருமணம்

கத்ரினாவும் விக்கி கௌஷலும் காதலித்து வந்ததாக கூறப்பட்ட நிலையில், இருவரும் டிசம்பர் மாதம் திருமணம் செய்து கொள்ள உள்ளனர். இவர்களின் திருமணம் ஜெய்பூரில் டிசம்பர் 7 முதல் 9 வரை பிரமாண்டமான சவாய் மாதோபூரில் உள்ள சிக்ஸ் சென்ஸ் சொகுசு ஹோட்டலில் நடைபெறும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

விருந்தினர்களை வரவேற்க

விருந்தினர்களை வரவேற்க

இந்த ஜோடியின் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்ள இவர்களது நண்பர்கள் இப்போதிலிருந்த ஆயத்தமாகத் தொடங்கி விட்டனர். இதனால் தம்பதிகளும் தங்களது நண்பர்கள் மற்றும் விருந்தினர்களை வரவேற்க வாடகை காரை மொத்தமாக முன்பதிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

வாடகை கார் தட்டுப்பாடு

வாடகை கார் தட்டுப்பாடு

இந்த காதல் ஜோடியின் திருமணம் , ஜெய்பூரில் நடைபெற உள்ளதால், திருமண தேதியில் ஜெய்ப்பூரில் நடைபெற உள்ள திரைப்பட படப்பிடிப்பு மற்றும் தொலைக்காட்சி நடிகர்களுக்கு உயர் ரக கார்கள் கிடைப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

விஐபிக்கள்

விஐபிக்கள்

இவர்களின் திருமணத்தில், கரண் ஜோஹர், அலி அப்பாஸ் ஜாபர், கபீர் கான் மற்றும் மினி மாத்தூர், ரோஹித் ஷெட்டி, சித்தார்த் மல்ஹோத்ரா மற்றும் கியாரா அத்வானி, வருண் தவான் மற்றும் நடாஷா தலால் மற்றும் பல விஐபிக்கள் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X