காதலியுடன் தாஜ்மஹாலில் டேட்டிங்... கசிந்தது அஞ்சான் பட நடிகரின் ரொமான்டிக் போட்டோஸ்!
டெல்லி: அஞ்சான் பட வில்லன் நடிகரான வித்யூத் ஜாம்வால் தனது காதலியுடன் தாஜ்மஹாலில் ரிலாக்ஸ் செய்யும் போட்டோக்கள் வெளியாகி வைரலாகி வருகிறது.
சக்தி என்ற தெலுங்கு படத்தின் மூலம் சினிமாவுக்கு அறிமுகமானவர் வித்யூத் ஜாம்வால். இந்தப் படத்தில் நெகட்டிவ் ரோலில் நடித்தார்.
அதனை தொடர்ந்து ஃபோர்ஸ் என்ற இந்தி படத்தின் மூலம் பாலிவுட் சினிமாவுக்கு என்ட்ரி கொடுத்தார். இந்த படத்திலும் வில்லனாகதான் நடித்தார் வித்யூத் ஜாம்வால்.

துப்பாக்கியில் மிரட்டல் வில்லன்
தொடர்ந்து இந்தி மற்றும் தெலுங்கு படங்களில் நடித்து வந்த வித்யூத் ஜாம்வால் அஜித்தின் பில்லா 2 படத்தின் மூலம் தமிழுக்கு அறிமுகமானார். அந்த படத்திலும் வில்லனாக மிரட்டிய வித்யூம் ஜாம்வால் விஜய்யின் துப்பாக்கி படத்திலும் நடித்திருந்தார். இதிலும் வில்லன் நடிகராக பட்டையை கிளப்பினார் வித்யூத் ஜாம்வால்.

அஞ்சானில் சூர்யாவுக்கு ஃபிரண்ட்
கடைசியாக சூர்யாவின் அஞ்சான் படத்தில் நடித்தார் வித்யூத் ராம்வால். இந்தப் படத்தில் சூர்யாவின் நண்பராக நடித்த வித்யூத் ஜாம்வால் ரசிகர்கள் மத்தியில் இன்னும் பிரபலமானர். இதனை தொடர்ந்து விஜய்யின் 65வது படமான பீஸ்ட் படத்தில் வித்யூத்தான் வில்லன் என்று தகவல் பரவியது.

வித்யூத்தின் பர்சனல் போட்டோஸ்
இதுகுறித்து பேசிய வித்யூத், நானும் காத்திருக்கிறேன்.. அந்த தகவல் உண்மை இல்லை என்று கூறி விளக்கம் அளித்தார் வித்யூத். தற்போது சனக், குதா ஹஃபீஸ் சாப்டர் 2, ஐபி71 ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் வித்யூத் ஜாம்வாலின் பர்சனல் போட்டோக்கள் சில வெளியாகி இணையத்தை தெறிக்க விட்டு வருகிறது.

ஃபேஷன் டிசைனருடன் காதல்
அதாவது நடிகர் வித்யூத் ஜாம்வால் நடிகை மோனா சிங்குடன் டேட்டிங் செய்து கொண்டிருந்தார். இரண்டு வருட உறவுக்குப் பிறகு, இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்தனர். தற்போது, ஃபேஷன் டிசைனர், நந்திதா மஹ்தானியுடன் வித்யுத் ஜம்வால் நிச்சயதார்த்தம் செய்ததாக தகவல்கள் பரவி வருகின்றன.

நிச்சயம் முடிந்தது - நடிகை தகவல்
வித்யூத் ஜாம்வால், நடிகை நேஹா துபியாவுடன் இணைந்து சனக் திரைப்படத்தில் நடித்து வருகிறார். அவரே நடிகர் வித்யூத் ஜாம்வாலின் நிச்சயதார்த்த செய்தியை தனது டிவிட்டர் பக்கத்தில் உறுதிப்படுத்தியுள்ளார். அதாவது நந்திதா மஹ்தானியுடன் வித்யூத் ஜாம்வாலுக்கு நிச்சயதார்த்தம் முடிந்துவிட்டதாக தெரிவித்துள்ளார்.

நிச்சய மோதிரம் - போட்டோக்கள் நீக்கம்
தாஜ்மஹாலில் இருந்து வித்யூத் மற்றும் நந்திதா இருக்கும் போட்டோக்களை பகிர்ந்த நேகா "சிறந்த செய்தி வாழ்த்துக்கள் என்று இருவரின் இன்ஸ்டா ஹேண்டிலையும் கூறிப்பிட்டுள்ளார். பின்னர் நேகா அந்த போட்டோக்களை நீக்கி விட்டார். ஆனாலும் அவரது ரசிகர்கள் அந்த போட்டோக்களை ஷேர் செய்து விட்டனர்.

நிச்சயம் முடிந்தது உறுதியாகியுள்ளது
அந்த போட்டோவில் வித்யூத் மற்றும் நந்திதா கைகளைப் பிடித்துக் கொண்டுள்ளளனர். மேலும் அவரது காதலியான நந்திதா மஹ்தானியின் விரலில் ஒரு பிரகாசமான வைர மோதிரம் தெரிகிறது. இதன் மூலம் அவர்கள் இருவருக்கும் நிச்சயதார்த்தம் முடிந்துவிட்டது உறுதியாகியுள்ளது. இதனை அறிந்த ரசிகர்கள் இருவருக்கும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











