பாலிவுட்டில் கலக்கும் விஜய் சேதுபதி… சல்மான்கானுக்கு பறிபோன படவாய்ப்பு!
சென்னை : நடிகர் விஜய்சேதுபதி தமிழை தொடர்ந்து தெலுங்கு மலையாளம் இந்தி உள்ளிட்ட மொழிகளில் திரைப்படங்கள் மற்றும் வெப்சீரிஸ்களில் நடித்து வருகிறார்.
பாலிவுட்டில் முக்கியமான இயக்குனர்களில் ஒருவர் ஸ்ரீராம், இவர் ஜானி கத்தார், ப்த்லாபூர் , அந்தாதுன் போன்ற ஹிட் திரைப்படங்களை இயக்கி உள்ளார்.
தற்போது இவர் மெர்ரி கிறிஸ்துமஸ் என்ற படத்தை இயக்கி வருகிறார். இந்த கதை சல்மான் கானுக்காக உருவாக்கப்பட்ட கதை என்பதும், அவர் நடிக்க முடியாமல் போனதால் விஜய்சேதுபதி ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

பழ மொழியில்
விஜய் சேதுபதியின் ஒவ்வொரு திரைப்படங்களும் இப்போது பல மொழி ரசிகர்களின் கவனத்தையும் ஈர்த்து வருகிறது. ஹீரோவாக நடிக்கும் அதேசமயம் வில்லன் குணசித்திர வேடம் மற்றும் சிறப்புத் தோற்றம் என பாகுபாடு இல்லாமல் அனைத்து திரைப்படங்களிலும் கதாபாத்திரத்திற்கு மட்டும் முக்கியத்துவம் கொடுத்து நடித்து வரும் விஜய் சேதுபதி இப்பொழுது மொழிகளை கடந்து பல மொழிகளிலும் நடிக்க ஒப்பந்தமாகி வருகிறார்.

பாலிவுட் இயக்குனர்
பாலிவுட்டில் முக்கியமான இயக்குனர்களில் ஒருவர் ஸ்ரீராம், இவர் ஜானி கத்தார், ப்த்லாபூர் , அந்தாதுன் போன்ற ஹிட் திரைப்படங்களை இயக்கி உள்ளார். இவர் தற்போது, மெர்ரி கிறிஸ்துமஸ் என்ற படத்தை இயக்கி வருகிறார். இந்த கதை சல்மான் கானுக்காக உருவாக்கப்பட்ட கதை என்பதும் தற்போது தெரியவந்துள்ளது.

கைமாறிய படம்
சல்மான் கானை மனதில் வைத்து ஸ்ரீராம் ராகவன் கதை எழுதி உள்ளார், கதையும் சல்மானுக்கு மிகவும் பிடித்து விட்டதாம், ஆனால், சல்மானின் படம் என்றால் மாஸான சண்டைகள், ஆட்டம் பாட்டம் என படம் முழுக்க சும்மா மிரட்டலா இருக்குமாம். இதனால்,இயக்குனர் ஸ்ரீராம் ராகவன், த்ரில்லர் கதைக்கு இது எல்லாம் செட் ஆகாது என்பதால் மெர்ரி கிறிஸ்துமஸ் படத்திற்கு விஜய் சேதுபதி ஒப்பந்தம் செய்யப்பட்டாராம். இத்திரைப்படத்தில் விஜய்சேதுபதிக்கு ஜோடியாக காத்ரினா கைஃப் நடித்துள்ளார்.

இந்தி வெப் சீரிஸில்
விஜய் சேதுபதிக்கு ஹிந்தி பட வாய்ப்புகளும் குவிந்து வருகிறது . தி ஃபேமிலி மேன் வெப் சீரிஸை இயக்கிய ராஜ் & டி.கே. இயக்கத்தில் தற்போது ஷாகித் கபூர் புதிய வெப் சீரிஸில் நடித்து வருகிறார். இதில் ஷாகித் கபூருடன் இணைந்து விஜய் சேதுபதியும் முக்கிய வேடத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.


Click it and Unblock the Notifications











