Yuzvendra Chahal Divorce: திருமணமாகி 4 வருஷம் தான் ஆகுது.. நடிகையை பிரியப் போகிறாரா கிரிக்கெட் வீரர்
மும்பை: நடிகையும் நடன இயக்குநருமான தனஸ்ரீ வர்மாவை இந்திய கிரிக்கெட் வீரர் யுவேந்திர சகல் விவாகரத்து செய்யப் போகிறாரா என்கிற கேள்விகள் எழுந்துள்ளன. அதற்கு முக்கிய காரணம் திடீரென சோஷியல் மீடியாவில் கிரிக்கெட் வீரர் யுவேந்திர சகல் பார்த்த வேலை தான் என்கின்றனர்.
ஏற்கனவே கடந்த ஆண்டு கிரிக்கெட் வீரர் ஹர்திக் பாண்டியா தனது மனைவி நடாஷா ஸ்டான்கோவிக்கை விவாகரத்து செய்து பிரிந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், பந்து வீச்சாளர் யுவேந்திர சகல் வாழ்க்கையிலும் மிகப்பெரிய விரிசல் விழுந்திருப்பதாக பாலிவுட் வட்டாரங்கள் அதிர்ச்சி தகவலை தெரிவித்துள்ளன.

கிரிக்கெட் வீரர்கள் நடிகைகள் மற்றும் பாலிவுட் பிரபலங்களுடன் காதல் வயப்படுவதும், அவர்களை திருமணம் செய்துக் கொள்வதும் வழக்கமான ஒன்றாக மாறியுள்ளது. இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் விராத் கோலி நடிகை அனுஷ்கா ஷர்மாவை திருமணம் செய்துக் கொண்டது குறிப்பிடத்தக்கது. தோனியின் முன்னாள் காதலியும் ஒரு நடிகை தான் என்றும் கிசுகிசுக்கள் கிளம்பியது குறிப்பிடத்தக்கது.
யுவேந்திர சகல் திருமணம்: இந்திய கிரிக்கெட் அணியின் சுழற்பந்துவீச்சாளரான யுவேந்திர சகல் கடந்த 2020ம் ஆண்டு டிசம்பர் 22ம் தேதி கூர்கானில் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நண்பர்கள் சூழ நடைபெற்றது. யூடியூபர், நடன இயக்குநர் மற்றும் பல் மருத்துவர் என பல பரிமாணங்கள் கொண்ட இன்ஸ்டாகிராம் பிரபலம் தனஸ்ரீ வர்மா என்பவரைத் தான் யுவேந்திர சகல் திருமணம் செய்துக் கொண்டார். இன்ஸ்டாகிராமில் தனஸ்ரீ வர்மாவுக்கு 6 மில்லியனுக்கும் அதிகமான ஃபாலோயர்கள் உள்ளனர். திருமணத்துக்குப் பிறகும் கவர்ச்சியான உடைகளை அணிந்துக் கொண்டு கன்னா பின்னாவென போட்டோக்களை போட்டு வருகிறார் தனஸ்ரீ தத்தா.
மனைவியை விவாகரத்து செய்கிறாரா?: திருமணமாகி சுமார் 4 ஆண்டுகள் மட்டுமே ஆன நிலையில், நாக சைதன்யா மற்றும் சமந்தா 4 ஆண்டுகளில் பிரிந்தது போல கிரிக்கெட் வீரரும் தனது காதல் மனைவியை பிரிகிறாரா என்கிற கேள்வி எழுந்துள்ளது. அதற்கு காரணம், இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது மனைவியின் போட்டோக்களை எல்லாம் திடீரென யுவேந்திர சகல் அதிரடியாக டெலிட் செய்திருப்பது தான் என்கின்றனர். மேலும், தனது மனைவியை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அன்ஃபாலோ செய்துவிட்டார் என்றும் கூறுகின்றனர்.
அறிவிக்கவில்லை: ஆனால், இதுவரை யுவேந்திர சகல் மற்றும் அவரது மனைவி தனஸ்ரீ வர்மா இருவரும் தங்கள் விவாகரத்து பற்றியோ பிரியப்போவதாகவோ அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை.கிரிக்கெட் வீரர் ரிஷப் பண்ட் உடன் தனஸ்ரீ வர்மா நெருக்கமாக பேசியதும் பழகியதும் கடந்த ஆண்டு சர்ச்சையை கிளப்பியது. மேலும், நடன இயக்குநர் ஒருவருடன் தனஸ்ரீ தத்தா நெருக்கமாக பழகி வருவது யுவேந்திர சகலுக்கு பிடிக்கவில்லை என்றும் வீட்டில் சண்டை வெடித்ததாகவும் தகவல்கள் பரவி வருகின்றன. கடந்த சில ஆண்டுகளில் தொடர்ந்து ஏகப்பட்ட பிரபலங்கள் விவாகரத்து செய்து வரும் நிலையில், இந்த ஆண்டு இவர்கள் அந்த டிரெண்டை ஆரம்பித்து வைக்கப் போகிறார்களா என்கிற அச்சமும் எழுந்துள்ளது.


Click it and Unblock the Notifications











