துவங்கியது விக்ரம் வேதா இந்தி ரீமேக் சூட்டிங்... அரபு நாடுகளில் துவக்கம்
மும்பை : புஷ்கர் -காயத்ரி இயக்கத்தில் தமிழில் வெளியாகி வெற்றியடைந்த படம் விக்ரம் வேதா.
இந்தப் படம் தற்போது இந்தியில் ரீமேக் செய்யப்பட உள்ளது. இதற்கான பணிகள் மும்முரமாக நடைபெற்றது.
இந்நிலையில் படத்தின் சூட்டிங் அரபு நாடுகளில் துவங்கப்பட்டுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

விக்ரம் வேதா படம்
நடிகர்கள் விஜய் சேதுபதி, மாதவன், ஷ்ரத்தா ஸ்ரீநாத், வரலட்சுமி சரத்குமார், கதிர் உள்ளிட்டவர்களின் நடிப்பில் வெளியான படம் விக்ரம் வேதா. சஷிகாந்த் தயாரிப்பில் வெளியான இந்தப் படம் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் மிகுந்த வரவேற்பை பெற்றது. விஜய் சேதுபதி, மாதவனின் சினிமா கேரியரில் முக்கியமான படமாக இந்தப் படம் அமைந்தது.

மிரட்டலான விஜய் சேதுபதி நடிப்பு
படத்தின் விஜய் சேதுபதி மற்றும் மாதவன் இருவரும் போட்டிப் போட்டுக் கொண்டு நடித்திருந்தனர். குறிப்பாக விஜய் சேதுபதி மிரட்டலான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார். படத்தின் பாடல்களும் சிறப்பாக அமைந்திருந்தன. திரைக்கதை மற்றும் காட்சி அமைப்புகள் படத்திற்கு வலு சேர்த்திருந்தன.

சிறப்பான கேரக்டர்கள்
மேலும் படத்தின் ஒவ்வொரு கேரக்டர்களையும் இயக்குநர்கள் செதுக்கியிருந்தனர். அவர்களுக்கு மட்டுமின்றி தமிழ் சினிமாவிற்கே இந்தப் படம் சிறப்பான படமாக அமைந்தது. ஹீரோயின் ஷ்ரத்தா ஸ்ரீநாத் கேரக்டரும் படத்தில் பேசப்பட்டது. வரலட்சுமியும் சிறப்பாக செய்திருந்தார்.

இந்தியில் ரீமேக்
புஷ்கர் -காயத்ரி இயக்கத்தில் கடந்த 2017ல் வெளியான இந்தப் படம் தற்போது இந்தியில் ரீமேக் செய்யப்பட உள்ளது. இதற்கான பணிகள் நீண்ட காலமாக நடைபெற்ற நிலையில் இன்றைய தினம் விஜயதசமியை முன்னிட்டு படத்தின் சூட்டிங் அரபு நாடுகளில் துவங்கியுள்ளது.

தயாரிப்பாளர் உறுதி
படத்தின் தயாரிப்பாளர் சஷிகாந்த் இந்தத் தகவலை தனது ட்விட்டர் பக்கத்தில் உறுதிப்படுத்தியுள்ளார். விக்ரம் வேதா இந்தி ரீமேக்கை ஒய் நாட் ஸ்டூடியோஸ், ரிலையன்ஸ் நிறுவனம், டி-சீரிஸ் நிறுவனம் ஆகியவை இணைந்து தயாரிக்கின்றன. புஷ்கர் -காயத்ரி படத்தை இயக்கி வருகின்றனர்.

இந்தியிலும் அதே தலைப்பு
படத்தில் மாதவன் கேரக்டரில் சைஃப் அலி கான் மற்றும் விஜய் சேதுபதி கேரக்டரில் ஹ்ரித்திக் ரோஷன் ஆகியோர் நடித்து வருகின்றனர். அடுத்த ஆண்டு செப்டம்பர் 30ம் தேதி படம் ரிலீசாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தி ரீமேக்கிற்கும் விக்ரம் வேதா என்றே தலைப்பிடப்பட்டுள்ளது.

படத்தின் சூட்டிங் துவக்கம்
படம் தமிழில் மிகப்பெரிய ஹிட்டடித்த நிலையில் தற்போது இந்தியில் தயாரிக்கப்பட்டு வருகிறது. ஹ்ரித்திக் ரோஷன் மற்றும் சைஃப் அலி கான் படத்தில் இணைந்துள்ள நிலையில், படத்திற்கான எதிர்பார்ப்பு அதிகமாக நிலவி வருகிறது. இந்நிலையில் இன்றைய தினம் படத்தின் சூட்டிங் துவங்கியுள்ளது.


Click it and Unblock the Notifications











