விருது விழாவில் நடந்த அவமானம்.. நைட் தூக்கமே வரல..நினைத்து குமுறிய பாலிவுட் நடிகை!

சென்னை: டர்ட்டி பிக்சர் என்ற படத்தில் சில்க் ஸ்மிதாவாக நடித்து நம் மனதை கவர்ந்தவர் தான் வித்யா பாலன். அந்த படத்தில் சிறப்பாக நடித்ததற்காக அவர் தேசிய விருதை பெற்றார். பெண்களை மையப்படுத்திய பல படங்களில் நடித்து வரும் இவர் விருது வழங்கும் விழாவில் தனக்கு நடந்த அவமானம் குறித்து மனம் திறந்து பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.

கேரளாவில் பிறந்து வளர்ந்தாலும் மலையாள திரை உலகை ஒதுக்கிவிட்டு பாலிவுட்டுக்கு சென்று முன்னணி நடிகையாக மாறியவர் வித்யா பாலன். தொடர்ந்து கதைக்கும் கதாபாத்திரங்களுக்கும் முக்கியத்துவம் கொடுத்து நடித்து வரும் வித்யா பாலன். சினிமாவில் தனக்கு ஏற்பட்ட கசப்பான அனுபவத்தை பேட்டி ஒன்றில் மனம் திறந்து கூறியுள்ளார்.

Vidya Balan recently shared how she felt when she was bullied at an award show

அவமானப்பட்டேன்: அதில், ஹேய் பேபி படத்தில் நடித்ததற்காக எனக்கு விருது கொடுத்தனர். அது என்ன விருது என்றால், ரசிகர்களின் ஆதரவை பெறாததற்கான விருது வழங்கப்பட்டது. அந்த விருதை அறிவித்தபோது, எனது உடைகள் ஆடை வடிவமைப்பாளர் தேர்வு செய்தது தான்.. நான் தேர்வு செய்தது அல்ல என்று எடுத்து கூறியும், அவர்கள் கேட்கவில்லை, நான் சொல்வதை காதில் வாங்கக்கூட அவர்கள் தயாராக இல்லை. அந்த நேரத்தில் தான் தைரியமாக பேசமுடியாமல் தவித்தேன். மேலும், அந்த விருதை மவுனமாக வாங்கிக்கொண்டு இருக்கைக்கு வந்துவிட்டேன்

நைட் தூக்கமே வரல: ஆனால், அந்த அவமானத்தை நினைத்து நினைத்து அன்று இரவெல்லாம் நான் தூங்கவில்லை, தனிமையாக இருப்பதுபோல் உணர்ந்தேன். சினிமா பின்னணி இல்லாமல் திரையுலகுக்கு வந்தால் இதுபோன்ற அவமானங்களை எதிர்கொள்ள வேண்டும் என்று புரிந்து கொண்டதாகவும், தனக்கு மாடர்ன் உடைகளை விட புடவை தான் மிகவும் பிடித்தமான உடை, எப்போதும் புடவை அணிவதைத்தான் நான் விரும்புவேன் என்று அந்த பேட்டியில் தனது வாழ்க்கையில் நடந்த கசப்பான அனுபவத்தை வித்யா பாலன் நினைவு கூர்ந்துள்ளார்.

திறமையான நடிகை: நடிகை வித்யா பாலன் பாலோ தோகோ என்ற வங்காளத் திரைப்படத்தில் நடித்து தனது திரைப்பயணத்தைத் தொடங்கினார். இதையடுத்து இந்தியில் பரினீதா திரைப்படத்தில் நடித்தார். இவர் நடித்த முதல் திரைப்படத்திலேயே அறிமுக நடிகைக்கான பிலிம்பேர் விருதினைப் பெற்றார். அதன்பின், லகே ரஹோ முன்னாபாய், ஹே பேபி மற்றும் பூல் மலையா, ஓம் சாந்தி ஓம் ஆகிய படங்களில் நடித்தார். இதைத்தொடர்ந்து, மறைந்த நடிகை சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கை வரலாற்றுத் திரைப்படமான டர்ட்டி பிக்சர் திரைப்படத்தில் நடித்தார். அந்தப்படத்தின் வெற்றிக்குப்பிறகு நாயகியை மையமாகக் கொண்ட திரைப்படங்களில் கவனம் செலுத்தி நடித்து வருகிறார்.

திருமணத்திற்கு பின்னும் பிஸி: நடிகை வித்யா பாலன் படங்களில் பிஸியாக நடித்துக்கொண்டிருந்த போது திடீரென உடல் எடை அதிகரித்து காணப்பட்டு பல உருவகேலியை எதிர்கொண்டார். இதையடுத்து, யுடிவு நிறுவனத் தலைவரும், திரைப்படத் தயாரிப்பாளருமான சித்தார்த் ராயை காதலித்து வருவதாகவும் அவருடன் டேட்டிங் செல்வதாகவும், வெளிப்படையாக அறிவித்தார். இதையடுத்து இருவரும், 2012ம் ஆண்டு மும்பை பாந்த்ரா நட்சத்திர ஓட்டலில் திருமணம் செய்து கொண்டனர். திருமணத்திற்கு பின்பும் தொடர்ந்து திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X