மாஜி காதலி மற்றும் லேட்டஸ்ட் கேர்ள் ஃபிரெண்ட்.. வாழ்ந்தா விஜய் வர்மா போலத்தான் வாழணும்!
மும்பை: நடிகை தமன்னா மற்றும் விஜய் வர்மா இருவரும் காதலித்த கதைகள் ரசிகர்களை குஷிப்படுத்தி முடிப்பதற்கு முன்னதாகவே அவர்கள் இருவரும் பிரேக்கப் செய்து பிரிந்தது பலரையும் சோகத்தில் ஆழ்த்தியது. தமிழ், தெலுங்கு என பல வருடங்களாக நடித்த தமன்னா கோலிவுட்டில் ஒரு பெரிய நடிகருடன் கிசுகிசுக்கப்பட்டார்.
ஆனால், அதன் பின்னர் அவர் காதலித்தது இந்தி நடிகர் விஜய் வர்மாவைத்தான். இருவரும் நெட்பிளிக்ஸ் தொடருக்காக படு நெருக்கமான காட்சிகளில் நடித்து ரசிகர்களை ஷாக் ஆக்கினர்.

ஆனால், இருவரும் பிரிந்த நிலையில், சில இடங்களில் ஒன்றாக சந்திப்பதை கூட ஹோலி கொண்டாட்டங்களின் போது தவிர்த்த இருவரும் தற்போது மீண்டும் சந்தித்துக் கொள்வது ரசிகர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது. அதுவும் விஜய் வர்மாவின் லேட்டஸ்ட் ரூமர் கேர்ள் ஃபிரெண்டான ஃபாத்திமா சனா ஷேக்கும் உடனிருப்பது தான் இதில் ஹைலைட் என்கின்றனர்.
வில்லனாக மிரட்டல்: ஸ்டார் படத்தில் ஹீரோயினாக நடித்த அதிதி போஹன்கர் நடித்த நெட்பிளிக்ஸ் வெப்சீரிஸான ஷீ வெப் தொடரில் வில்லனாக நடித்து படுமோசமான காட்சிகளில் அசால்ட்டு காட்டி வில்லனாக மிரட்டியிருப்பார் விஜய் வர்மா. லஸ்ட் ஸ்டோரிஸ் புதிய சீசனில் தமன்னாவுடன் தாறுமாறு படுக்கையறை காட்சிகளில் நடித்து ரசிகர்களை மட்டுமின்றி தமன்னாவையும் கவர்ந்தார். அதன் பின்னர் இருவரும் காதலித்து வந்த நிலையில், திடீரென பிரேக்கப் செய்து பிரிந்து விட்டனர்.
புது காதலி?: அமீர்கானின் 3வது காதலி என அவருக்கு மகளாக தங்கல் படத்தில் நடித்த ஃபாத்திமா சனா ஷேக்கை பற்றிய வதந்திகள் தீயாக பரவிய நிலையில், அவர் கெளரி ஸ்பிராட் தான்ப்பா 3வது காதலி என அறிமுகப்படுத்தியதும் அந்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டன. இந்நிலையில், விஜய் வர்மாவும் - ஃபாத்திமாவும் தான் காதலித்து வருகின்றனர் என்றும் அதன் காரணமாகத்தான் தமன்னா பிரேக்கப் செய்தார் என்றும் கூறப்படுகிறது.
இருவருடன் விஜய் வர்மா: இந்நிலையில், சமீபத்தில் விஜய் வர்மா தனது ரூமர் காதலி ஃபாத்திமா சனா ஷேக் உடன் இருக்கும் போதே மாஜி காதலி தமன்னாவை சந்தித்து கட்டியணைத்து வார்ம் வெல்கம் பண்ணும் வீடியோ ஒன்று சோஷியல் மீடியாவில் தீயாக பரவி வருகிறது.


Click it and Unblock the Notifications