twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    சகுந்தலா தேவி டிரைலர் ரிலீஸ்.. டர்ட்டி பிக்சருக்கு பிறகு வித்யா பாலனின் தரமான சம்பவம் வெயிட்டிங்!

    |

    மும்பை: மனித கம்ப்யூட்டர் சகுந்தலா தேவியின் வாழ்க்கை வரலாற்று படமான சகுந்தலா தேவி படத்தின் டிரைலர் தற்போது வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்று வருகிறது.

    பயோபிக் படங்களுக்கென அளவு எடுத்து செய்த நடிகை போல கச்சிதமாக எந்த ஒரு கதாபாத்திரத்திலும் பொருந்தக் கூடியவர் வித்யா பாலன்.

    சில்க் ஸ்மிதாவின் பயோபிக் படமான டர்ட்டி பிக்சரில் நடித்து தேசிய விருதையும் இவர் தட்டிச் சென்றது குறிப்பிடத்தக்கது.

    வெப் சீரிஸில் நிர்வாணமாக நடிக்கப்போகும் ஆண்ட்ரியா.. தீயாய் பரவும் தகவல்!வெப் சீரிஸில் நிர்வாணமாக நடிக்கப்போகும் ஆண்ட்ரியா.. தீயாய் பரவும் தகவல்!

    மனித கம்ப்யூட்டர்

    மனித கம்ப்யூட்டர்

    கர்நாடகாவை சேர்ந்த ஏழ்மையான குடும்பத்தில் பிறந்த சகுந்தலா தேவி, சிறு வயதில் தனது தந்தையுடன் கார்ட்ஸ் விளையாடும் போதும், அவருக்குள் இருந்த கணித திறமை வெளிப்பட்டது. கர்நாடகா முதல் வெளிநாடு வரை தனது கணித ஆற்றலால் பல அறிஞர்களை மெய் சிலிர்க்க வைத்தவர் சகுந்தலா தேவி.

    கின்னஸ் சாதனை

    கின்னஸ் சாதனை

    கம்ப்யூட்டர் கூட கணக்கு தப்பா சொல்லும், ஆனால், இவரது மூளை ஒருபோதும், கணிதத்தில் பிழையே செய்தது இல்லை என்ற பாராட்டை பெற்றுள்ளார். மின்னல் வேகத்தில், மிகப்பெரிய கணக்குகளை சரவெடியாக சொல்லி அசத்திய இவருக்கு 1982ம் ஆண்டு கின்னஸ் சாதனை விருதும் கிடைத்தது குறிப்பிடத்தக்கது.

    சில்க் ஸ்மிதாவாக

    சில்க் ஸ்மிதாவாக

    கடந்த 2011ம் ஆண்டு மிலன் லூத்ரியா இயக்கத்தில் வெளியான சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கை வரலாறு படமான டர்ட்டி பிக்சரில் சில்க்காக நடித்து அசத்தி இருந்தார் வித்யா பாலன். அந்த படத்திற்காக அவருக்கு சிறந்த நடிகைக்கான தேசிய விருது உள்ளிட்ட ஏகப்பட்ட விருதுகள் குவிந்தன. இந்நிலையில், தற்போது சகுந்தலா தேவி பயோபிக்கில் சகுந்தலா தேவியாகவே வாழ்ந்து இருக்கிறார்.

    கலர்ஃபுல் டிரைலர்

    கலர்ஃபுல் டிரைலர்

    கணித மேதையின் வாழ்க்கை வரலாறு படம் என்பதால், போர் அடித்து விடக் கூடாது என்பதில் இயக்குநர் அனு மேனன் போட்டிருக்கும் உழைப்பு தற்போது வெளியாகி இருக்கும் டிரைலரிலேயே தெரிகிறது. தியேட்டரில் வெளியாகி இருக்க வேண்டிய இந்த படம், அமேசான் பிரைமில் வரும் ஜூலை 31ம் தேதி வெளியாகிறது.

    அசத்தல் நடிப்பு

    அசத்தல் நடிப்பு

    தங்கல் படத்தில் மகளாக நடித்த சான்யா மல்கோத்ரா, அமித் சாத் உள்ளிட்டோர் இந்த படத்தில் நடித்துள்ளனர். குழந்தை பருவம் முதல் பருவ பெண்ணுக்கு தாய் என பல்வேறு தளங்களில் பயணிக்கும் வாழ்க்கை பயணத்தில் ஒவ்வொரு நொடியிலும் ஒவ்வொரு பிரேமிலும் வித்யா பாலன் அவ்வளவு எனர்ஜியை வெளிப்படுத்தி இருக்கிறார். நிச்சயம் இந்த படம் சமீபத்தில் வெளியான நேரடி ஓடிடி படங்களுக்கு சவால் விடும் என்பதில் சந்தேகமே இல்லை என்றே சொல்லலாம்.

    English summary
    Shakuntala Devi is an upcoming Indian Hindi-language biographical film directed and written by Anu Menon. The film stars Vidya Balan as Shakuntala Devi.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X