காதல் என்பது ஐஸ்க்ரீம் போல.. தமன்னாவை கழட்டிவிட்டுட்டு தத்துவம் எல்லாம் பேசுறாரா விஜய் வர்மா?
மும்பை: பாலிவுட் நடிகர் விஜய் வர்மா மற்றும் நடிகை தமன்னா இருவரும் தாங்கள் காதலிப்பதை வெளிப்படையாக கடந்த 2024ம் ஆண்டு அறிவித்தனர். கடந்த சில மாதங்களாக இருவரும் பிரிந்து விட்டதாக பாலிவுட் வட்டாரங்கள் தகவல் தெரிவித்தன. அதை நிரூபிக்கும் விதமாக ரவீணா டாண்டன் நடத்திய ஹோலி கொண்டாட்டத்திற்கு இருவரும் சென்று இருந்தாலும், ஒன்றாக சந்தித்துக் கொண்டது போல ஒரு புகைப்படம் கூட வெளியாகவில்லை.
35 வயதாகும் நடிகை தமன்னா பாலிவுட்டில் வில்லனாகவும் ஹீரோவாகவும் வித விதமான கதாபாத்திரங்களில் நடித்து மிரட்டி வரும் விஜய் வர்மா என்பவரை காதலித்து வந்தார். பாலிவுட்டின் அடுத்த நட்சத்திர ஜோடியாக இருவரும் செல்லும் இடமெல்லாம் கைகோர்த்துக் கொண்டு ஜோடியாக சென்றனர். லிவிங் டுகெதர் வாழ்க்கையையும் இருவரும் வாழ்ந்து வந்ததாகவும் பேச்சுக்கள் அடிபட்டன.

இந்நிலையில், திடீரென இருவருக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக காதலர்களாக தொடர்வதை நிறுத்திவிட்டதாக தகவல்கள் வெளியாகின. இந்நிலையில், சமீபத்தில் பேட்டி ஒன்றில் பேசும் போது, காதலையும் ஐஸ்க்ரீமையும் கம்பேர் செய்து விஜய் வர்மா பேசியிருப்பது ரசிகர்களை ஷாக் ஆக்கியுள்ளது.
இறங்கி நடிக்கும் விஜய் வர்மா: நம்ம ஊர் நடிகர்களை எல்லாம் தூக்கி சாப்பிடும் அளவுக்கு அடல்ட் காட்சிகளிலும் இறங்கி நடிக்கும் ஆள் தான் விஜய் வர்மா. ஷீ வெப்சீரிஸில் அதிதி போஹங்கரை எந்தளவுக்கு ஆபாசமாக தொட்டு நடிக்க முடியுமோ அந்தளவுக்கு ஆபாசமாக நடித்திருப்பார். டார்லிங் படத்தில் ஆலியா பட் உடன் இணைந்து டாக்ஸிக் கணவராக நடித்திருப்பார். தமன்னாவுடன் இணைந்து லஸ்ட் ஸ்டோரீஸ் 2ம் பாகத்திலும் காம லீலைகளை கணக்கில்லாமல் புரிந்த நிலையில், இருவருக்கும் இடையே கெமிஸ்ட்ரி வொர்க்கவுட் ஆகி காதலாக மலர்ந்தது.
காதல் என்பது ஐஸ்க்ரீம் போல: சமீபத்தில் இந்தி சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், ரிலேஷன்ஷிப் குறித்த கேள்விக்கு காதல் என்பது ஐஸ்க்ரீம் போல என்றும் எந்த ஃபிளாவர் கிடைத்தாலும் சந்தோஷமாக எடுத்துக் கொள்ள வேண்டும் என்று பேசியுள்ளார். ஐஸ்க்ரீமை அளவுக்கு அதிகமாக சாப்பிட முடியாது என்பதால் தான் அவர் இப்படி பேசியுள்ளாரா என ரசிகர்கள் கேள்விகளை எழுப்பி வருகின்றனர். நடிகை தமன்னா மற்றும் விஜய் வர்மா இருவரும் பிரிந்து விட்டதாக இதுவரை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை என்றாலும், பிரேக்கப் செய்திகள் ரூமர் என்றும் அவர்கள் வாய் திறக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











