படத்தை ட்ரோல் செய்தால் சாமி கண்ணை குத்தும்.. சாபம் விட்ட நடிகர்.. இறங்கி அடிக்கும் நெட்டிசன்கள்!
ஹைதராபாத்: தெலுங்கு திரையுலகில் 90களில் சூப்பர் ஸ்டாராக கலக்கிய மோகன் பாபுவின் மகன் விஷ்ணு மஞ்சு நடித்திருக்கும் படம் கண்ணப்பா. இப்படம் பான் இண்டியா அளவில் உருவாகி அடுத்த மாதம் வெளியாக இருக்கிறது. இந்நிலையில், இப்படத்தை யாராவது ட்ரோல் செய்தால் என்ன ஆகும் என்பதே அவர்களுக்கே தெரியாது என்ற அளவிற்கு பிரபல நடிகர் சாபம் விட்டிருக்கிறார். இதனால், சர்ச்சையும் விவாதமும் கிளப்பியிருக்கிறது.
முகேஷ் குமார் சிங் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் கண்ணப்பா. இந்து கடவுளான சிவனை வழிபடும் தீவிர பக்தனான கண்ணப்பரை பற்றிய கதையாக இது உருவாகியுள்ளது. இப்படத்தில் விஷ்ணு மஞ்சு, ப்ரீத்தி முகுந்தன், மோகன் பாபு, சரத்குமார், ராகுல் ராமகிருஷ்ணா, பிரம்மானந்தம் ஆகியோர் நடித்துள்ளனர். இவர்களோடு பிரபாஸ், அக்சய் குமார் மற்றும் காஜல் அகர்வால் ஆகியோர் கெளரவ தோற்றத்தில் நடித்துள்ளனர். சமீபத்தில் இப்படத்தின் டீசர் நல்ல வரவேற்பை பெற்றது. மேலும் பிரபாஸின் தோற்றத்தை பார்த்து மெய்சிலிர்த்து போனதாக விஷ்ணு மஞ்சு தெரிவித்திருக்கிறார்.

இப்படம் ஏப்ரல் 25ஆம் தேதி வெளியாக இருப்பதால் படத்தின் புரோமோஷன் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்திய திரையுலகில் பிரம்மிப்பை ஏற்படுத்தும் என்று திரை பிரபலங்கள் தெரிவிக்கின்றனர். மேலும், இன்றைய காலகட்டத்தில் சாதாரணமாக எடுக்கும் ஸ்டார் படங்கள் கூட பான் இண்டியா படமாக வெளியாவது வாடிக்கையாக இருக்கிறது. இப்படத்தில் இந்தியாவின் ஸ்டார் நடிகர்களும் நடித்திருப்பதால் குறைந்த பட்சம் 100 கோடி வசூலை தொடும் என்ற நம்பிக்கை வைத்திருக்கிறது படக்குழு.
விஷ்ணு மஞ்சு கரியரில் இப்படம் முக்கிய படமாக பார்க்கப்படுகிறது. கடந்த 2 வருடங்களாக இப்படம் எடுக்கப்பட்டு வந்து முடிவுக்கு வந்திருக்கிறது. கடவுளை பற்றிய படங்கள் குறைந்துள்ளதால் அதன் தொடக்கமாக இது இருக்கலாம். மோகன் பாபு பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி வந்த நிலையில், தற்போது அதிலிருந்து மீண்டு தனது மகன் படம் வெற்றி பெறும் முனைப்பில் காத்திருக்கிறார். மோகன் பாபுவும் ஒரு கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கிறார். சூரரை போற்று படத்தில் தெலுங்கராக வந்து சூர்யாவின் பக்கம் நிற்பார்.

சிவன் கண்ணை குத்தும்: தெலுங்கு திரையுலகில் காமெடி, வில்லன், குணச்சித்திர வேடங்களில் 200க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருப்பவர் ரகுபாபு. இன்று கண்ணப்பா படத்தின் கதாப்பாத்திர புரோமோஷன் நிகழ்ச்சியில் இவரும் பங்கேற்றார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், கண்ணப்பா சாமிக்கு நிகரானவர். சிவன் மீது தெய்வீக பற்று கொண்டிருக்கிறார். அவரை பற்றிய கதையாக இது இருக்கிறது. இந்தப் படத்தை யாராவது ட்ரோல் செய்தால் அவர்களுக்கு சிவபெருமானின் முழு கோபத்திற்கும் சாபத்திற்கு ஆளாக நேரிடும் என தெரிவித்தது சர்ச்சையாக மாறியுள்ளது. மேலும் கடவுள் படத்தை அவமதிப்பவர்கள் சாபத்திற்கு ஆளாவார்கள் என்பது போல் பேசியிருக்கிறார்.
ரசிகர்கள் கொந்தளிப்பு: இது என்னங்க குத்தமா போச்சு படம் நன்றாக இருந்தால் ஆதரிப்போம். படம் நன்றாக இல்லையெ்ன்றால் நல்லா இல்லைனு சொல்வோம். இதற்கும் சாமிக்கும் என்ன குத்தம். சாமி, சிவன் என்று சாபம் விடுகிறார் என நெட்டிசன்கள் சரமாரியாக கேள்வி கேட்க தொடங்கிவிட்டனர். ஏற்கனவே சினிமா விமர்சகர்கள் திரையில் படத்தை பார்த்து ட்ரோல் செய்வது வழக்கம். அதற்கு தான் ரகுபாப கூறியிருக்கிறார் என ஆதரவு ஒரு பக்கம் வருகிறது. மற்றொரு பக்கம் எதிர்ப்பு கொடூரமாக கிளம்பியிருக்கிறது. காசு கொடுத்து படம் பார்க்கிறோம். யாரும் வெ்டடியாக வந்து படம் பார்க்கவில்லை. கடவுளை வம்புக்கு இழுப்பது சரியில்லை என நெட்டிசன்கள் கதற தொடங்கிவிட்டனர்.

