அந்த ஆண் பிரபலத்துடன் ஷாருக்கான் உடலுறவு கொண்டாரா?.. பிரியங்கா சோப்ராவுடன் டேட்டிங் கதை என்ன?

மும்பை: பாலிவுட் திரையுலகின் முன்னணி நடிகரான ஷாருக்கான் தனது ஆரம்ப காலக்கட்டத்தில் நண்பர் ஒருவருடன் ஒரே வீட்டில் தங்கி இருந்து தான் பட வாய்ப்புகளை தேடினார். சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு வந்த ஷாருக்கானுக்கு ஆரம்பத்தில் அடைக்கலம் கொடுத்தது விவேக் வஸ்வானி எனும் அவரது நண்பர் தான்.

அந்த நேரத்தில் தனது நண்பருடன் உடலுறவில் ஷாருக்கான் ஈடுபட்டார் என பல ஆண்டுகளாக ஒரு வதந்தி உலா வந்துக் கொண்டே இருந்த நிலையில், சமீபத்தில் பேட்டியளித்த ஷாருக்கானின் உயிர் நண்பர் விவேக் வஸ்வானி அதுகுறித்து விளக்கம் அளித்துள்ளார்.

Vivek Vaswani replies to rumours Of Gay Relationship With Shah Rukh Khan

பிரியங்காவுடன் டேட்டிங்: பாலிவுட்டில் ஐஸ்வர்யா ராய், பிரியங்கா சோப்ரா உள்ளிட்ட பலர் திருமணத்துக்கு முன்னதாக பல பாலிவுட் நடிகர்களுடன் டேட்டிங் சென்றுள்ளதாகவும் தீவிரமாக காதலித்து வந்ததாகவும் பல கிசுகிசுக்கள் உலா வந்த வண்ணமே உள்ளன. டான் படத்தில் ஷாருக்கானுக்கு ஜோடியாக பிரியங்கா சோப்ரா நடித்த போது இருவரும் ரொம்பவே நெருக்கமாக இருந்தனர் என்றும் அடிக்கடி டேட்டிங் சென்று வந்ததாகவும் பாலிவுட்டில் பல பத்திரிகைகள் செய்திகளை எழுதி தள்ளின.

எல்லாமே பொய்: ஆனால், அதுகுறித்து ஷாருக்கானின் நண்பரான விவேக் வஸ்வானி அளித்த பேட்டியில் அதெல்லாம் சுத்த பொய் என்றும் ஷாருக்கான் கெளரி கானை திருமணம் செய்துக் கொண்ட பின்னர் எந்த நடிகையையும் ரகசியமாக காதலிக்கவே இல்லை என்றும் பிரியங்கா சோப்ரா ஷாருக்கானின் நெருங்கிய தோழி மட்டுமே என்றும் இருவரும் டேட்டிங் எல்லாம் போகவில்லை என்றார்.

Vivek Vaswani replies to rumours Of Gay Relationship With Shah Rukh Khan

உங்களுடன் உடலுறவு கொண்டாரா?: ஷாருக்கான் மற்றும் பிரியங்கா சோப்ரா விவகாரத்தில் உண்மையை கூறிய விவேக் வஸ்வானியை மடக்கும் விதமாக உங்களுடன் ஷாருக்கான் உடலுறவு கொண்டாரா? என்கிற கேள்வியை தொகுப்பாளர் தைரியமாக எடுத்து முன் வைக்க இந்த ரூமரை நான் பல வருஷமா கேட்டுக் கொண்டு தான் இருக்கேன். ஷாருக்கான் அந்த மாதிரி ஆள் கிடையாது. அவர் கிங் கான். நாங்கள் இருவரும் நல்ல நண்பர்கள். ஆரம்பத்தில் இருவரும் ஒரே வீட்டில் தான் தங்கி இருந்தோம். வாழ்க்கையில் எப்படி முன்னுக்கு வர வேண்டும் என்கிற சிந்தனை தான் எங்களுக்கு இருந்தது என்றும் கூறினார். சினிமாவில் பிரபலமான ஒருவர் மீது தேவையில்லாத வதந்திகள் பரவத்தான் செய்யும். ஆனால், நல்ல நட்பை கொச்சைப்படுத்தும் விதமாக இப்படி பரப்புவது ரொம்பவே தப்பு என பேசியுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X