1.5 கோடி ஆண்டு வருமானமா? அமிதாப் பச்சன் பாதுகாவலர் அதிரடியாக மாற்றப்பட்டதன் பின்னணி என்ன?
மும்பை: பிரபல பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சனின் பாதுகாவலர் ஆண்டுக்கு 1.5 கோடி ரூபாய் முறைகேடாக சம்பாதித்துள்ளதாக தகவல்கள் வெளியான நிலையில், அவரை அதிரடியாக மும்பை போலீசார் பணி மாற்றம் செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியாகின.
ஆனால், இந்த விவகாரத்தில் உண்மையில் என்ன நடந்தது என்றும்? பாதுகாவலர் ஜித்தேந்திரா ஷிண்டேவுக்கு அந்த 1.5 கோடி ரூபாய் பணம் எங்கிருந்து வந்தது உள்ளிட்ட பல தகவல்கள் கிடைத்துள்ளன.
இந்தியாவின் உச்ச நட்சத்திரமாக திகழும் நடிகர் அமிதாப் பச்சனுக்கு எக்ஸ் லெவல் செக்யூரிட்டி வழங்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

அமிதாப் பச்சன்
பாலிவுட் திரையுலகின் பிதாமகனாக இன்றும் புதிய படங்களில் நடித்து வருகிறார் நடிகர் அமிதாப் பச்சன். அமிதாப் பச்சன் நடிப்பில் செஹ்ரே எனும் புதிய திரைப்படமும் வெளியாகி இருக்கிறது. அமிதாப் பச்சனின் மகன் அபிஷேக் பச்சன் சென்னையில் ஒரு படத்தின் ஷூட்டிங்கில் பிசியாக உள்ளார். மருமகள் ஐஸ்வர்யா ராய் பொன்னியின் செல்வன் படத்தில் நடித்து வருகிறார்.

எக்ஸ் லெவல் பாதுகாப்பு
இந்தியாவின் உச்ச நட்சத்திரமான நடிகர் அமிதாப் பச்சனுக்கு எக்ஸ் லெவல் செக்யூரிட்டை மும்பை போலீசார் அளித்து வருகின்றனர். அவருக்கு எப்போதுமே இரண்டு கான்ஸ்டபிள் பக்கத் துணையாக பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருவார்கள் என்பது தான் அதற்கு அர்த்தம்.

பண மழை
இந்நிலையில், நடிகர் அமிதாப் பச்சனின் பாதுகாவலரான ஜித்தேந்திரா ஷிண்டே பண மழையில் புரள்வதாக வெளியான புகார்களை அடுத்து அவரது வங்கி கணக்கை சோதனை செய்ததில் அவரது வங்கிக் கணக்கில் பல கோடி ரூபாய் இருப்பது கண்டறியப்பட்டது.

1.5 கோடி
ஆண்டுக்கு வருமானமாக அவருக்கு 1.5 கோடி ரூபாயா கிடைக்கிறது என மும்பை போலீசார் அதிர்ச்சி அடைய அவரை உடனடியாக கமிஷனர் ஹேம்ந்த் நக்ராலே உத்தரவின் பேரில் டிபி மார்க் காவல் நிலையத்திற்கு மாற்றப்பட்டு இருக்கிறார். பல ஆண்டுகள் அமிதாப் பச்சனுக்கு பாதுகாவலராக அவர் பணியாற்றி உள்ளார்.

பச்சன் தந்த பணமா
காவலர் ஜித்தேந்திரா ஷிண்டே வங்கி கணக்கில் இருக்கும் பணம் நடிகர் அமிதாப் பச்சன் அவருக்கு கொடுத்த பணமா என்றும் இல்லை வேறு சில நடிகர்கள் அல்லது பெரும் புள்ளிகள் கொடுத்தனரா? என்கிற ரீதியில் போலீசார் சோதனை நடத்தி உள்ளனர்.

இதுதான் விஷயம்
ஆனால், அமிதாப் பச்சன் இந்த விவகாரத்தில் அவருக்கு எந்த பணமும் கொடுக்கவில்லை என்றும் ஷிண்டேவின் மனைவி தனியாக செக்யூரிட்டி ஏஜென்சி நடத்தி பல பிரபலங்களுக்கு பாதுகாவலர்களை அனுப்பி வைத்து சம்பாதித்த பணத்தைத் தான் ஷிண்டே பெயரில் உள்ள வங்கிக் கணக்கில் வைத்துள்ளார் என்பது தெரிய வந்திருக்கிறது.

அதற்கென்ன காரணம்
இது ஒரு பக்கம் இருக்க திடீரென அமிதாப் பச்சனின் பாதுகாவலர் ஜித்தேந்திரா ஷிண்டேவை இதற்காக மாற்றினார்கள் என்றால் அதுவும் இல்லையாம். கடந்த 2015 முதல் அமிதாப் பச்சனுக்கு பாதுகாவலராக அவர் பணியாற்றி வருகிறார். பொதுவாகவே 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை காவலர்களை மாற்றும் வழக்கத்தின் பேரிலேயே ஜித்தேந்திராவை மாற்றி இருப்பதாகவும் போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர்.

சுஷாந்த் காதலி
இயக்குநர் ருமி ஜாஃப்ரி இயக்கத்தில் அமிதாப் பச்சன், இம்ரான் ஹாஸ்மி நடிப்பில் உருவான செஹ்ரே திரைப்படம் இன்று வெளியாகி இருக்கிறது. இதில், சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் காதலி ரியா சக்கரவர்த்தியும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











