விக்ரம் வேதா ஹிந்தி ரீமேக் ஃபர்ஸ்ட் அப்டேட்டை வெளியிட்ட படக்குழு!

சென்னை : விஜய் சேதுபதி மற்றும் மாதவனின் மிரட்டலான நடிப்பில் கடந்த 2017 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் விக்ரம் வேதா

பாலிவுட் வரை இந்த படத்திற்கு மிகப்பெரிய ரசிகர்கள் பட்டாளமே இன்றுவரை இருந்து வருகிறது

இந்த நிலையில் விக்ரம் வேதா திரைப்படம் ஹிந்தியில் ஹிரித்திக் ரோஷன் மற்றும் சைஃப் அலி கான் நடிப்பில் ரீமேக் செய்யப்பட்டு வரும் நிலையில் ஃபர்ஸ்ட் லுக் குறித்த முக்கிய அப்டேட்டை படக்குழு வெளியிட்டுள்ளது

விக்ரம் வேதா

விக்ரம் வேதா

ஹீரோ, வில்லன்,குணச்சித்திர வேடங்களில், சிறப்பு தோற்றங்களில் என எது கிடைத்தாலும் அதில் மிகச் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி வரும் விஜய் சேதுபதி மிரட்டலான கதாபாத்திரத்தில் நடித்த திரைப்படம் விக்ரம் வேதா. கடந்த 2017 ஆம் ஆண்டு வெளியான இந்தப் படத்தை புஷ்கர் மற்றும் காயத்ரி இணைந்து இயக்கினர்.தமிழ் சினிமாவிற்கு முற்றிலும் வித்தியாசமான ஆக்ஷன் படமாக வெளியான விக்ரம் வேதாவில் விஜய் சேதுபதி கேங்ஸ்டர் டானாக அசால்டாக நடித்திருக்க போலீஸ் அதிகாரியாக மாதவன் நடித்து இருப்பார்.

வித்தியாசமான மேக்கிங்

வித்தியாசமான மேக்கிங்

பொதுவாக கேங்ஸ்டர் திரைப்படங்களில் ஹீரோ மற்றும் வில்லன்களுக்கு சரி சமமான முக்கியத்துவம் கொடுத்திருக்க மாட்டார்கள் அதிலிருந்து சற்றே வித்தியாசமாக காணப்பட்ட விக்ரம் வேதா திரைப்படத்தில் ஹீரோ மற்றும் வில்லன் என இருவருக்கும் சமமான முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருக்கும். இதில் வேதா என்ற கதாபாத்திரத்தில் கேங்ஸ்டர் டானாக விஜய் சேதுபதி மிரட்டியிருப்பார். அதேசமயம் விக்ரம் என்ற போலீஸ் அதிகாரி வேடத்தில் மாதவன் கலக்கியிருப்பார். விறுவிறுப்பான சண்டைக் காட்சிகள் வித்தியாசமான மேக்கிங் என புஷ்கர் காயத்ரி இந்த படத்தை செம மாஸாக இயக்கி இருப்பார்கள்.

ஹிந்தியில் ரீமேக்

ஹிந்தியில் ரீமேக்

2017ல் வெளியான இந்தப்படம் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது குறிப்பாக பாலிவுட்டில் இந்த படம் குறித்து பரபரப்பாக பேசப்பட்டது. சர்வதேச அளவில் விருதுகளை அள்ளியது. இந்த நிலையில் விக்ரம் வேதா ஹிந்தியில் ரீமேக் செய்யப்பட்டு வருகிறது. முதலில் இந்த படத்தில் ஆமீர் கான் மற்றும் சைஃப் அலி கான் நடிக்க இருந்தார்கள் பின் ஆமிர் கான் இப்படத்திலிருந்து விலக ஹிரித்திக் ரோஷன் நடித்து வருகிறார்.

விக்ரம் வேதா ஃபர்ஸ்ட் லுக் அப்டேட்

விக்ரம் வேதா ஃபர்ஸ்ட் லுக் அப்டேட்

இப்படம் செப்டம்பர் 30 தேதி வெளியிட திட்டமிடப்பட்டு உள்ளது. ஹிரித்திக் ரோஷன் பிறந்தநாளுக்கு வேதா ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி இணையதளத்தை துவம்சம் செய்தது. அதைத் தொடர்ந்து விக்ரம் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரும் வெளியாகி பட்டையை கிளப்பியது. இந்த நிலையில் விக்ரம் வேதா ஃபர்ஸ்ட் லுக் குறித்த முக்கிய அப்டேட் தற்போது வெளியாகியுள்ளது. அதன்படி பிப்ரவரி 24ஆம் தேதி விக்ரம் வேதா ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகும் என படக்குழு சூப்பரான அப்டேட்டை வெளியிட்டுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X