அடுத்த டைவர்ஸ் ரெடியாகிடும் போல.. அனிமல் ஹீரோயினுடன் அப்படியொரு ஆட்டம்.. கத்ரீனா கைஃப் கண்டுக்கலையா?

மும்பை: விக்கி கவுஷலின் புதிய வீடியோ தான் பாலிவுட்டில் பெரும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. ஷாருக்கான் உடன் தீபிகா படுகோன் பதான் படத்திற்காக கவர்ச்சி ஆட்டம் போட்டதும் ஏகப்பட்ட கிசுகிசுக்கள் கிளம்பின. அதை விட அதிகமாக கத்ரீனா கைஃப் மற்றும் அவரது கணவர் விக்கி கவுஷலுக்கும் சண்டையே வெடித்து விட்டதாக கிசுகிசுக்கள் கிளம்பியுள்ளன.

சந்தீப் ரெட்டி வங்கா இயக்கத்தில் ரன்பீர் கபூர், ராஷ்மிகா மந்தனா, திரிப்தி திம்ரி நடித்த அனிமல் திரைப்படம் கடந்த ஆண்டு வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ராஷ்மிகா மந்தனாவையே திரிப்தி திம்ரி இடைவேளைக்குப் பிறகு படத்தில் வந்து ஓரங்கட்டி விட்டார்.

vicky kaushal tripti dimri katrina kaif

ஆடைகள் ஏதும் அணியாமல் ரன்பீர் கபூருடன் படுக்கையறை காட்சிகளில் நடித்து ரசிகர்களை பதை பதைக்க வைத்த திரிப்தி திம்ரி அடுத்து விக்கி கவுஷலின் உடன் அதை விட படு நெருக்கமாக ஒரே லிப் லாக் காட்சிகளாக நடித்துள்ள பாடல் வெளியாகி பஞ்சாயத்தை கிளப்பியுள்ளது.

vicky kaushal tripti dimri katrina kaif

கத்ரீனா கைஃப் கணவர்: பாலிவுட்டின் திறமையான நடிகராக வலம் வந்த விக்கி கவுஷலை நடிகை கத்ரீனா கைஃப் கடந்த 2021ம் ஆண்டு திருமணம் செய்துக் கொண்டார். திருமணத்துக்குப் பிறகு விக்கி கவுஷல் தனது ரூட்டையே மாற்றிக் கொண்டு தொடர்ந்து கில்மா டைப் படங்களிலேயே நடித்து வருகிறார். அனிமல் ஹீரோயினுடன் அவர் தற்போது போட்டுள்ள ஆட்டம் இணையத்தில் அனலை கிளப்பியிருக்கிறது.

அனிமல் ஹீரோயின்: ரன்பீர் கபூரின் அனிமல் படத்திற்கு பிறகு திரிப்தி திம்ரிக்கு ஏகப்பட்ட வாய்ப்புகள் குவிந்ததாக கூறப்படுகிறது. அது எல்லாமே இந்த மாதிரி ஐட்டம் சாங் ஆடத்தானா? என ரசிகர்கள் கிண்டல் செய்யும் அளவுக்கு அவரது இமேஜ் டோட்டல் டேமேஜாக மாறிவிட்டது. சாஃப்ட் பார்ன் நடிகை என்றே நெட்டிசன்கள் திரிப்தி திம்ரியை அழைத்து வருகின்றனர். புஷ்பா 2 படத்தில் சமந்தாவுக்கு பதிலாக இவர் தான் ஐட்டம் பாடலுக்கு டான்ஸ் ஆடியுள்ளார் என்றும் கூறியுள்ளனர்.

எல்லை மீறிய லிப் லாக்: விக்கி கவுஷல், திரிப்தி திம்ரி நடித்துள்ள 'பேட் நியூஸ்' திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள 'ஜானம்' பாடலில் தான் இருவரும் ஆடைகளை கழட்டி அந்தரங்க உறவில் ஈடுபடுவது போன்றும், உதட்டை உதட்டால் கடித்து, லிப் லாக் முத்தக் காட்சிகளிலேயே முழு பாடலையும் உருவாக்கி உள்ளனர். அதை பார்த்த பாலிவுட் ரசிகர்கள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர். சீக்கிரமே பாலிவுட்டில் அடுத்த டைவர்ஸ் சர்ச்சை வெடித்து விடும் என கமெண்ட்டுகள் குவிந்து வருகின்றன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X