ராமாயணா முதல் பாகத்தில் யஷ் எவ்வளவு நேரம் வரப்போறாரு தெரியுமா?.. தரமான சம்பவம் வெயிட்டிங்!
மும்பை: அமீர்கானின் தங்கல் படத்தை இயக்கிய பிரபல பாலிவுட் இயக்குநர் நிதிஷ் திவாரி இயக்கத்தில் பிரம்மாண்ட பொருட்செலவில் உருவாகி வரும் ராமாயணா படத்தில் ராமராக ரன்பீர் கபூர் நடித்து வருகிறார். மேலும், சீதையாக நடிகை சாய் பல்லவியும் ஆஞ்சநேயராக பாலிவுட் நடிகர் சன்னி தியோலும் நடித்து வருகின்றனர்.
மெயின் வில்லனான ராவணன் கதாபாத்திரத்தில் கன்னட திரையுலகின் முன்னணி நடிகர் கேஜிஎஃப் ஹீரோ யஷ் நடித்து வருகிறார். ராமாயணா படத்தின் முதல் பாகத் அடுத்த ஆண்டு தீபாவளிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், அதன் 2ம் பாகம் 2027ம் ஆண்டு தீபாவளிக்கு வெளியாகும் என்றும் படக்குழு முன்னதாகவே அறிவித்துள்ளனர். முதல் பாகம் முழுக்கவே யஷ் வருவாரா? என்கிற கேள்வி எழுந்து வந்த நிலையில், அவரது ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தும் வண்ணம் சூப்பரான அப்டேட் கசிந்துள்ளது.
கேஜிஎஃப் ஹீரோ: 2007ம் ஆண்டு கன்னடத்தில் வெளியான ஜம்பட ஹுடுகி படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமான நடிகர் யஷ் தொடர்ந்து பல படங்களில் நடித்து வந்த நிலையில், அவரது 20வது படமாக வெளியான கேஜிஎஃப் படத்தின் மூலம் இந்தியளவில் பிரபலமானார். கேஜிஎஃப் 2 திரைப்படம் 1000 கோடி வசூலை ஈட்டிய நிலையில், பான் இந்தியா ஸ்டாராகவே யஷ் மாறிவிட்டார். அடுத்து அவர் நடிப்பில் டாக்ஸிக் படம் உருவாகி வரும் நிலையில், அடுத்த ஆண்டு சம்மருக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பத்து தல ராவணன்: கீது மோகன் தாஸ் இயக்கத்தில் யஷ், கியாரா அத்வானி, நயன்தாரா உள்ளிட்ட பலர் நடித்து வரும் டாக்ஸிக் திரைப்படம் பாக்ஸ் ஆபீஸில் பெரிய சம்பவம் செய்யும் என எதிர்பார்க்கப்பட்டு வரும் நிலையில், பத்து தல ராவணனாக நிதிஷ் திவாரி இயக்கத்தில் உருவாகும் ராமாயணா படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில், அந்த படத்தின் முதல் பாகத்தில் எவ்வளவு நேரம் யஷ் வருவார் என்கிற தகவல்கள் கசிந்துள்ளன.
முதல் பாகத்திலேயே மாஸ் சம்பவம் இருக்கு: ராமாயணா திரைப்படம் 2 பாகங்களாக உருவாகி வரும் நிலையில், முதல் பாகத்தில் ராவணனை கண்ணிலேயே காட்ட மாட்டர்கள் என்றும் 2வது பாகத்தில் தான் அவர் வருவார் என்றெல்லாம் சில ஊகங்கள் கிளம்பின. இந்நிலையில், முதல் பாகத்தின் இறுதியில் யஷ் 8 முதல் 10 நிமிடங்கள் அதிர விட காத்திருக்கிறார் என்கிற செம சூப்பரான அப்டேட் கிடைத்துள்ளது. ராமாயணா 2ம் பாகம் முழுவதும் யஷ் நடிப்பில் தியேட்டர்கள் அலற போகின்றன என்றும் கூறுகின்றனர்.


Click it and Unblock the Notifications











