விஜய்சேதுபதியை இறுக்கி அணைச்சு உதட்டுலயே உம்மா கொடுத்த நடிகை.. தீயாக பரவும் மெரி கிறிஸ்துமஸ் சீன்!

மும்பை: அந்தாதூன் படத்தை இயக்கிய ஸ்ரீராம் ராகவன் இயக்கத்தில் விஜய்சேதுபதி, கத்ரீனா கைஃப் நடித்துள்ள மெரி கிறிஸ்துமஸ் படத்தின் டிரெய்லர் நேற்று தமிழ் மற்றும் இந்தி மொழிகளில் வெளியானது. தமிழ் டிரெய்லரில் இல்லாத லிப் கிஸ் காட்சி இந்தி டிரெய்லரில் இடம்பெற்றுள்ள நிலையில், அந்த குறிப்பிட்டக் காட்சியை மட்டும் டிரெண்டாக்கி மீம்ஸ் போட்டு வருகின்றனர்.

கோலிவுட்டில் சிறு வேடங்கள் கிடைக்குமா என ஏங்கிக் கொண்டிருந்த விஜய் சேதுபதி இன்று இந்தியாவே திரும்பிப் பார்க்கும் நடிகராக மாறி உள்ளார். புதுப்பேட்டை, நான் மகான் அல்ல போன்ற படங்களில் அட்மாஸ்பியர் ஆர்டிஸ்டாக நடித்திருப்பார்.

Vijay Sethupathi and Katrina Kaif lip kiss scene from Merry Christmas trailer trending

விஜய்சேதுபதியின் வளர்ச்சி: தென்மேற்கு பருவக்காற்று, பீட்சா, நடுவுல கொஞ்சம் பக்கத்தை காணோம், சூது கவ்வும், இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா படங்களில் நடித்த விஜய் சேதுபதியை பையன் புதுசா ஏதோ ட்ரை பண்றான் என தமிழ் சினிமா ரசிகர்கள் வரவேற்பு கொடுத்தனர்.

கிடைத்த வாய்ப்பை கச்சிதமாக பயன்படுத்திக் கொண்ட விஜய் சேதுபதி தொடர்ந்து கடின உழைப்பு போட்டு ஒரு நாளைக்கு டபுள் கால்ஷீட் எல்லாம் ஓய்வின்றி நடித்து இன்று இந்த இடத்திற்கு வந்துள்ளார்.

மெரி கிறிஸ்துமஸ்: தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களான ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜய் உள்ளிட்டோருக்கு வில்லனாக நடித்த விஜய் சேதுபதி பாலிவுட்டில் ஷாருக்கானுக்கு வில்லனாக இந்த ஆண்டு ஜவான் படத்தில் நடித்து மிரட்டியிருந்தார். இந்நிலையில் அடுத்ததாக, கத்ரீனா கைஃப் உடன் இணைந்து அந்தாதுன் படத்தின் இயக்கநர் ஸ்ரீராம் ராகவன் இயக்கத்தில் உருவாகியுள்ள மெரி கிறிஸ்துமஸ் படத்தில் நடித்துள்ளார்.

கத்ரீனா கைஃப் லிப் கிஸ்: அடுத்த ஆண்டு ஜனவரி 12-ஆம் தேதி அந்த படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டு ட்ரெய்லர் ஒன்றும் வெளியாகியுள்ளது. தமிழ் டிரைலரில் காயத்ரி, ராதிகா ஆப்தே மற்றும் ராதிகா சரத்குமார் உள்ளிட்டோர் நடித்துள்ள காட்சிகள் இடம்பெற்று இருந்தன. அதே நேரத்தில் இந்தி ட்ரைலரில் விஜய் சேதுபதிக்கு உதட்டில் கத்ரீனா கைஃப் முத்தம் கொடுக்கும் காட்சி இடம்பெற்று ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளன.

இந்த ஆண்டு லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், திரிஷா நடித்த லியோ படத்தில் ரசிகர்கள் சற்றும் எதிர்பார்க்காத நேரத்தில் லிப் லாக் சீன் இடம்பெற்றிருந்தது. ஆனால், படத்தின் புரமோஷனுக்கு கூட அதை லோகேஷ் கனகராஜ் பயன்படுத்தவில்லை. ஆனால், மெரி கிறிஸ்துமஸ் படத்தின் இந்தி டிரெய்லருக்கு லிப் கிஸ் சீனை பயன்படுத்தி உள்ளனர்.

கத்ரீனா கைஃபே விஜய்சேதுபதியை இழுத்து வச்சு என்னம்மா கிஸ் அடிக்கிறாரு சேதுண்ணா யோகக்காரன் தான் நீ என ரசிகர்கள் கமெண்ட்டுகளையும் மீம்களையும் பதிவிட்டு வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X