பாலிவுட்டில் கலக்கப்போகும் விஜய்சேதுபதி.. “மும்பைக்கர்“ ரிலீஸ் தேதி அறிவிப்பு!

சென்னை : விஜய் சேதுபதி நடித்துள்ள இந்தி திரைப்படத்தின் ரிலீஸ் தேதி வெளியாகி உள்ளது.

இதில் விஜய் சேதுபதி, விக்ராந்த் மாஸி, தன்யா மனிக்தலா, ரிது ஹாரூன், சஞ்சய் மிஷ்ரா உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

மும்பைக்கர் விஜய் சேதுபதிக்கு, பாலிவுட்டில் ரசிகர்களை பெற்றுத் தரும் என்பதில் சந்தேகம் இல்லை. இந்தப் படத்தை பிரபல ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவன் இயக்கியுள்ளார்.

மாநகரம்

மாநகரம்

தமிழில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியாகி வெற்றி பெற்ற படம் மாநகரம். இப்படம் தற்போது இந்தியில் ரீமேக் ஆகிறது. மும்பைக்கர் என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை பிரபல ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவன் இயக்குகிறார். தமிழில் முனீஸ்காந்த் நடித்த கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதி நடிக்கிறார். சந்தீப் கிஷன் நடித்த கதாபாத்திரத்தில் ஹீரோவாக விக்ராந்த் மாஸே நடித்துள்ளார்.

முன்னணி நடிகர்கள்

முன்னணி நடிகர்கள்

சந்தோஷ் சிவன் இயக்கத்தில், நடிகர்கள் சஞ்சய் மிஸ்ரா, ரன்வீர் ஷோரே, தன்யா மணிக்தலா மற்றும் சச்சின் கெடேகர் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த ஆண்டு முடிவடைந்த நிலையில் கொரோனா தொற்றுநோய் காரணமாக படம் ரிலீஸ் தாமதமாகி வந்தது.

மும்பைகர் ரிலீஸ் தேதி

மும்பைகர் ரிலீஸ் தேதி

இந்நிலையில், மும்பைக்கர் திரைப்படம் மே மாதம் 2022ந் தேதி வெளியாக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஆனால், படம் திரையரங்குகளில் வெளியிடப்படுமா அல்லது OTT தளத்தில் வெளியிடப்படுமா என்பதை திரைப்பட தயாரிப்பாளர்கள் இன்னும் முடிவு செய்யவில்லை. இது குறித்து அடுத்த வாரத்தில் முடிவெடுக்கப்படும் என்றும், கூடிய விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடுவார்கள் என்றும் படக்குழு தெரிவித்துள்ளது.

வலுவான திரைக்கதை

வலுவான திரைக்கதை

மாநகரத்தில் சென்னையை மையமாக வைத்ததுபோல், மும்பைக்கரில் மும்பையை மையமாக வைத்து படம் எடுக்கப்பட்டுள்ளது. வலுவான திரைக்கதையை கொண்ட படம் என்பதால் மும்பைக்கர் விஜய் சேதுபதிக்கு, பாலிவுட்டில் ரசிகர்களை பெற்றுத் தரும் என்பதில் சந்தேகம் இல்லை.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X