என்னாது ஷாருக்கான் ‘முஸ்லிம் சூப்பர்ஸ்டாரா’? பிரபலத்தின் கருத்தால் கிளம்பிய பூகம்பம்!

மும்பை: போதைப் பொருள் வழக்கில் ஷாருக்கான் மகன் ஆர்யான் கான் சிக்கியதில் இருந்தே நடிகர் ஷாருக்கான் மிகவும் சங்கடத்தில் ஆழ்ந்துள்ளார்.

இந்நிலையில், மீடியா பிரபலம் ஒருவர் பதிவிட்ட 'Muslim Superstar' கருத்து பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.

நெட்டிசன்கள் 'Muslim Superstar' ஹாஷ்டேக்கை ட்விட்டரில் டிரெண்ட் செய்து அந்த பிரபலத்தின் கருத்தை விளாசி வருகின்றனர்.

மகன் கைது

மகன் கைது

போதைப் பொருள் விவகாரத்தில் சிக்கி நடிகர் ஷாருக்கானின் மகன் ஆர்யான் கான் போதைப் பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டது நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. ஆர்யான் கானுக்கு ஆதரவாக பல பாலிவுட் பிரபலங்கள் சமூக வலைதளங்களில் கருத்துக்களை பதிவிட்டு தங்களின் ஆதரவை வெளிப்படையாக தெரிவித்து வந்தனர்.

சர்ச்சை ட்வீட்

சர்ச்சை ட்வீட்

ஷாருக்கானுக்கும் அவரது மகன் ஆர்யான் கானுக்கும் சப்போர்ட் செய்வது போல மீடியா பிரபலம் அர்ஃபா கனும் ஷெர்வானி (Arfa Khanum Sherwani) போட்ட ட்விட்டர் பதிவு சர்ச்சையை கிளப்பியுள்ளது. அவரது ட்வீட்டில் நடிகர் ஷாருக்கானை 'முஸ்லிம் சூப்பர்ஸ்டார்' என்று குறிப்பிட்டது தான் இந்த சர்ச்சை டிரெண்டிங்கிற்கான காரணம்.

முஸ்லிம் சூப்பர்ஸ்டார்

முஸ்லிம் சூப்பர்ஸ்டார்

பாலிவுட்டை பல ஆண்டுகளாக ஷாருக்கான், சல்மான் கான் மற்றும் அமீர்கான் உள்ளிட்ட மூன்று கான் நடிகர்கள் ஆட்சி செய்து வந்தாலும், ரசிகர்கள் யாரும் அவர்களை முஸ்லிம் சூப்பர்ஸ்டார்களாக பார்த்ததே இல்லை. இந்நிலையில், ஷாருக்கானை முஸ்லிம் சூப்பர்ஸ்டார் என அர்ஃபா கூறியதற்கு எதிராக ட்விட்டரில் 'Muslim Superstar' ஹாஷ்டேக்கை உருவாக்கி ரசிகர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

ஷாருக்கானுக்கே பிடிக்காது

ஷாருக்கானுக்கே பிடிக்காது

மற்றொரு ப்ளூடிக் பிரபலமான ரிச்சா அனிருத் தனது ட்விட்டர் பக்கத்தில், ஷாருக்கானே இந்த முஸ்லிம் சூப்பர்ஸ்டார் பட்டத்தை ஒருபோதும் விரும்பமாட்டார். ஷாருக்கான் அனைத்து இந்தியர்களால் விரும்பப்படும் ஒரு சிறந்த நடிகர். அவரை இப்படி மத ரீதியாக பிரிப்பது திட்டமிட்ட சூழ்ச்சி என்றே தெரிகிறது என ட்வீட் போட்டு விளாசி உள்ளார்.

ரசிகர்கள் ஆதரவு

ரசிகர்கள் ஆதரவு

நடிகர் ஷாருக்கானை முஸ்லிம் சூப்பர்ஸ்டார் என்று மீடியா பிரபலம் சொன்னதற்கு எதிராக ஏகப்பட்ட ரசிகர்களும் பிரபலங்களும் கருத்து தெரிவித்து வருகின்றனர். ஷாருக்கானின் ஹேட்டர்ஸ் இதை பயன்படுத்தி அவருக்கு எதிரான ட்ரோல் மீம்களையும் போட்டுத் தாக்கி வருகின்றனர். ஷாருக்கான் முஸ்லிம் சூப்பர்ஸ்டார் கிடையாது அவர் ஒரு குளோபல் சூப்பர்ஸ்டார் என ரசிகர்கள் தங்களின் ஆதரவை அழுத்தம் திருத்தமாகவும் பதிவிட்டு வருகின்றனர்.

ஜாமீன் கிடைக்குமா

ஜாமீன் கிடைக்குமா

கடந்த வெள்ளிக் கிழமை ஆர்யான் கானுக்கு ஜாமின் மறுக்கப்பட்ட நிலையில், மேலும், ஒரு ஜாமீன் மனு ஷாருக்கான் தரப்பில் தாக்கல் செய்யப்பட்டு இருக்கிறது. நாளை (புதன் கிழமை) அந்த ஜாமீன் மனு விசாரணைக்கு வரவுள்ள நிலையில், ஆர்யான் கானுக்கு ஜாமீன் கிடைக்குமா? என்பதை எதிர்நோக்கி ஷாருக்கான் குடும்பம் மற்றும் அவரது ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X