மாஜி காதலி தீபிகாவை பாராட்டிய விஜய் மல்லையாவின் மகன்.. என்ன காரணம் ?

மும்பை : பாலிவுட் நடிகை, தீபிகா படுகோனின் முன்னாள் காதலரான சித்தார்த்த மல்லையா அவர் வெகுவாக பாராட்டி உள்ளார்.

இணைபிரியாத காதலர்களாக இருந்த இந்த காதல் ஜோடி கருத்துவேறுபாடு காரணமாக பிரிந்தனர்.

இதையடுத்து பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங்கை 2018ம் ஆண்டு தீபிகா படுகோனே திருமணம் செய்து கொண்டார்.

பிரபல நடிகர்,

பிரபல நடிகர்,

தொழிலதிபர் விஜய் மல்லையாவின் மகன் சித்தார்த் மல்லையா பாலிவுட்டின் பிரபல நடிகராவார். இவர் நடிப்புக்கு இடைவெளி விட்டு, எழுத்தாளராக மாறி 'If I'm Honest' என்ற புத்தகத்தை எழுதினார்.

எழுத்தாளர்

எழுத்தாளர்

அந்த புத்தகத்தில் தனது வாழ்க்கையில் எதிர்கொண்ட பிரச்சினைகளையும், வாழ்க்கையில் கடந்து வந்த இன்னல்களையும் அவர் வெளிப்படையாக எழுதி இருந்தார். மேலும், தனது முன்னாள் காதலி தீபிகா படுகோனே மன நல விழிப்புணர்வாளராக வேலை செய்கிறார் என்பதையும் அவர் அதில் எழுதி இருந்தார்.

பிரிந்தனர்

பிரிந்தனர்

தீபிகா படுகோனே மற்றும் சித்தார்த்த மல்லையா நீண்ட காலமாக உறவில் இருந்தனர். தீபிகா கிங்ஃபிஷரின் விருந்து நிகழ்ச்சியிலும் கலந்து கொள்வார். அதேபோல சித்தார்த்தா தீபிகாவின் பேஷன் ஷோ நிகழ்ச்சியில் கலந்து கொள்வார்கள். இதுமட்டுமில்லாமல் 2011ம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் போட்டியின் போது, ​​சித்தார்த்தா அரங்கு நிறைந்த கூட்டத்திற்கு மத்தியில் தீபிகாவை முத்தமிட்டார். அது அப்போது இந்த செய்தி பரபரப்பாக பேசப்பட்டது. அவ்வளவு நெருக்கமாக இருந்த இந்த காதல் ஜோடி, கருத்துவேறுபாடு காரணமாக பிரிந்து விட்டனர்.

பாராட்டினார்

பாராட்டினார்

இந்நிலையில், சித்தார்த்தா மல்லையா பத்திரிக்கை ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டியில், தனது முன்னாள் காதலி தீபிகா படுகோனே செய்யும் வேலையைப் பற்றிய பாராட்டி பேசினார். மனநல விழிப்புணர்வு குறித்து தீபிகாவும் மற்றவர்களும் பேசுவது ஆச்சரியமாக இருக்கிறது. மனம் நலம் பற்றி பேசும் அளவுக்கு மக்களின் மனநிலை இல்லை. அந்த விழிப்புணர்வை தீபிகா அழகாக ஏற்படுத்தி வருகிறார் என்று கூறினார். மேலும் பேசிய அவர், தனது தந்தை விஜய் மல்லையா மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளால் என் இதயம் அப்படியே நொறுங்கிவிட்டதாக கூறினார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X