War 2 Teaser: என்ன ஒரே வீடியோ கேம் போல இருக்கு.. டூ பீஸில் வந்து காப்பாற்றுவதே கியாரா அத்வானி தான்!

மும்பை: ஜூனியர் என்டிஆர் பிறந்தநாளை முன்னிட்டு வார் 2 படத்தின் அதிரடியான டீசரை படக்குழு இன்று வெளியிட்டுள்ளனர். ஹ்ரித்திக் ரோஷன், டைகர் ஷெராஃப் நடிப்பில் கடந்த 2019ம் ஆண்டு வெளியான வார் படத்தை சித்தார்த் ஆனந்த் இயக்கி இருந்தார். அவரது இயக்கத்தில் மீண்டும் ஹ்ரித்திக் ரோஷன் நடித்த ஃபைட்டர் திரைப்படம் மண்ணைக் கவ்வியது.

வார் 2 படத்தை சித்தார்த் ஆனந்துக்கு பதிலாக அயன் முகர்ஜி இயக்கி வருகிறார். இந்த படத்தின் மூலம் பாலிவுட்டில் வில்லனாக அறிமுகமாகிறார் ஜூனியர் என்டிஆர். ஒட்டுமொத்த ரசிகர்களும் வார் 2 படத்தை ஹ்ரித்திக் ரோஷன் மற்றும் ஜூனியர் என்டிஆர் மோதும் காட்சிகளுக்காக பார்க்க காத்துக் கொண்டிருந்த நிலையில், அவுட் ஆஃப் சிலபஸ்ஸாக டூ பீஸ் உடையில் கியாரா அத்வானி வந்து கிறங்கடித்துள்ளார்.

War 2 Teaser Kiara Advani steals the Jr NTR Birthday special show with her glam look

வார் 2 படத்தின் டீசரை தற்போது ரசிகர்கள் ரிப்பீட் மோடில் பார்க்க ஒரே காரணம் கியாரா அத்வானி தான் என்கின்றனர்.

வீணடித்த ஷங்கர்: கேம் சேஞ்சர் படத்தில் கியாரா அத்வானியை நடிக்க வைத்து ஷங்கர் வேஸ்ட் பண்ணிவிட்டார் என பலரும் குற்றச்சாட்டுக்களை அடுக்கினர். கிழவி போல கியாரா அத்வானியை காட்டியிருந்தார் என்றும் ஜருகண்டி பாடலில் ராம் சரண் மற்றும் கியாரா அத்வானிக்கான நடன அசைவுகள் எல்லாம் ரொம்பவே சுமார் மூஞ்சு குமார் ரகம் என கலாய்த்து வந்தனர்.

War 2 Teaser Kiara Advani steals the Jr NTR Birthday special show with her glam look

வார் 2வில் கவர்ச்சிக்கடல்: ஆனால், ஹ்ரித்திக் ரோஷனின் வார் 2 டீசரில் இப்படியொரு கவர்ச்சிக்கடலாக கியாரா அத்வானி நடித்திருப்பார் என யாருமே எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். ஏற்கனவே வெளியான ஹ்ரித்திக் ரோஷனின் ஃபைட்டர் படத்தில் தீபிகா படுகோன் பீச்சில் நீச்சல் உடையை அணிந்துக் கொண்டு மண்ணில் உருண்டு புரண்டு நடித்து உஷ்ணத்தை அதிகரித்து இருந்தார். ஹேண்ட்ஸம் ஹங்க்காக ரசிகர்களை ஒருபக்கம் கட்டிப்போட ஹ்ரித்திக் ரோஷன் இருக்க அவருக்கு டஃப் கொடுக்கும் விதமாக இளைஞர்களை ஈர்க்கும் கவர்ச்சி பாமாக கியாரா அத்வானி டூ பீஸ் உடையை அணிந்துக் கொண்டு வெறித்தனம் காட்டியுள்ளார்.

வீடியோ கேம் மாதிரி இருக்கு: மற்றபடி வார் 2 படத்தின் டீசரில் புதிதாக ரசிகர்களுக்கு எந்தவொரு ட்ரீட்டும் இல்லை என்றும் ஹ்ரித்திக் ரோஷனின் ஓபனிங் மற்றும் ஸ்பைடர்மேன் போல பாலத்தில் இருந்து ஜம்ப் பண்ணி வண்டி மீது நின்று ஹ்ரித்திக் ரோஷன் கொடுக்கும் போஸ் எல்லாமே ஏதோ ஆக்‌ஷன் வீடியோ கேம் பார்க்கும் உணர்வை மட்டுமே கடத்துகிறது என நெட்டிசன்கள் ட்ரோல் செய்து வருகின்றனர். வித்தியாச வித்தியாசமான லொகேஷன்களில் ஹ்ரித்திக் ரோஷன் மற்றும் ஜூனியர் என்டிஆர் சண்டையிடுவதை மட்டுமே காட்டியுள்ளனர்.

கூலி vs வார் 2: லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த், அமீர்கான், நாகார்ஜுனா, சத்யராஜ், செளபின் சாஹிர், உபேந்திரா, ஸ்ருதிஹாசன் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி உள்ள கூலி படமும் சுதந்திர தினத்தை முன்னிட்டு ஆகஸ்ட் 14ம் தேதி வெளியாகிறது. வார் 2 படமும் ஆகஸ்ட் 14ம் தேதி வெளியாகவுள்ள நிலையில், பாக்ஸ் ஆபீஸில் இந்தியளவில் மிகப்பெரிய கிளாஷ் உண்டாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியா - பாகிஸ்தான் பிரச்னை வெடித்துள்ள நிலையில், வார் படத்தில் தேசத்தைக் காக்கும் ராணுவ வீரர்களை பெருமைப்படுத்தும் விதத்தில் படம் அமைந்திருந்தாலே பெரிய வெற்றியை எளிதில் பெரும் என்கின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X