அந்த ஒரே காரணத்துக்காகதான் திருமணம் செய்தேன்...ஓபனாக பேசிய ரஜினி பட ஹீரோயின்!

மும்பை: தான் திருமணம் செய்தது ஏன் என்பதற்கான காரணத்தை மனம் திறந்து வெளிப்படையாக கூறியுள்ள பிரபல நடிகையான ராதிகா ஆப்தே.

பாலிவுட் சினிமாவில் டாப் நடிககைகளில் ஒருவராக வலம் வருபவர் ராதிகா ஆப்தே. ராதிகா ஆப்தே தமிழகத்தின் வேலூர் மாவட்டத்தை பூர்விகமாக கொண்டவர்.

தமிழில் நடிகர் ரஜினிக்கு ஜோடியாக கபாலி படத்தில் நடித்தார். இதன் மூலம் தமிழகம் முழுவதும் பிரபலமானார்.

மோனிகா ஓ மை டார்லிங்

மோனிகா ஓ மை டார்லிங்

இதேபோல் தோனி, ஆல் இன் ஆல் அழகு ராஜா உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார் ராதிகா ஆப்தே. இந்தி, தமிழ் மட்டுமின்றி தெலுங்கு படங்களிலும் நடித்து வருகிறார் நடிகை ராதிகா ஆப்தே. தற்போது மோனிகா ஓ மை டார்லிங் என்ற படத்தில் நடித்து வருகிறார் ராதிகா ஆப்தே.

பெனிடிக்ட் டெய்லருடன் திருமணம்

பெனிடிக்ட் டெய்லருடன் திருமணம்

சினிமா மட்டுமின்றி தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், குறும்படங்கள் மற்றும் வெப் சீரிஸ்களிலும் நடித்து வருகிறார் நடிகை ராதிகா ஆப்தே. நடிகை ராதிகா ஆப்தே லண்டனை சேர்ந்த வயலினிஸ்ட் மற்றும் இசையமைப்பாளரான பெனிடிக்ட் டெய்லர் என்பவருடன் லிவிங் டுகெதரில் இருந்தார்.

ஏன் திருமணம் செய்தேன்?

ஏன் திருமணம் செய்தேன்?

பின்னர் 2012ஆம் ஆண்டு இருவரும் பதிவு திருமணம் செய்து கொண்டனர். இந்நிலையில் ஊடகம் ஒன்றுக்கு நடிகை ராதிகா ஆப்தே பேட்டியளித்துள்ளார். அதில் தனது திருமணம் குறித்தும் தான் ஏன் திருமணம் செய்தேன் என்பது குறித்தும் ஓபனாக பேசியுள்ளார்.

திருமண முறைகள் மீது நம்பிக்கையில்லை

திருமண முறைகள் மீது நம்பிக்கையில்லை

அதில் அவர் கூறியிருப்பதாவது, நான் 8 வருடங்களுக்கு முன்பு இங்கிலாந்தை சேர்ந்த பெனட்டிக் டைலர் என்ற இசைக்கலைஞரை திருமணம் செய்து கொண்டேன். ஆனாலும் எனக்கு திருமண முறைகள் மீது நம்பிக்கையே இல்லை. அப்படியென்றால் எதற்காக நீங்கள் திருமணம் செய்து கொண்டீர்கள் என்று என்னை கேட்கலாம்.

விசா வாங்க மட்டும்தான் திருமணம்

விசா வாங்க மட்டும்தான் திருமணம்

நான் விசா வாங்குவதற்காக மட்டும்தான் திருமணம் செய்து கொண்டேன். இங்கிலாந்து இளைஞரை மணந்தாலும் இப்போது நான் இந்தியாவில்தான் இருக்கிறேன். அவ்வப்போது இங்கிலாந்துக்கு சென்று எனது கணவரை சந்தித்துவிட்டு வருகிறேன்.

அதில் உண்மை இல்லை

அதில் உண்மை இல்லை

சினிமாவில் நடிப்பதற்காக எனது கணவரை பிரிந்து நான் தனியாக இருக்கிறேன் என்று தகவல்கள் பரவுகிறது. அதில் உண்மை இல்லை என்ற அவர், வெளிநாட்டை சேர்ந்தவரை திருமணம் செய்தால் விரைவாகவும், எளிதாகவும் விசா கிடைக்கும் என்றனர்.

அவசியம் ஏற்படும் போது சந்திப்பேன்

அவசியம் ஏற்படும் போது சந்திப்பேன்

அந்த காரணத்திற்காகதான் அவரை திருமணம் செய்தேன். அதன்பிறகு எனது வேலையை நான் செய்து கொண்டு இருக்கிறேன். அவசியம் ஏற்படும்போது கணவரை இங்கிலாந்த் சென்று சந்தித்து வருகிறேன். இவ்வாறு நடிகை ராதிகா ஆப்தே தெரிவித்துள்ளார். விசாவுக்காகதான் திருமணம் செய்தேன் என்று ராதிகா ஆப்தே கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X