வீடியோவில் தெரிந்த தொப்பை.. கறுப்பு நிறம்.. மறுபிறவி எடுத்திருக்கும் விஜய் பட நடிகர்!

சென்னை: தம் படத்தில் போலீஸ் கெட்டப்பில் வில்லனாக மிரட்டியவர் பின்பு விஜய், சூர்யா, அஜித் படங்களிலும் வில்லனாக மிரட்டினார் ஆஷிஷ் வித்யார்த்தி. பார்க்க டெரர் ஆன முகபாவனைகளை கொண்டிருந்தாலும் பழகி பார்த்தால் வடிவேலு கூறுவது போல் பச்சை மண்ணுப்பா என்பது போல் தெரிகிறார். எந்த டென்சனும் இல்லாமல் இந்த வயதிலும் மனதுக்கு பிடித்ததை செய்து வரும் ஆஷிஷ் வித்யார்த்தி சமீபத்தில் நடந்ததை கூறி ரசிகர்களை பரவசப்படுத்தியிருக்கிறார். சும்மா சொல்லக்கூடாதுங்க ஆளு செம பாசிட்டிவ்தான் என தெரிவிக்கின்றனர்.

தமிழில் வெளியான தில் படத்தில் போலீஸ் கெட்டப்பில் வந்த ஆஷிஷ் வித்யார்த்தி விக்ரமை புரட்டி எடுத்திருப்பார். அசுரத்தனமான வில்லனாக வந்து ரசிகர்களையை மிரளவிட்டார். அதன் பிறகு தம், கில்லி, ஆறு, குருவி உள்ளிட்ட பல படங்களில் நடித்திருக்கிறார். ஆனாலும், கில்லி படத்தில் அவருக்கு மிகப்பெரிய வரவேற்பை கொடுத்தது. இவர் தமிழ், இந்தி, கன்னடம், தெலுங்கு உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் 300க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து முடித்திருக்கிறார். நாடக நடிகராக வாழ்க்கையை தொடங்கி இன்று எல்லோரும் பிரம்மிக்கும் வகையில் மனதிற்கு பிடித்த கதாப்பாத்திரங்களில் நடித்து வருகிறார் ஆஷிஷ் வித்யார்த்தி.

actor-ashish-vidyarthi-congratulated-vijay

2ஆம் திருமணம்: சில நடிகர்களின் திருமணமும் அவர்களது வயது பெரும் சர்ச்சையாக மாறும். ஆனால், ஆஷிஷ் வித்யார்த்தி திருமணம் எல்லோருக்கும் சர்ப்ரைஸான செய்தியாக இருந்தது. அதுவும் 60வயதில் இரண்டாவது திருமணம் என்ற அறிவிப்பை விட அவரது சிரிப்பிற்கே லட்சக்கணக்கில் லைக்ஸ்கள் குவிந்தன. கடந்த 2023ஆம் ஆண்டு அசாம் மாநிலத்தை சேர்ந்த ரூபாலி பருவா என்பவரை திருமணம் செய்துகொண்டார். நண்பர்கள் சூழ எளிய முறையில் திருமணம் நடந்தது முடிந்தது. நீண்ட நாள் காதலித்து வந்த நிலையில், தீர்க்கமான முடிவுக்கு பின்னரே திருமணம் செய்துகொண்டதாக ஆஷிஷ் வித்யார்த்தி தெரிவித்தார். இந்த நாள் என் வாழ்வில் மறக்க முடியாத அனுபவம் என பகிர்ந்தார்.

யூடியூபர்: சினிமா பிரபலங்கள் பலரும் இன்ஸ்டா, முகநூல் பக்கத்தில் ஆக்டிவாக இருந்துகொண்டு பல விளம்பரங்களை செய்து பணம் சம்பாதிப்பார்கள். ஆனால், திரையில் வில்லனாக மிரட்டிய ஆஷிஷ் வித்யார்த்தி அவரது பெயரிலேயே ஒரு யூடியூப் சேனலை தொடங்கி ஊர் ஊராக சுற்றி வருகிறார். பிடித்த உணவு, பிடித்த ஊர் என அனைத்திற்கும் ரிவியூவ் கொடுக்க ஆரம்பித்து விட்டார். இதை பார்த்த ரசிகர்கள் என்னப்பா இந்த மனுஷன் இவ்வளவு ஜாலியா இருக்கிறாரே நாமதான் அவரை தப்பா புரிந்துகொண்டோமோ என கமாண்ட் செய்தனர். அவர் செய்யும் குறும்புத்தனத்தையும் வீடியோவில் வெளியிடுவார். அதுபோன்ற வீடியோக்களும் வைரலாகி வருகிறது. பிறகு பாட்டிற்கு டான்ஸ் ஆடுவது என கலகலப்பாக இருக்கிறார்.

actor-ashish-vidyarthi-congratulated-vijay

வீடியோவில் தொப்பை: விலாக்கிங் தொடங்கி நடிப்பதை காட்டிலும் இதில் பிஸியாக இருக்கும் ஆஷிஷ் வித்யார்த்தி சமீபத்தில் பிரபல தமிழ் நாளிதழுக்கு பேட்டியளித்தார். அதில், சினிமாவில் கேமரா முன்பு நடிப்பதை காட்டிலும் இப்போது நான் நானாக இருக்கவே ஆசைப்படுகிறேன். இதனால் தான் VLOGGING ஐ தொடங்கினேன். ஒருநாள் நான் வீடியோ எடுத்துக்கொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக நீச்சள் குளத்தில் விழுந்து விட்டேன். அப்போது கறுப்பு நிறமும், எனது தொப்பையும் வெளிப்படையாக தெரிந்தது. இதை வீடியோ எடுத்தவர்கள் இதை பதிவேற்ற வேண்டாம் என வற்புறுத்தினார்கள்.

ஆனால், நான் கேட்கவில்லை நான் இப்படி இருப்பது தான் இயல்பாக இருக்கிறது. இதைத்தான் மக்களும் விரும்புவார்கள் என கூறினேன். அந்த முடிவு என்னில் பல மாற்றங்களை கொண்டு வந்திருக்கிறது. அந்த வீடியோவை பதிவிட்டதில் எனக்குள் இருந்த சின்ன தயக்கமும் தவுடுபொடியாக்கிவிட்டது என அவர் தெரிவித்தார். பின்னர், விஜயுடன் நடித்த அனுபவம் குறித்து தெரிவித்த அவர், விஜய் பார்க்கும் போது பெருமையாக இருக்கிறது. அவர் மனதிற்கு பிடித்ததை செய்ய துணிச்சல் இருக்கிறது. அதை நிதானமாக செய்கிறார். அவரது செயலுக்கு எனது பாராட்டுகள் என தெரிவித்தார்.பின்னர், இப்போது எல்லோரும் சோஷியல் மீடியாவை அதிகம் பயன்படுத்துகின்றனர். இதன் மூலம் எனக்கு ஒரு வழி பிறந்திருக்கிறது. உண்மையை சொல்ல வேண்டும் என்றால் சோஷியல் மீடியா எனக்கு மறுபிறவி கொடுத்திருக்கு என்றே கூறலாம் என புன்னகையுடன் தெரிவித்தார்.

FAQs
ஆஷிஷ் வித்யார்த்தி விக்ரமுடன் சேர்ந்து நடித்த படம் எது?

தில்

Filmibeat Entertainment

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X