ஷங்கரின் மகள் எடுத்த அதிரடி முடிவு.. பயில்வான் ரங்கநாதன் சொன்ன ஷாக் நியூஸ்!
சென்னை: இயக்குனர் ஷங்கரின் முதல் மகள் ஐஸ்வர்யா ஷங்கருக்கு இரண்டாம் திருமணத்திற்கான நிச்சயதார்த்தம் நடந்து முடிந்துள்ளது. இந்த புகைப்படத்தை அதிதி ஷங்கர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு வாழ்த்து தெரிவித்துள்ள நிலையில், ஐஸ்வர்யா ஷங்கரின் முதல் திருமணம் முறிவுக்கான காரணத்தை பயில்வான் ரங்கநாதன் வீடியோ ஒன்றில் தெரிவித்துள்ளார்.

பிரம்மாண்ட இயக்குநர் என பெயர் எடுத்த ஷங்கர் இயக்கிய அனைத்து படங்களும் பிளாக் பஸ்டர் ஹிட் திரைப்படங்கள். தமிழ் சினிமாவில் எத்தனையோ இயக்குநர்கள் இருந்தாலும், இவருக்கு என்று தனித்துவமான ஒரு ஸ்டைலை வைத்து இருக்கிறார். தற்போது இவர் கமல்ஹாசனை வைத்து இந்தியன் 2 படத்தை இயக்கி வருகிறார். அதே போல, ராம் சரணை வைத்து கேம் சேஞ்சர் படத்தை எடுத்துள்ளார். இவ்விரு திரைப்படங்களும் விரைவில் வெளியாக உள்ளது.
முதல் கணவரை பிரிந்தார்: கடந்த 2022ம் ஆண்டு ஷங்கரின் மூத்த மகள் ஐஸ்வர்யா ஷங்கருக்கும், புதுச்சேரி கிரிக்கெட் அணியின் கேப்டனான ரோஹித்துக்கும் ஆண்டு மகாபலிபுரத்தில் திருமணம் நடைபெற்றது. இவர்களின் திருமணம் கொரோனா காலத்தில் நடைபெற்றதால், நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மட்டுமே கலந்து கொண்டனர். இதனால் சென்னையில் திருமண வரவேற்பு நடத்த ஏற்பாடு செய்யப்பட்டு அழைப்பிதழ் கொடுக்கப்பட்டது. ஆனால், வரவேற்பு நிகழ்ச்சி நடைபெறவில்லை.

இரண்டாம் திருமணம்: இப்போது, ஷங்கர் தனது மகள் ஐஸ்வர்யாவிற்கு இரண்டாவது திருமணத்திற்கான நிச்சயதார்த்தம் நடந்துள்ளது. இந்த புகைப்படத்தை அதிதி ஷங்கர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். மாப்பிள்ளை தருண் கார்த்திகேயன் உதவி இயக்குநர் என்று பதிவிட்டுள்ளார். இந்த திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக அமைய பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
முதல் கணவர் ரோகித்: இந்நிலையில், ஐஸ்வர்யா ஷங்கரின் இரண்டாம் நிச்சயதார்த்தம் குறித்து யூடியூபில் பேசி உள்ள பயில்வான் ரங்கநாதன், புதுச்சேரி கிரிக்கெட் அணியில் ரஞ்சி கோப்பைக்காக விளையாடும் கிரிக்கெட் வீரர் ரோகித் ரொம்ப வசதியான குடும்பம் இவர்களின் திருமணம் மிகவும் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இந்த திருமணத்தில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்.

அதிரடி முடிவு: ரோகித்துடன் வாழமாட்டேன் என்று ஐஸ்வர்யா உறுதியாக சொல்லிவிட்டதால், காதும் காதும் வைத்த மாதிரி இருவருக்கும் விவாகரத்தை பெற்றார் ஷங்கர். தற்போது, ஷங்கர் தனது மகளுக்கு இரண்டாவது திருமணம் செய்வதற்கான வேலையை பார்த்து இருக்கிறார். இவர்களின் நிச்சயதார்த்த போட்டோ தற்போது வெளியாகி இருப்பதாக பயில்வான் அந்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