படம் பார்க்க வேண்டாம்: ஒரு வேலை கண்ணப்பா படத்திற்கு குறுக்கு வழியில் புரோமோஷன் தேடுகின்றனர் என்றும் சிலர் பேசுகின்றனர். நடிகர் ரகுபாபு பேசும் வீடியோக்கள் தான் தற்போது டிரெண்டாகி வருகிறது. நெட்டிசன்கள் அவர் பேசிய வீடியோவை ட்ரோல் செய்து மீம்ஸ்களை அள்ளி தெளிக்கின்றனர். இதுவரை இந்த படத்தை பார்ப்போமோ வேண்டாமா என்ற டபுட்டில் இருந்தோம் ஆனால், தற்போது இப்படி பேசியதற்காக இப்படத்தை புறக்கணிக்கிறோம் என ஒரு குரூப் கிளம்பியிருக்கிறது. முன்னதாக நடிகர் நானி தயாரிப்பில் வெளியான கோர்ட் படத்தின் முன்னோட்ட நிகழ்ச்சியில் பேசிய நானி, கோர்ட் படம் பிடிக்கவில்லையென்றால் ஹிட் 3 படத்தை பார்க்க வேண்டாம் என தெரிவித்து குண்டு ஒன்றை போட்டார்.
ஆனால், அவர் கூறியது போல் கோர்ட் படம் மிகப்பெரிய வெற்றிப்படமாக மாறியது. படத்தின் கதையும் ரசிகர்களை கவர்ந்தது. சிவாஜி, ரோகினி, இளம் நடிகர்களின் நடிப்பும் கவர்ந்தது. படத்தில் எமோஷனல் காட்சிகள் டச்சிங்காகவும் இருந்தது. 3 நாளில் 8 கோடி வசூல் செய்து ஹிட் படமாக மாறியது. தயாரிப்பாளருக்கு நல்ல லாபத்தை ஈட்டியது. ஆனால், அதே பாணியில் ரகுபாபுவை வைத்து பேச வைத்துள்ளனர் என்றும் நெட்டிசன்கள் தெரிவிக்கின்றனர். யாரும் கண்ணப்பா படத்தை ட்ரோல் பண்ணாதீங்க அப்புறம் சாமி கண்ணை குத்திடும் என கோவா படத்தில் வரும் வசனத்தை போன்று ட்ரோல் செய்ய தொடங்கி விட்டனர்.
கடவுள் கேட்டாரா அந்த காட்சி: அவர் பேசியது 45 நொடிகள் தான் ஆனால், நெட்டிசன்கள் இதுதான் சாக்கு என்று கண்டபடி திட்டி வருகின்றனர். யாரும் கடவுளை திட்டவில்லை. கடவுளை வைத்து படம் எடுத்து சம்பாதிக்கும் நீங்கள் கொஞ்சம் மக்கள் பாக்குற மாதிரி படத்தை எடுக்கணும். கடவுள் படத்தில் ஏன்பா கசமுசா காட்சி, கடவுள் கேட்டாரா என நெட்டிசன்கள் திருப்பி அடிக்க ஆரம்பித்துவிட்டனர். அய்யா ரகுபாபு நீங்க சொன்ன வாக்கியத்தை கற்களால் பொறிக்க வேண்டு்ம் எனவும் கடவுளே நேர்ல வந்தாக்கூட இப்படி நடிக்கமாட்டார் எனவும் ட்ரோல் செய்கின்றனர்.

கண்ணப்பா படத்தில் இடம்பெற்ற ரொமான்ஸ் காட்சி கடவுளா கேட்டார் இதற்கெல்லாம் கடவுள் கோபப்படமாட்டாரா என்றும் கேட்க தொடங்கிவிட்டனர். கத்தியை விட்டு ப்ரீத்தி முகுந்தனை ஹீரோ என்ன செய்கிறார் தெரியுமா ரகுபாபு சார் என்றும் கேட்கின்றனர். படத்தின் டீசரையும் தற்போது ட்ரோல் செய்ய தொடங்கிவிட்டனர். இது ஒரு பக்கம் இருந்தாலும், விஷ்ணு மஞ்சுவிற்கு ஆதரவாக பிரபாஸ் ரசிகர்களும் கை கோர்த்து விட்ருங்கப்பா ட்ரோல் செய்ய வேண்டாம், படம் பார்த்துட்டு சொல்லுங்க என ஆதரவாக பேசியுள்ளனர். பிரபாஸ் ரசிகர்கள் கெஞ்சி கேட்டதால் கண்ணப்பா பட நடிகரை மன்னிப்பதாகவும் நெட்டிடசன்கள் தெரிவித்துள்ளனர். மேலும், விவாதம் இனிமேதானாம் என்று் ஒரு குரூப் கிளம்பியிருக்கிறது.


Click it and Unblock the Notifications











